குரலற்றவர்களுக்கு உதவினால், குரல்வளையை நெறிக்கும் மோடி அரசு! – உதயமுகம் தலையங்கம்

Share

மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் யாராக இருந்தாலும் அவர்களுடைய குரல்வளையை நெறிப்பது மத்திய பாஜக அரசின் வாடிக்கையாக இருக்கிறது.

குஜராத்தில் இந்து மதவெறியர்களால் அடித்தும் எரித்தும் கொல்லப்பட்ட 69 பேருக்காக குரல் கொடுத்தவர் டீஸ்ட்டா செதால்வத். அமைதி மற்றும் நீதிக்கான அமைப்பின் செயல்பாட்டாளர்.

இந்தத் தாக்குதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எசான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடுமைக்கு அன்றைய முதலமைச்சராக இிருந்த மோடியும் அதிகாரிகளும்தான் தூண்டுதலாக இருந்தார்கள் என்று ஜாஃப்ரியின் மனைவி சகாரியா வழக்குத் தொடுத்தார். அவருக்கு டீஸ்ட்டா செதால்வத் எல்லா வகையிலும் உதவியாக இருந்தார்.

இந்த வழக்கு இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று, சகாரியாவின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக, சகாரியாவையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் டீஸ்ட்டா செதால்வத் தவறாக வழிகாட்டியதாக உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டியது.

இதையடுத்து, செதால்வத்தை போலீஸார் கைது செய்தனர். நீதிக்காக போராடியதற்காக கைது செய்யப்படுவது இவர் மட்டுமல்ல. அரசுக்கு எதிராக செயல்படும் சிறுபான்மையி னர் மட்டுமல்ல; பெரும்பான்மை பிரிவை சேர்ந்தவர்களையும் சர்வாதிகாரம் விட்டு வைப்பது இல்லை.

இப்படித்தான் பீமா கொரேகான் வழக்கில் ஏராளமான சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் இவர்களுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுகிறது.

இதேபோல ஆட்சிக்கு எதிராக கருத்து சொல்லும் பத்திரிக்கையாளர்கள் உட்பட சுமார் 300 பேரின் அலைபேசிகளை ஹேக் செய்வதற்காக பெகாசஸ் எனும் உளவு மென்பொருள் வாங்கப்பட்டது.

இப்படித்தான், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய பலரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகளான நடாஷா நர்வால், தேவாங்கனா கலிதா ஆகியோரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவி குல்ஃபிஷா பாத்திமாவும் முக்கியமானவர்கள். மோடி அரசாங்கம் மோசமான எதேச்சதிகார பாதையில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த எதேச்சதிகாரம் தடுக்கப்படா விட்டால் எவருக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை.

டீஸ்டா செதால்வத்தின் கைது மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தும் செய்தி

-ஆதனூர் சோழன்

Leave A Reply