அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கொரியா தமிழ்ச்சங்கம் முன்வைத்த கோரிக்கைகளின் முழு விவரம்

Share

பூமிப்பந்தில் தமிழ்நாடு கடைப்பிடித்த அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கையின் விளைவால் அறிவியல் விஞ்ஞானிகளாலும் மற்றும் உயர் தொழில்நுட்பவியலாளர்களாலும் உருவான படித்த எளிய மக்களின் பிள்ளைகளால் அமைக்கப்பெற்ற கொரிய தமிழ்ச் சங்கம் தமிழரின் நல்லியல்புகளையும் பண்பாட்டையும் இவ்வுலகிற்க்கு அறியச்செய்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு தொடர்ந்து பெருமை சேர்க்கும். தமிழ்நாட்டின் கடைநிலைக் குடும்பங்களிலிருந்து கொரியாவிற்கு வந்து உயர் கல்வி/அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி/உயர் தொழில்நுட்ப வேலை போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாட்டின் சமூக-அரசியல் மற்றும் பொருண்மிய வளர்ச்சியின் அடையாளமாகத் திகழும் இளைஞர்களால் முற்று முழுதாக கட்டமைக்கப்பட்டது என்ற சிறப்பு உலகில் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கே உண்டு என்றால் அது மிகையாகாது. கொரிய தமிழ்ச் சங்கம் மட்டுமே இங்குள்ள இந்திய சமூகத்தினரிடையே இயங்கும் சட்டப்படி கொரிய அரசில் பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. சங்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வேலைகளை முன்னின்று செய்த அறிவியலாளர்களே சங்கத்தை வழிநடத்தும் தலைமைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணி செய்யும் மேற்கொள்வது வேறு எங்கும் எளிதில் காணக்கிடைக்காத ஒரு நிகழ்வு. எனவே, இயல்பிலே கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடும் பொதுக் கோரிக்கைகளும் அறிவுத்தளம் எங்கும் விரிகிறது.

தமிழ்நாடு பல ஆண்டுகளாக கடைப்பிடித்துவரும் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கையின் வழிநின்று தமிழ் மக்களின் அறிவுசார் அங்கமான கொரிய தமிழ்ச் சங்கம் இங்குள்ள நமது மக்களின் சார்பில் பொதுக்கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிற்கு அறியத்தருகிறது.

விரிவான கோரிக்கைகளும் மற்றும் தரவுகள் அடிப்படையிலான பின்னணியும்

 

நாட்டிற்கு இராசதந்திர பலன்களை தரக்கூடிய இந்திய குழந்தைகள் அதிகம் பயன்பெரும் வகையிலான குறைந்த செலவில் கல்வியை வழங்கக்கூடிய நிலைத்திருக்கூடிய ஆசிய பள்ளியை (Affordable and Sustainable Asian School) கொரியாவில் அமைக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி நிறைவேற்றித்தருமாறு தமிழ்நாடு அரசிடம் வேண்டுதல்!

 

அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பா, ஜப்பான், ஆஃப்ரிக்க மற்றும் வளைகுடா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் குறிப்பிடத்தக்க குடிமை எண்ணிக்கையுடன் பள்ளி, பண்பாடு மற்றும் வாழ்வியல் என உரிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி வாழ்ந்து வருகின்றனர்! அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் இந்திய மக்கள் பொருளாதாரம் மற்றும் குடிமைரீதியாக அதிகாரத்தில் அமரும் ஒரு பலம் பெருந்திய சமூகமாக இருக்கிறார்கள். தற்கால இந்திய-கொரிய இருதரப்பு உறவுகள் (Contemporary bilateral ties) 1950 தொடங்கியிருந்தாலும், இந்தியாவின் முத்த அரசியல் தலைவராக விளங்கியவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞர் அவர்களின் பன்னாட்டு தொழில் ஊக்குவிப்பு முன்னெடுப்புகளால் சென்னையில் ஃகாந்தே மகிழுந்து தொழிற்சாலை (Hyndai Automobiles) தொடங்கப்பட்ட 1996-ம் ஆண்டு கால குறியீட்டிற்கு பிறகே கல்வி-வேலைவாய்ப்புகள் நிமித்தம் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய மக்கள் சில நூறுகள் என்கிற அளவில் தொடங்கி தற்பொழுது சில ஆயிரங்கள் என்கிற அளவில் கொரியாவில் வசிக்கின்றனர். என்றாலும் எம்மக்கள் கொரிய முழுதும் விரவி வாழ்வதாலும், பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக தென்படுவதாலும் பல்வேறு நகரங்களில் விரவி வாழ்வதாலும் இந்திய குழந்தைகளுக்கான பள்ளி என்ற முயற்சி இதுவரை சாத்தியமாகவில்லை. கொரிய புல்லியியல் துறை தரவுகளின் அடிப்படையிலான இங்குள்ள ஆசிய மக்களின் எண்ணிக்கையை கணக்கில்கொண்டு கொரியாவில் வாழும் ஆசியக்குழந்தைகளுக்கான குறைந்த செலவில் கல்வியை வழங்கக்கூடிய நிலைத்திருக்கூடிய ஆரம்ப பள்ளியை (Affordable and Sustainable Asian School) அதிக அளவில் இந்திய குழந்தைகள் தென்படும் இடத்தில் அமைக்கும் வழிமுறை பலனளிக்கும் என எமது சங்கம் கருதுகிறது.

