ஹிந்துமதம் பெண்களைப் போற்றுகிறது… நம்புங்கள்! – Dhinakaran ChelliahR

Share
இந்தப் பதிவிற்கும் திரு.ஆ.ராசா மற்றும், திருமா அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பழைய நூல்களில் உள்ளவை இப்போது தேவையா என்கிறவர்கள் இப்பதிவை தவறாமல் வாசிக்கவும். சமத்துவம் விரும்புகிறவர்களும், மனிதநேயம் விரும்புகிறவர்களும், மதம் தாண்டி சிந்திக்கிறவர்களும் கண்டிப்பாக வாசிக்கவும்.
அனைத்தையும் சாதீ ரீதியாக பார்த்தே பழக்கப்பட்டுப் போன சமூகத்தில் வன்கொடுமை மட்டும் பெண்ணுக்கானது என தனித்து எப்படிப் பார்க்க இயலும்?
இதுவரை பட்டியலினப் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளை எதிர்த்து, பட்டியலினத்தவர் அல்லாத எத்தனை பேர் குரல் கொடுத்துள்ளனர் என்பதை அவரவர் மனசாட்சியை கேட்டுக் கொள்ளட்டும்.
உயர்ந்த சாதி, இடை நிலை சாதியர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நிகழ்வதை விட பட்டியலினப் பெண்களுக்கு எதிராக அன்றாடம் நடக்கும் வன்முறைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு என்பதை அரசின் புள்ளி விபரமே தெரிவிக்கிறது.
அரசு அமைப்பான National Crime Records Bureau -2016 மற்றும் 2018 ஆம் ஆண்டு அறிக்கைகள், ஒவ்வொரு 15 (approximately) நிமிடங்களுக்கும் ஒரு பட்டியலின சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார் எனும் புள்ளிவிபரத்தை கூறுகின்றன.
பட்டியலின மக்களுக்கு மட்டும் வன்கொடுமை தொடர்ச்சியாக நிகழ்கிறது? இதை ஏன் இடைநிலை சாதியரும் உயர்சாதியினரும் பேசுவதில்லை? எதிர்ப்பைத் தெரிவிப்பதில்லை?
இதற்கான மூல காரணங்களில் சில, இந்து வைதீக சனாதன நூல்களில் உள்ளது என அறியும் போது அதிர்ச்சியாக உள்ளது.
இந்து வேத வைதீக நூல்கள் அடிப்படையில் எல்லாப் பெண்களும் இழி பிறவிகளே.
இந்த உலகில் பெண்களை விடக் கொடிய பாவமானது வேறு ஒன்றுமில்லை.
அதிலும் சூத்திரப் பெண் என்பவள் ஒரு போகப் பொருளாக மட்டுமே அறியப் படுகிறாள்.
சூத்திரப் பெண்ணுக்கே இந்த நிலை, வர்ணத்திலேயே இல்லாதவர்களின் வீட்டுப் பெண்களின் கதி இன்னும் மோசம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது தொடர்பாக இரு ஆதாரங்களை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.
“அக்னியில் வேள்வி கர்மங்களை செய்யும் வைதீகர்கள் (பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள்) அது முடியம் வரை சூத்திரப் பெண்களை நெருங்குதல் கூடாது. கருப்பு இனத்தவளான அவள் நாய் போன்றவள். காம இச்சைக்குத் தவிர, அவளை வேறு எந்த ஒரு சாஸ்திர சம்பிரதாயங்களிலும் ஈடுபடுத்துதல் ஆகாது!” -வசிஷ்டா சம்ஹிதா(அத் 16)
“One, who had placed the sacred fire, shall never approach a Sudra woman; for she, belonging to the black race, is like a bitch, not for religious rites but for pleasure!” -Vasishtha Samhita (Ch.16)
இனி,மஹாபாரதம்-அநுசாஸனபர்வம் பகுதி – 44- “ஐவகைத் திருமணங்கள்” பகுதியில் உள்ளவற்றைப் பார்ப்போம்…
“ஒரு பிராமணன் மூன்று மனைவிகளைக் கொள்ளலாம். ஒரு க்ஷத்திரியன் இரு மனைவிகளைக் கொள்ளலாம்.
வைசியனைப் பொறுத்தவரையில், அவன் தன் வகையைச் சார்ந்த ஒரு மனைவியைக் கொள்ள வேண்டும். இந்த மனைவிகள் மூலம் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும்.(11)
ஒரு பிராமணன் கொள்ளும் மூன்று மனைவியரில், தன் வகையைச் சார்ந்தவள் {ஒரு பிராமணி} முதன்மையானவளாகக் கருதப்பட வேண்டும்.
அதே போல ஒரு க்ஷத்திரியனுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் இரு மனைவியரில், தன் வகையைச் சார்ந்தவள் {ஒரு க்ஷத்திரியப் பெண்ணே} மேன்மையானவளாகக் கருதப்பட வேண்டும்.
உயர் வகையைச் சார்ந்தவர்கள் மூவரும் {முதல் மூன்று வர்ணத்தாரும்}, (அறத்திற்காக அல்லாமல்) இன்ப காரியங்களுக்காக மட்டும் தாழ்ந்த, அல்லது சூத்திர வகையில் மனைவிகளைக் கொள்ளலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.
எனினும், வேறு சிலர் இந்த நடைமுறையைத் தடை செய்கின்றனர்.(12) சூத்திரப் பெண்களிடம் பிள்ளை பெற்றுக் கொள்ளும் நடைமுறையை நல்லோர் கண்டிக்கின்றனர். ஒரு பிராமணன், ஒரு சூத்திரப் பெண்ணிடம் பிள்ளைகளைப் பெறுவதன் மூலம், ஈடு செய்யக்கூடிய {பரிகாரத்தோடு கூடிய} பாவத்தை ஈட்டுகிறான்.(13)
முப்பது வயதுடைய ஒரு மனிதன், நக்நிகாம் என்றழைக்கப்படும் பத்து வயதுடைய பெண்ணை மணக்கலாம். அல்லது இருபத்தோரு வயதுடைய ஒருவன், ஏழு வயதுடைய ஒரு பெண்ணை மணக்கலாம்.(14)
ஓ! பாரதக் குலத்தின் தலைவா, சகோதரனோ, தந்தையோ இல்லாத ஒரு பெண், தன் தகப்பனுக்குப் புத்ரிகையாகக் கருதப்படலாம் என்பதால், அத்தகையவளை மணந்து கொள்ளக்கூடாது.(15)”
நக்நிகாம்: மேலாடையில்லாதவள்/பெண் இலக்கணங்கள் இல்லாதவள்/ஒரே கோத்திரமுள்ளவள் என அர்த்முள்ளது.
இது, திரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட
“The Mahabharata” ஆங்கில நூலின் தமிழாக்கம்.
Online ல் இந்தப் பகுதியை வாசிக்க விரும்புகிறவர்கள் கீழுள்ள link யைப் பயன்படுத்தவும்.
Note : above extracts taken from
“Vasishtha Samhita” and online version of “Mahabharata Tamil” as mentioned above,nothing on my own.

Leave A Reply