டிக்கெட்டில்லா பயணம் கேவலமா? – கோதண்டராமன் சபாபதி

Share

“பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கக்கூட வக்கற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது பேருந்து கட்டணம் இலவசம் என்று அறிவித்திருப்பது” என்று சிலர் பதிவில் பார்த்தேன்.

என்னவோ இத்தனைநாள் தமிழ்நாட்டில் ஏழைகளே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்ததைப்போல பேசுகிறார்கள்.

“அரிசி வாங்க வக்கில்லையா.? சைக்கிள் வாங்க வழியில்லையா?” என்று எல்லா இலவசங்களின்போதும் இந்தக்குரல் எழுத்தான் செய்தன. அதனால் இதைக்கூட கடந்துவிடலாம்.

சிலர் அரசாங்கத்திற்கு வருவாய் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் செலுத்தும் வரியில் மட்டுமே வருவதுபோல் பிதற்றுகிறார்கள்.

“இரண்டாயிரம் ரூபாய் குடும்ப அட்டைக்கு கொடுப்பது இருப்பவனிடம் பிடுங்கி பங்கிட்டுக்கொள்ளும் திருடனின் செயலுக்கு ஒப்பானது.
வரிகட்டுவது நாங்கள் . எங்கள் வரிப்பணத்தை அரசாங்கம் வீணடிக்கிறது” இப்படி சிலர் மத்யமர் பதிவுகளில் புலம்புகிறார்கள்.
ஏழைகள் எல்லாம் வரிகட்டுவதே இல்லை என்பது அவர்கள் நினைப்பு போல.

இலவசங்கள் என்பது மேல்தட்டு மக்களின் வரிப்பணத்தால் மட்டுமே வந்தது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் படித்த முட்டாள்கள்.

ஏழைகள் அன்றாடம் பயண்படுத்தும் எல்லாப்பொருட்களுக்கும் மறைமுக வரி விதிப்பு உண்டு. அரசின் வரிவருவாய் என்பது அதனையும் சேர்த்ததுதான்.

ஐஐடிகளுக்கும் எய்ம்ஸ்களுக்கும் ஒதுக்கப்படும் நிதியில் ஏழைகள் செலுத்தும் மறைமுக வரியும் அடங்கும் எனினும் அதனால் இவர்களுக்கு எந்தப்பலனும் இல்லை.

வரிகட்டும் ஏழைகளுக்கு கிடைக்கும் பலன் இதுபோன்ற இலவசங்கள்தான்.

Leave A Reply