அன்பில் மகேஷ் ஆர்எஸ்எஸ் ஸ்லீப்பர் செல்லா?

Share

கோவில்களுக்கு செல்லும்போது நாமெல்லாம் சாதாரணமாக உடையணிந்து செல்வோம். ஆனால், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டையை கழற்றிவிட்டு வெற்றுடம்புடன் செல்கிறார். இது நமது கலாச்சாரம் இல்லை. ஆனால், அவர் யாரை திருப்திப்படுத்த அப்படி செய்கிறார் என்று தெரியவில்லை.

இதையெல்லாம் முதல்வர் தளபதியின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. இந்நிலையில்தான், மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, கல்வியாளர்களும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் இல்லம்தேடி கல்வி என்ற திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறார்.

இது பாஜக அரசின் புதிய கல்வித்திட்டத்தில் உள்ள அம்சமாகும். ஆர்எஸ்எஸ் ஆட்கள் இந்தத் திட்டத்தில் ஊடுருவி மதக்கல்வியை புகுத்த வாய்ப்பு உண்டு என்பதால் புதிய கல்வித் திட்டத்தை ஏற்பதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அப்படி இருந்தும் ஏன் அன்பில் மகேஷ் இதில் உறுதியாக இருக்கிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இதுவரை 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பணியாற்ற விரும்புவதாகவும், ஒன்றரை லட்சம்பேர் தேவை எனவும் அவர் கூறியிருக்கிறார். இந்த ஆட்களை எப்படி இவர் தேர்வு செய்வார்? அவர்களுடைய பின்னணியை எப்படி அறிவார்? என்பதெல்லாம் தெரியவில்லை.

ஆனால், ஒன்று பட்டதாரி ஆசிரியர்கள் சங்கமும், ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் எதிர்ப்பு தெரிவித்தபிறகும் இதை மகேஷ் நிறைவேற்ற முனைந்தால், நிச்சமாக அவரை ஆர்எஸ்எஸ் ஸ்லீப்பர் செல் என்றுதான் கருத வேண்டியிருக்கும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.

Leave A Reply