ஒரு ஆயிரம் நியாயமார்கள் அணிசேர்ந்தால்…!

Share

இப்போ நான் மீடியாக்களை பீ தின்னும் மீடியாக்கள் என்று சொல்றேன்னு வச்சுக்குங்க…

நாளைக்கு எனக்கு என்ன வந்தாலும் மீடியாக்கள் கண்டுக்காது என்ற பயமே பல மீடியாக்காரனுகளுக்கு இருக்கு…

அதனால, நேர்மையான மீடியா நண்பர்கள்கூட மீடியாக்களின் அருவறுப்பான போக்கை கண்டிக்காமல் விடுகிறார்கள்…

திருமாவே ராமகோபாலனை இந்துக்களின் பாதுகாவலர்னு சொல்றார்… சங்கராச்சாரியை மேதாவி என்கிறார் என்றால் எல்லாமே எதுக்கு என்று என்று நினைக்கிறீர்கள்…

ஆனால், அரசியலில் இதெல்லாம் சகஜம்னு ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்கள்…

மீடியாக்கள் பீ தின்கின்றன… அப்பாவி மக்கள் பக்கம் நிற்க வேண்டிய மீடியாக்கள் கொலைகாரர்கள் பக்கம் நிற்கின்றன…

நாட்டு நலனுக்கான குரலை மறைத்து, நாசகாரக் குரல்களை முழங்குகின்றன என்பதையெல்லாம் சகித்துக்கொண்டு வாழ்வதைக் காட்டிலும் செத்துப் போய்விடலாம் என்பது எனது எண்ணம்…

ஒரு எதிர்க்கட்சித் தலைவரை சாதாரண போலீஸ்காரன் நெஞ்சில் கைவைத்து கீழே தள்ளிவிடுறான்… ஒரு மாநிலங்களவை உறுப்பினரை, மேற்குவங்க ஆளுங்கட்சி எம்.பி.யை சாதாரணமாக தள்ளிவிடுறான்… ஆனால், மீடிாயக்கள் இந்த ஜனநாயக படுகொலையை சாதாரண செய்தியாக்கி கடக்கின்றன..

அதனால்தான் சொல்கிறேன்.. இதெல்லாம் பார்த்துக்கொண்டு இருப்பதற்கு செத்துடலாம் என்று நினைக்கும் ஒரு ஆயிரம் பேர் துணிச்சலாக அணிசேர்ந்தால் உண்டு இல்லையென்று ஆக்கிவிடலாம்…

ஆனால், எல்லோருக்கும் தனிப்பட்ட கடமைகள் இருக்கின்றனவே…

தங்களுடைய கடமைகளை முடித்தவர்கள், தங்களுக்கென்று கடமைகள் இல்லையென்று கருதுகிறவர்கள் ஏன் அணி சேரக்கூடாது…?

Leave A Reply