காவியத்தலைவர் கலைஞர்! – கி.பிரியாராம்

Share

கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?

காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.

இவரிடம் என்ன சிறப்பு?

Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற  உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.

1957 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக  சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட #கலைஞர்.

சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம் …..

1959 தஞ்சையில் #காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

காமராஜர்  தலைமையில் தஞ்சை காங்கிரஸ்தளகர்த்தா  பெரும்செல்வந்தர் #பரிசுத்தநாடார் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்….கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் #திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார்கள் இறுதியில் மைக் பிடித்த பரிசுத்த நாடார் திமுகவை காட்டிலும் #கலைஞரை கடுமையாக விமர்சித்தார்….

“தஞ்சை மண்டலத்தில் பிறந்த கருணாநிதி இந்தப் பகுதியில் போட்டியிடாமல் திருச்சிக்கு அப்பால் குளித்தலையில் போட்டியிடுவது ஏன் இங்கு நின்றால் தோற்று விடுவோம் என்ற பயம் தான் காரணம்”…. “நான் ஒரு சவால் விடுகிறேன் இந்தத் தஞ்சை மண்டலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால் நான் அரசியலை விட்டே ஒதுங்கி கொள்கிறேன்” என்று வார்த்தைமழை விடுகிறார்… இதெல்லாம் மறுநாள் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக வெளிவந்ததை படித்துப் பார்த்த கலைஞர்  எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காக்கிறார்…..

காலங்கள் உருண்டோடுகிறது மீண்டும்1962 சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது  திமுகவினர் சென்றமுறை போட்டியிட்டவர்கள் அனைவரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட #அண்ணா பட்டியல் தயாரிக்கிறார்.

இதனை அறிந்த #கலைஞர் அண்ணாவிடம் சென்று “நான் இந்த முறை குளித்தலையில் போட்டியிடவில்லை  #தஞ்சாவூரில்  போட்டியிட போகிறேன்” என்று கூறுகிறார்…. அதிர்ச்சியான அண்ணா  “தஞ்சையில் பரிசுத்த நாடார் அல்லவா போட்டியிடுகிறார் அவரை எதிர்த்து உன்னால் வெற்றி பெற முடியுமா” என்று கேட்கிறார்….

“இல்லை அண்ணா நான் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று உள்ளது அதற்கு சரியான களம்தான் இந்த தஞ்சை களம்… இந்த தஞ்சை மண்டலத்தில் இந்த கருணாநிதி எத்தகையவன் என்பதை நிரூபித்து காட்ட ஒரு சந்தர்ப்பம் எனவே எனக்கு தஞ்சையை தாருங்கள்” என்று வேண்டி விரும்பி #தஞ்சையில் போட்டி இடுகிறார்

கலைஞர்.

தேர்தல்நாள் நெருங்க நெருங்க சூறாவளி பிரச்சாரம் செய்கிறார் கலைஞர்.

#ஆசைத்தம்பி,  #ஏ_கோவிந்தசாமி #விருத்தாச்சலம் செல்வராஜ்  #மா.ப.சாரதி  #களம்பூர்அண்ணாமலை #நடிகர் ஆனந்தன் #அன்பில்தர்மலிங்கம் #மன்னைநாராயணசாமி #பிஎஸ்சந்தானம் #இசப்பன் என திமுகவின் மற்ற தொகுதி வேட்பாளர்களும் கலைஞருக்காக பிரச்சாரம் செய்துவிட்டு போகிறார்கள்…..

எதிர் முகாமில் உள்ள #பரிசுத்தநாடார் அன்றைய காங்கிரஸ் பெருந்தலைகள் அனைவரையும் பிரச்சார களத்தில் இறக்கி விடுகிறார் தனக்கு சொந்தமான 45 பேருந்துகளில் தொண்டர்களை அழைத்துக்கொண்டு தொகுதி முழுவதும் அணிவகுப்பு நடத்திக் காட்டுகிறார்.

