முதல்வர் ஸ்டாலினின் படையணி – Athanurchozhan

Share

திராவிட இயக்கத்தின் லட்சியத்தை ஏந்தி முன்செல்லும் தளபதியாக மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். அவருக்கு பக்கபலமாக, கவிஞர் கனிமொழி எம்.பி., ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கர், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஐ.பெரியசமி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் எதிரிகளை லாவகமாக கையாள்கிறார்கள்.

இயக்கத்தின் லட்சியங்களை எள்முனையளவும் விட்டுக்கொடுக்காமல், பதிலடி கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி உரிமை போன்றவற்றிலும், தமிழர்களின் பண்பாடு, வரலாறு ஆகியவற்றை நன்றாக அறிந்தவர்களாக அவர்களுடைய பதிலடி அமைந்திருக்கிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை முன்னெடுப்பதில் இவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.

திராவிட இயக்க வரலாறு அறிந்தவர்களாக, வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறவர்களாக இவர்கள் கடமை யாற்றுகிறார்கள்.

அதேசமயம், ஸ்டாலினின் எண்ணத்தை புரிந்து, எதிரிகளை எதிர்கொண்டு, எதிரணியில் இருப்போரையும் கவரும் வகையில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் செயல்படுகிறார்கள்.

இவர்களுக்கு அடுத்த வரிசையில் டாக்டர் எழிலன் , டி.ஆர்.பி.ராஜா, எழிலரசன், டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் இயக்கத்தின் கோட்பாடுகளை காப்பாற்றும் படைவீரர்களாக இருக்கிறார்கள்.

இதெல்லாம் உதாரணம்தான். இந்த படையணியை இரட்டிப்பாக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சி எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியிலும், கட்சியை நேசிப்போர் மத்தியிலும் நிலவுகிறது.

இளைஞர் அணியைப் போல மகளிர் அணியை தனி அதிகாரம் மிக்க அணியாக திருத்தி அமைக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி அதிகாரத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடை பெற்றுள்ள மகளிருக்கு கட்சியிலும் உரிய பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கெனவே இருக்கிறது.

ஆட்சி நிர்வாகத்தில் யாரும் எதிர்பாராத அளவுக்கு அடித்து ஆடும் முதல்வர், திமுக தலைவராக இன்னொரு விஷயத்தையும் செய்ய வேண்டும். மாவட்டங்களில் திராவிடப் பள்ளிகளை உருவாக்கி, இளம் கொள்கை வாதிகளை ஏராளமாக உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

Leave A Reply