நிதியமைச்சர் பிடிஆருக்கு எதிராக அதிகாரிகள் சதி – ஜாக்டோ ஜியோ மாநாட்டுக்கு அவரை செல்லவிடாமல் தடுத்தது யார்?

Share

இந்த தலைப்பு சிலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், முதல்வரைச் சுற்றியுள்ள அதிகாரிகளும், நிதித்துறை அதிகாரிகளும், நிதியமைச்சகத்தை சார்ந்துள்ள அனைத்து துறை அதிகாரிகளும் அமைச்சர் பிடிஆருக்கு ஈடுகொடுக்க முடியாமல் அசிங்கப்பட்டு கிடக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு இந்தச் செய்தியை தொடருங்கள்.

 

100 நல்ல அதிகாரிகள் கிடைப்பார்கள் என்று நினைத்தேன். அவர்களைக் கொண்டு மாநிலத்தின் நிதி நிலையை சரிசெய்துவிடலாம் என்று நம்பினேன். ஆனால், எனது நினைப்பு பொய்யாகிவிட்டது என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்லியிருந்தார்.

 

நிதிநிலையை சரி செய்யும் நோக்கில்தான் அவர் செயல்படுகிறார். ஆனால், முதல்வரைச் சுற்றியுள்ள அதிகாரிகள் உள்பட யாருமே அவருடைய நோக்கத்துக்கு சரிப்பட்டுவரவில்லை. அவர்கள் முதல்வரை திருப்தி படுத்தும் வகையில், அவரை புகழ் வெளிச்சத்தில் மயக்கும் வகையில் ஏதேனும் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

 

ஜாக்டோஜியோ மாநாட்டு தலைவர்கள் முதல்வரைச் சந்திக்க முதல்வரின் அதிகாரிகள் ஏற்பாடு செய்கிறார்கள். பிறகு வெளியே வந்த அவர்கள் பிடிஆருக்கு எதிராகவே பேசுகிறார்கள்.

 

ஜாக்டோ ஜியோ மாநாட்டில், சேகர்பாபுகூட கலந்துகொள்கிறார். ஆனால், மனிதவளத்துறையை கையில் வைத்துள்ள, அனைத்து துறைகளின் நிதிக் கோரிக்கைகளை பரிசீலிக்கக்கூடிய பொறுப்பில் உள்ள பிடிஆர் புறக்கணிக்கப்படுகிறார். இது தற்செயலாக நடந்தது இல்லை என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

முதல்வருக்கு இந்த பின்னணி தெரியுமா என்றுகூட தெரியவில்லை. நடக்கிற விஷயங்களை எல்லாம் பார்க்கையில் இந்த அரசாங்கமே முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

Leave A Reply