தொகுதி முழுவதும் #பரிசுத்த நாடாரின் பண மழை பொழிந்ததால் பரிசுத்த நாடாரே  வெற்றி பெறுவார் என கணிப்புகள் தெரிவித்தன.

எதைப் பற்றியும் கவலை கொள்ளாத கலைஞர் தன் பிரச்சாரத்தை டாப் கியரில் உயர்த்தினார். ஆம் வீடு வீடாகச் சென்று தெருத்தெருவாக சென்று ஊர் ஊராகச் சென்று ஒவ்வொரு மனிதராக கைகுலுக்கி திமுகவிற்கு ஓட்டு கேட்டார்.

ஏற்கனவே குளித்தலை எம்எல்ஏவாக இருந்து தான் செய்த பணிகளை துண்டு பிரசுரமாக வீடுவீடாக வழங்கினார். அவருக்கு துணையாக பரப்புரையில் கேடிஎம் பஸ் நிறுவன ஊழியர்கள் உதவினர்.

தேர்தலும் நல்ல முறையில் முடிந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஓட்டுக்களும் எண்ணப்பட்டன…

#தஞ்சை தொகுதியை கொஞ்சம் சென்சிட்டிவான தொகுதியாக அறிவித்திருந்த தேர்தல் கமிஷன் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் #மத்தியபடைகளை கொஞ்சம் கூடுதலாக இறக்கிவிட்டு இருந்தது….ஆம் அன்றைய கருத்துக்கணிப்புகள் அத்தனையும் தவிடுபொடியாக்கி #கலைஞரே வெற்றி பெற்றார்.

#பரிசுத்தநாடார் தோல்வியா?” செய்தியைக் கேட்ட #முதலமைச்சர்காமராஜரே சற்று அதிர்ந்து போய்விட்டார்…ஏன் #அண்ணாவே சற்று ஆடிப்போய் விட்டார்.

“போர்க்களத்தில் ஒரு வீரன் எப்படிப் போர் புரிய வேண்டும் என்பதை நமக்கெல்லாம் பாடமே நடத்திக் காட்டிவிட்டான் என் தம்பி கருணாநிதி” என்று தஞ்சை வெற்றியை அண்ணா கலைஞருக்கு புகழ்மாலை சூட்டினார்.

காங்கிரசின் பெருந்தலைகள் கலைஞரின் #பாய்ச்சல் எத்தகையது என்பதை ஏற்கனவே #குளித்தலையில் உணர்ந்து கொண்டாலும் #தஞ்சையில் அவரது வெற்றி இன்னும் கொஞ்சம் கூடுதலாக அசரடித்தது…. அதன் எதிரொலியாக #டெல்லிதலைமையே அவர்களை கடிந்து கொண்டது.

இந்தத் தேர்தல் வெற்றியை #முரசொலியில் குறிப்பிட்ட கலைஞர் “தஞ்சையில் தி.மு.க வெற்றி பெற்றுவிட்டால் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று பரிசுத்த நாடார் கூறியிருந்தார்…”இதோ இந்த கடிதத்தின் வாயிலாக நான் கேட்டுக் கொள்ளுகிறேன் அவர் அரசியலில் இருந்து விலகத் தேவையில்லை எப்போதும்போல் இதுபோன்ற சவால்களை எங்களுக்கு விடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நாங்கள் இன்னும் வேகத்தோடு பணியாற்ற முடியும்” என்று நச்சென்று மூன்றே வரிகளில் முடித்துக் கொண்டார் கலைஞர்..#கலைஞர் என்றால்  சும்மாவா.

காமராஜர், அண்ணா இருவரும் தலைமைப் பொறுப்பில் இருந்த போது அவர்களுக்கு கட்சித் தலைமை என்பது ஒரு அழுத்தம்.

கலைஞர் தலைவராக ஆகும் வரை அந்த அழுத்தம் இல்லை. தலைவர் ஆனதும் அவரது தலைமைப் பதவியே அவருக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.

காவியத் தலைவர் அவர்.

Leave A Reply