வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்ய முடியாது – ஆதாரபூர்வ விளக்கம்!

Share

வாக்குப்பதிவு எந்திரத்தில் (இவிஎம்) சதி செய்துவிடுவார்களோ என்ற கவலை குறித்து எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்.

இந்த பூத் வேலைக்கு சென்று முதலிலிருந்து முழு ப்ராசெஸை பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.
தேர்தலுக்கு வைக்கப்படும் மிஷின்கள் பேட்டரியால் மட்டுமே இயங்கும் கேல்குலேடர் அளவிற்கான பங்ஷன் மட்டுமே இருக்கும் ஒரு கன்ட்ரோல் யூனிட். அந்த மிஷினில் ப்ளூடூத், வைபை போன்ற எந்த வசதியும் கிடையாது. அப்படி ஒரு வேலை ஏதாவது ஒரு மிஷினில் அப்படி ஒரு வசதி இருக்கிறது என்றால், அதை முதலிலேயே தடுக்காததற்கு, நம் கட்சியின் ஏஜென்ட்டை தான் நாம் மிதிக்க வேண்டும். பல கட்ட டெஸ்டுகள் ஓட்டுக்கு வைப்பதற்கு முன்பு நடக்கும்.

எல்லாரும் சொல்வது சில ஐஐடி பசங்க இவிஎம் மிஷினை ஹேக் பண்ணி காண்பித்து இருக்கிறார்களே என்ற கேள்வியை தொடர்ச்சியாக வைக்கிறார்கள். அவர்கள் டெமோவுக்கு எடுத்து வந்த மிஷினில் அந்த வசதியை வைத்துக் கொண்டு வந்திருப்பார்கள். நான் சொல்வது தேர்தலுக்கு உபயோகிக்கப்படும் மிஷினில் இந்த எந்த வசதியும் இல்லை என்பது தான். உதாரணத்திற்கு இன்று நம் கையில் இன்டர்நெட் வசதியோடு, வைபை, ப்ளூடூத் இருப்பதும் போன் தான். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த நோக்கியா 3310வும் போன் தான் இல்லையா. ஆனால் அந்த நோக்கியா போனில் எந்த வசதியும் கிடையாது. அந்த ஓட்டிங் மிஷினும் அப்படி ஒரு கேல்குலேட்டர் ப்ளாஸ்டிக் டப்பா.

ஸோ ஹேக் எல்லாம் பண்ண முடியாது. அடுத்தது பொட்டியை மாத்தலாம். பட் அதுவும் சீரியல் நம்பர், மிஷின் கவுன்ட் ஸ்லிப் என்று கட்சி ஏஜென்டுகளிடம் சீல் வைப்பதற்கு முன்பு கொடுத்திருப்பார்கள். அந்த செக் எல்லாம் செய்து எல்லாக் கட்சிக்காரர்களும் திருப்தி என்று சொன்ன பிறகு தான் கழற்றப்பட்ட பேட்டரியையே எடுத்து மாட்டுவார்கள். ஸோ அதற்கான வாய்ப்புகளும் குறைவு.

தேர்தல் ஆணையம் யோக்கியமா என்றால் அது மத்திய அரசின் காலை நக்கிக் கொண்டு இருக்கிறது. மாற்றுக் கருத்தில்லை. அவர்கள் ஆளுங்கட்சியின் திருட்டுத்தனங்களுக்கு உடன்படுவார்களா என்றால் நிச்சயம் உடன்படுவார்கள். பட் ப்ராசெஸ் ஸ்ட்ராங்காக இருக்கிறது என்கிறேன்.

அவர்கள் எங்கே ப்ராடுத்தனம் செய்கிறார்கள் என்றால், வாக்கு எண்ணிக்கையின் போது செய்கிறார்கள். அது எதில் செய்கிறார்கள் என்றால் ரொம்ப க்ளோஸாக போகும் தொகுதிகளில் செய்கிறார்கள். அதற்கான களம் அமைய வேண்டும். 2016 தமிழகத் தேர்தலில் செய்தார்கள். குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஒரு 20 தொகுதிகளில் செய்தார்கள். பீகாரில் ஒரு 30 தொகுதிகளில் செய்தார்கள்.

க்ளோஸா இல்லாத தேர்தலை கண்டுக்காம விட்டுடுறாங்க. டெல்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்திஸ்கர் எல்லாம் கண்டுக்காம விட்டுட்டாங்க பாருங்க. இந்த தேர்தலில் கோயம்பத்தூர், போடி மாதிரியான சில தொகுதிகளில் க்ளோஸாக போனால் ப்ராடு பண்ண முயற்சிப்பார்கள். மற்ற தொகுதகளில் எல்லாம் வாய்ப்புகள் இல்லை. இந்தத் தேர்தல் முடிவுகள், பல தொகுதிகளில் வாக்கு சதவிகிதம், இரட்டை இலக்க வித்தியாசத்தோடு தான் இருக்கப் போகிறது என்று நான் நினைக்கிறேன்.

Deenadayalan Jagadeesan

Leave A Reply