தலைமைச் செயலாளர் இறையன்புவின் தலைமைப் பண்பு – கிள்ளை ரவீந்திரன்!

Share

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் ஒரு தமிழரான இறையன்பு ஐஏஎஸ்….

நான் கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவராக இருக்கும்போது, தமிழக அரசின் சுற்றுலாத் துறை செயலாளராக இருந்தார்..

அப்போது வனத்துறைக்கும், சுற்றுலாத்துறைக்குமான ஈகோ போராட்டம் துவங்கிய நேரம் அது,சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சொந்தமான கட்டிடம் இருந்த இடம், வனத்துறைக்கு சொந்தமானது. இதில் ஏற்பட்ட பிரச்சனையில் உள்ளாட்சி நிர்வாகம், சுற்றுலாத்துறை, வனத்துறை, சார்ந்த அந்த சுற்றுலா வளாகம்…

அப்போது வனசரகராக இருந்த வெங்கடேசன் என்பவர் மாவட்ட வன அலுவலர் ஆக இருந்த இக்கிராம் ஷா என்பவரின் பேச்சை கேட்டுக்கொண்டு, சுற்றுலாத்துறையின் உரிமத்தை புதுபிக்காமல் ரத்து செய்துவிட்டார்…

எனவே, சுற்றுலா துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகளை வனத்துறை கையகப்படுத்தி விட்டது, இந்த செய்தியை என்னிடம் சுற்றுலாத் துறை மேலாளர் வந்து தெரிவித்தார், நான் ரேஞ்சர் வெங்கடேசன் அவர்களிடம் பேசியபோது,

“சார், உங்களால் ஒன்றும் செய்யமுடியாது, இந்தக் கட்டிடம் இனி எங்களுக்கு சொந்தமானது” என்று அதிகார தோணியில் பேசினார்..

நான் உடனே எங்கள் செயல் அலுவலர் மூலம் அங்கு அந்த Cottage க்கு, செல்லக்கூடிய குடிநீர் இணைப்பையும், மின் இணைப்பையும், துண்டித்து விட்டேன், காரணம் அது பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்க கூடியது…

இப்படியாக, பிரச்சனை தொடர வனசரகரை தாக்கியதாக என் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது, என் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது…

அடுத்த நிமிடமே வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளரும், புகார் கொடுத்த ரேஞ்சரும் மாற்றம் செய்யப்பட்டனர்..

காரணம், வழக்குப் பதிவு செய்யப்பட்ட மறுநாள் 2,000 பேர் திரண்டு சாலையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள் என்ற செய்தி அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கலைஞருக்கு சொல்லப்பட்டதுதான்…

உடனடியாக வனத்துறை அமைச்சராக இருந்த திரு செல்வராஜ் அவர்களை அனுப்பி பிரச்சனையை பேச சொன்னார் தமிழக முதல்வர், நானோ என் மீது வழக்கு போட்டதால் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கடலூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கி இருந்தேன், அப்போது எனக்கு செல்போனில் ஒருவர் பேசுகிறார்..

ஹலோ, நான் எஞ்சினியர் செல்வராஜ் பேசுறேன்..

சொல்லுங்க, எந்த இன்ஜினியர்?

தம்பி..

நான் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் பேசுறேன்…

அண்ணே வணக்கம்!

சொல்லுங்க..

தம்பி எங்க இருக்கீங்க கடலூரில் இருக்கேன்னே.

உங்க ஊருக்குதான் வரேன் உடனே வாங்க…

சரி அண்ணே..

பிரச்சனைகள் பேசப்பட்டது தீர்வு எட்டப்பட்டது செய்தியை சொல்வதற்காக சென்னை சுற்றுலா துறை செயலாளராக இருந்த இறையன்பு ஐஏஎஸ் அவர்களிடம் தகவலை தெரிவித்த பிறகு,

மறுநாள் அவர் நேரடியாக கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வருகை தந்தார், அப்போது அவரிடம் நான் நேரடியாக கோரிக்கை வைத்தேன்..

சார், ரோவிங் போட்டு தான் இங்கே இருக்கிறது,துடுப்பு படகில் ஒரு மணி நேரம் பயணம் செய்யும்போது, போட் ஓட்டுனர்களுக்கு, நாக்குத் தள்ளி விடுகிறது.. வியர்த்துக் கொட்டுகிறது..

எப்படியாவது மோட்டார் போட் ஏற்பாடு செய்யுங்க சார்…

அடுத்த கணமே தொலைபேசியில் பேசுகிறார்,ஒரு உயர் அதிகாரிக்கு.. முட்டுகாட்டிலிருந்து 4 மோட்டார் படகுகள் லாரியில் பிச்சாவரத்திற்கு வந்து சேர்ந்தது…

இதுதான் இன்றைக்கு பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மோட்டார் படகுகள் பயணிகள் அனுபவிப்பதற்கான காரணம்!

இதை செய்து கொடுத்தவர் இறையன்பு ஐஏஎஸ், தலைமை செயலாளர் மட்டுமல்ல..

தமிழகத்தின் தலைசிறந்த நிர்வாகி மட்டுமல்ல…

தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர் மட்டும் அல்ல…

பேச்சாளர், அறிவாளி, எல்லாவற்றையும் விட தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதியாரின் சிந்தனையை செயலாக்குபவர்!

வாழ்த்துக்கள் சார்

Leave A Reply