பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் மீது பாஜக பாலியல் புகார்!

Share

பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்கும் சரண்ஜித் சிங் சன்னி மீது இப்போதே பாலியல் புகாரை கிளப்பியிருக்கிறது பாஜக ஐ.டி.விங்.

அதுமட்டுமின்றி அவரை கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு உதவுகிறவர் என்றும், இது சோனியாவுக்கும் தெரியும் என்றும் கூறியிருக்கிறார் பாஜகவின் ஐ.டி.விங் தலைவர் அமித் மால்வியா.

இவருக்கு மட்டுமல்ல, இவருடைய மனைவிக்கும் கிறிஸ்தவ மதமாற்றத்தில் பங்கிருப்பதாக கூறியிருக்கிறார்.

இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை மறைக்க, தலித் கிறிஸ்தவர் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது பாஜக.

சரண்ஜித் சிங் பெண் பித்தர் என்றும், இவருக்கு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம் ரஹிம் சாமியாருடன் தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ராம ரஹிமை பின்பற்றிய தலித் சீக்கியர்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதில் தீவிரமாக பங்காற்றுவதாக மால்வியா கூறியிருக்கிறார்.

இந்த புகாருக்கு ஆதரவாக, அவர் ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார். அந்தப் படம் பாஜக வெளியிட்டது என்பதால் போட்டோஷாப்பாக இருக்குமோ என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.

Leave A Reply