ரஜினிகாந்த் பாஜக பினாமியா? மாநில தலைவர் முருகன் பதில்

Share

நடிகர் ரஜினிகாந்த்பாஜகவின் பி டீம் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் தனது அரசியல் கட்சியைத் துவக்க இருக்கிறார். தற்போது கட்சி ஆரம்பிப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் நியமனம் செய்தார். இந்த அர்ஜுன மூர்த்தி பாஜகவின் அறிவுஜீவிகள் பிரிவின் தலைவராக இருந்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பாஜகவிலிருந்து ஒருவரை தனது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமித்ததற்கு ரஜினிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

அதாவது இத்தனை வருடங்களாக மன்றத்தை வழிநடத்துபவர்களில் ஒருவருக்குக் கூடவா கட்சியை வழிநடத்தத் தகுதியில்லை என்ற கேள்வியை முன்வைத்தவர்கள், இதிலிருந்தே பாஜகவின் மற்றொரு குரலாகவே ரஜினி ஒலிப்பார் எனத் தெரிகிறதென்று குற்றம்சாட்டினர். அத்துடன், பாஜக நிர்ப்பந்தத்தின் பேரில்தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்ததாகவும் கூறினர்.

இந்த நிலையில் மதுரையில் நேற்று (டிசம்பர் 8) செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “ஜனநாயக முறைப்படி ரஜினி கட்சி துவங்க உள்ளார்.

ரஜினி தனது சொந்த விருப்பப்படி கட்சி துவங்க உள்ள நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியின் பி டீம் என எப்படி சொல்ல முடியும்” என்று கேள்வி எழுப்பினார். ரஜினியுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, அதனை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யுமெனவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் வேலை நிறுத்தம் தோல்வியடைந்துவிட்டதாகவும் கூறிய முருகன், “பல இடங்களில் திமுகவினர், வியாபாரிகளை மிரட்டி கடைகளை மூடச் சொல்லியிருக்கிறார்கள்.

வேளாண் சட்டங்களால் பாஜகவுக்கு பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் விவசாயிகளை திசை திருப்பி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்” என்றும் குற்றம்சாட்டினார்.

18 Comments

  1. If we rely on scientific certainty or irrefutable proof that we should eat this or that, we could be waiting until half past never. Bunny Jeffie Grunenwald

Leave A Reply