ஜெயலலிதாவின் மானம் காத்த அதிமுக நிர்வாகிகள் – ஆதனூர்சோழன்

Share

சசிகலா கூட்டத்தினர் ஜெயலலிதாவை இரக்கமே இல்லாமல் கொன்றுவிட்டார்கள் என்றும், ஜெயலலிதாவால் வாழ்க்கை பெற்ற ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் சசிகலாவின் சதியை கண்டும் காணாமல் இருந்து துரோகம் செய்துவிட்டார்கள் என்றும் இப்போது குற்றம் சாட்டுகிறார்கள்.

இது எந்த வகையிலும் அடிப்படையற்ற குற்றச்சாட்டு ஆகும். கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்த அந்த சில நாட்களிலேயே அவருடைய உடல்நிலை மர்மம் அம்பலமாகியது.

உடனே பார்ப்பன லாபி பதறியது. ஜெயலலிதாவை உடனடியாக சிறையிலிருந்து வெளியேற்ற அது வேலை செய்தது. குன்ஹா தீர்ப்பின் பலம் அறிந்த அந்த பார்ப்பன லாபி, குமாரசாமியை பயன்படுத்தி ஒரே வரியில் விடுதலை செய்ய வைத்தது.

ஆனால், குமாரசாமியின் கணக்கு தப்பாகிவிட்டது. அவருடைய கணக்கை வைத்தே உச்சநீதிமன்றத்தில் அப்பீல் போனார்கள். அப்போதே ஜெயாவின் தண்டனை உறுதி செய்யப்படும் என்று நிபுணர்கள் சொல்லி விட்டார்கள்.

ஜாமீனில் வெளிவந்திருந்த ஜெயலலிதாவை மத்திய நிதியமைச்சரும், பிரதமரும் வந்து சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பின்போதே எல்லாவற்றையும் இறுதி செய்யும்படியும், கவுரவமாக முடிவைத் தேடிக்கொள்ளவும் யோசனை கூறப்பட்டிருக்கலாம்.

கர்நாடக நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அப்பீலை உடனே விசாரித்து, உடனே தீர்ப்பு வெளியிடப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் அப்பீலை மெதுவாக விசாரித்தார்கள். விசாரணை முடிவில் தீர்ப்பை வெளியிடாமல் அதுவும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்கள்.

தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு, கணக்கு வழக்குகளை முடிக்கும் நிலையில் ஜெயலலிதா இருந்தார். இந்தச் சமயத்தில்தான் சசிகலா புஷ்பா போயஸ் தோட்டத்துக்கு வரவழைக்கப்பட்டு விவகாரமானது. ஜெயலலிதாவை எதிர்த்து சசிகலா பேசினார். அதிமுகவில் கட்சித் தலைமையை எதிர்த்து பேசும் துணிச்சல் யாருக்கும் வராது.

சசிகலாவின் துணிச்சலுக்கு காரணம், ஜெயலலிதாவின் இயலாமையை நேரில் பார்த்துவிட்டார் என்பதுதான்.

கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை கட்சிக்காரர்கள் அனைவருக்குமே தெரிந்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை உறுதி என்பதும் புரிந்துவிட்டது. இந்நிலையில்தான், ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் மெலிந்து நலிந்து சீர்கெட்ட நிலையில் ஜெயலலிதாவை மக்களுக்கு காட்ட விரும்பாமல்தான் மருத்துவமனையில் வைத்திருந்தார்கள்.

ஜெயலலிதா கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருந்தார். அப்போதும் அவருடைய புகழுக்கோ, பெருமைக்கோ கொஞ்சமும் சரிவு ஏற்பட்டுவிடாமல், அரசு மரியாதையுடன் அவரை அடக்கம் செய்வதில் ஒற்றுமையுடன், ராணுவக் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டார்கள்.

முதலமைச்சராக, அரசு மரியாதையுடன் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டார். இடையில் எத்தனையோ குழப்பங்கள் நடந்திருக்கலாம். ஆனால், சிறையில் அடைக்கப்பட்டு கேவலப்பட்டு, சின்னாபின்னப்பட்டு சாகும் நிலையிலிருந்து தங்கள் தலைவியை பாதுகாப்பதில் அதிமுக தலைவர்கள் வெற்றி பெற்றார்கள்.

ஆனால், ஜெயலலிதாவின் அத்தனை பெருமைகளையும் சீர்குலைத்தது ஓ.பன்னீர் செல்வம்தான். அவரை முதல்வராக நீடிக்கச் செய்திருந்தால் அவரும் பொத்திக்கொண்டு சும்மா இருந்திருப்பார்.

ஜெயலலிதாவின் மரணம் இந்த அளவுக்கு சந்தி சிரிப்பதற்கு முதன்மையான துரோகி ஓ.பன்னீர்செல்வம்தான். இது அதிமுகவினருக்கு நன்றாகவே தெரியும்.

Leave A Reply