மு.க. அழகிரியை பிடிக்கத்தான் அமித்ஷா வர்றாரா?

Share

அமித்ஷா 21 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வர்றார் என்றதும் எல்லோரும் பயந்து நடுங்குவதாக பாஜக தலைவராக இருக்கும் முருகன் சொல்லியிருக்கிறார். பாவம், அவருடைய முன்னோர் பாப்பான்களை பார்த்து பயந்து நடுங்கியதை மறந்துட்டு பேசுறார். அவரை விட்டுருவோம்.

 

அமித்ஷாவை பார்த்து ஏன் பயப்படனும்? பாம்பைப் பார்த்து பயப்படனும். பேய் பிசாசை பார்த்து பயப்படனும். கொடூரமான விலங்குகளை பார்த்து பயப்படனும். இவரு நம்மைப் போல ஒரு மனுஷன்தானே. இவரைப் பார்த்து ஏன் பயப்படனும். ஓ, மனுஷனை பிடிச்சு சாப்பிடும் காட்டுமிராண்டியா இருப்பாரோ?

 

அட, அந்த அளவுக்கெல்லாம் போகவேணாமுங்க. எலெக்சன் நேரத்துல வர்றாருல. அதான் பயப்படச் சொல்றாங்க போல. அதாவது, எந்தெந்தக் கட்சியிலெல்லாம் ஊழல் பேர்வழிகள் என்று யாரையெல்லாம் பாஜக இதுவரை சொல்லுச்சோ, அவுங்களையெல்லாம் தனது கட்சிக்கு இழுத்து, அவுங்களுக்கு புனிதநீர் தெளிச்சு, அவுங்களை நல்லவுங்களா மாத்தப் போறாரு போல.

 

அதாவது இவரு பாத்து சொன்னா கெட்டவுங்க நல்லவுங்களாவும், நல்லவுங்க கெட்டவுங்களாகவும் மாறிருவாங்க. அதாவது, பாஜகவுக்கு எதிரான யாரையும் கெட்டவுங்களா மாத்துற வல்லமை இவருக்கு இருக்கு என்று சொல்ல வர்றாங்க போல…

 

அவரு வர்றாரு என்றால் எத்தனை பேரை இதுவரைக்கும் புடிச்சு வச்சிருக்காங்களோ தெரியலை. நமக்குத் தெரிஞ்சு 20 ஆம் தேதி மு.க.அழகிரி 20 ஆம் தேதி தனது ஆதரவாளர்களை சந்திக்கப் போறதா சொல்லிருக்காரு. அவருடைய ஆதரவாளர்கள் எத்தனைபேர் இப்பவும் அவரோட இருக்காங்கனு தெரியலை.

 

அனேகமா அவரு தனிக் கட்சி தொடங்கலாம்னும், கலைஞர் திமுகனு பேர் வைக்கலாம்னும் சொல்றாங்க. மதுரையிலும் தென் மாவட்டங்களிலும் அண்ணனும் அவருடைய குடும்பத்தினரும் நடத்திய லூட்டிகளை இன்னமும் மக்கள் மறக்கலை. பண அரசியலையும் பிண அரசியலையும் நடத்திய அண்ணனை தூற்றாத கட்சிகள் இல்லை. ஆனால், அவர் கட்சி ஆரம்பித்தால் அவரை திமுகவுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக, அவருக்கும் புனித நீர் தெளிச்சுவிட அமித்ஷா வர்றாரோ என்ற சந்தேகம் ஒருபக்கம் எழுந்திருக்கு.

 

அப்புறம், இன்னொரு பக்கம் பவர் ஸ்டார் வேற கட்சி ஆரம்பிக்கப் போறதா மிரட்டியிருக்காரு. அவர் மேலயும் ஏராளமான மோசடிப் புகார்கள் இருக்கு. அவர் என்னடானா, தான் ஆரம்பிக்கப் போற கட்சி ரஜினிக்கோ, கமலுக்கோ ஆதரவா இருக்காதுனு வேற சொல்லிருக்காரு. ஆக, அமித்ஷா பவர் ஸ்டாரையும் திமுகவுக்கு எதிரா பவர்புல்லா இறக்குவாருனு எதிர்பார்க்கலாம்.

 

இன்னொரு பக்கம், அரசியலுக்கு வர்றேனு சொல்லியே அல்வாக் கொடுத்த ரஜினிக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்கவும் அமித்ஷா வருவதாக சொல்கிறார்கள். தன் மீதான ரெய்டுகளில் இருந்து தப்பிக்க அவ்வப்போது, பாஜகவுக்கும் மோடிக்கும் சொம்படித்த ரஜினி, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, அரசியலுக்கு வர இயலாத நிலையை தெரிவித்திருந்தார். அமித்ஷா இனி வரமாட்டார்னு நெனச்சே ரஜினி அப்படி கூறியதாக தெரிகிறது. ஆனால், தனது இருப்பை வெளிப்படுத்தவே அமித்ஷா தமிழகம் வருவதாகவும், கசாயம் ஸாரி சகாயம் மாதிரி ஒருவரை ஆதரிச்சு ரஜினி அறிக்கை விடனும் என்று ரஜினியை மிரட்டுவார் என்றும் இன்னொரு பக்கம் கூறப்படுகிறது.

 

இதையெல்லாம்விட உச்சபட்சமாக, தமிழகத்தில் தனது வேல்யாத்திரையை முதல்வர் எடப்பாடி தடுத்துவிட்டதாகவும், அதுகூட பரவாயில்லை, அண்ணா பரல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சங்கி சூரப்பாவுக்கு எதிராக அதிமுக அரசு விசாரணை கமிஷன் அமைத்திருப்பதாகவும் இதையடுத்து, அதிமுக அரசுக்கு மத்திய அரசுமீதான பயம் போய்விட்டதாகவும் அமித்ஷாவிடம் முருகன் புகார் செய்தார். அவருடைய புகாரைத் தொடர்ந்தே அமித்ஷா தமிழகம் வருவதாகவும், சூரப்பா மீதான விசாரணைக் கமிஷன் உத்தரவு வாபஸ்பெறப்படும் என்றும், வேல்யாத்திரைக்கு அனுமதி கொடுக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் சொல்கின்றன.

Leave A Reply