கொரிய மக்கள் தொகையில் சுமார் 5 வீதம்பேர் பல்லின சமூகத்தினர். இதில் 90% சதவீதம் ஆசியர்கள். பல்லின சமூக மக்கள் தொகையில் 37-40% சீனாவைச்சேர்ந்த கொரியர்கள், 17% சீனர்கள், 8% வியட்னாமியர்கள் 7% பேர் தாய்லாந்து நாட்டினர். மற்ற ஏசியான் நாட்டினர் 5.6%. இந்தியா (0.5%, 13,000) உள்ளிட்ட சார்க் நாட்டவர் 2.7%. கொரிய அரசு இங்குள்ள பல்லின சமூகத்திற்கு சிறப்பு திட்டங்கள் மூலம் உதவி புரிந்தாலும் பொருளாதாரரீதியாக சர்வதேச பள்ளிகளில் கட்டணம் செலுத்தி குழந்தைகளை கல்வி புகட்டும் அளவிற்கு இங்குள்ள ஆசிய சமூகத்தினர் பலம் பொருந்தியவர்களாக இல்லை. எனவே அவர்கள் வேலைவாய்ப்பு இருந்தாலும் குழந்தைகளின் கல்விக்காக விரைவாக தாய்நாட்டிற்கு செல்ல நேர்கிறது.
இத்தகைய சூழலில் இந்திய ஒன்றிய அரசு, இந்திய குழந்தைகள் அதிக பயன்பெறும் வகையிலான ஆசிய பள்ளியை ஏற்படுத்துவதன் மூலம் இங்குள்ள நம் குழந்தைகளுக்கான கல்விக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் ஆசிய நாடுகள் மற்றும் மக்கள் மட்டத்தில் பல இராசதந்திர நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் மென் ஆற்றல் (Soft power) என்று சொல்லக்கூடிய நம் கலை மற்றும் பண்பாட்டை இங்கு சிறந்த முறையில் பரப்ப முடியும்.

 

தமிழ்நாடு ஆசிரியர் பணி தேர்வாணையத்தால் கோரப்படும் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதில் வெளிநாட்டில் பயின்ற அல்லது ஆராய்ச்சி பட்டறிவுள்ளோர் எதிர்கொள்ளும் அதீத படிவ தேவைகளை குறைக்க ஆவண செய்யுமாறு தமிழ்நாடு அரசிடம் வேண்டுதல்!

 

“தமிழ்நாடு ஆசிரியர் பணி தேர்வாணையத்தால் (Tamilnadu Teachers Recruitment Board TRB) உதவி பேராசிரியர் மற்றும் தொடர்பான பணிகளுக்கான விண்ணப்பத்தில் வெளிநாட்டில் வேலைபார்த்த/பார்க்கும் விண்ணப்பதாரர்களுக்கு கேட்பட்டிருக்கும் பணிபட்டறிவிற்கான சான்றிதழ் (Experience Certificate) மற்றும் தொடர்பான தேவைப்பாடுகள் உள்ளிட்டவைகளால் அதீத படிவ வேலை, வேலைநேர நேர விரயம் மற்றும் பண விரயம் ஆகியவற்றால் பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன.

 

இத்தகைய இடர்பாடுகள் கொரியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியறிவு பெற்ற நமது இளைஞர்களை களைப்படைய செய்து, நாட்டில் மூளை வறட்சிக்கு வழிவகுக்கிறது. தற்போது குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப விதிமுறைப்படி வேலைசெய்த ஒவ்வொரு நிறுவனத்தின் தலைவரிடமும் ஆங்கிலத்தில் பெறப்படும் சான்றிதழை நோட்டரி பப்ளிக் கையெப்பத்திற்கு (Notarization at Law Firm) உள்ளூர் மொழியில் மாற்றம் செய்து, பின்னர் அப்போஸ்டைல் (Apostille) மற்றும் தூதரக ஒப்பம் (Attestation at Embassy) பெறுவது போன்ற அதீத வேலைப்பாடுகள் தேவைப்படுகிறது.

இன்று சான்றிதழின் உண்மைத்தன்மையையை நேரடியாக சரிபார்க்க பல தொடர்பு வழிகள் இருக்கும் நிலையில் பணிசெய்த ஆய்வுக்குழுவின் தலைவர் மற்றும் ஆய்வுத்துறையின் இயக்குனர் ஆகியோரின் சான்றொப்பத்துடன் கூடிய பட்டறிவு சான்றிதழ் என்ற அளவில் எளிமைப்படுத்தினால் நல்லது. எனவே, எதிர்காலத்தில் கூடியமட்டும் படிவ வேலைகளை எளிமைப்படுத்தி (Simplification of too much paper-work) இடர்பாடுகளை களைய உரிய உதவிகளை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசிடம் வேண்டுகிறோம்!

 

இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் படத்தை உலக நாடுகளில் இந்திய ஒன்றிய அரசால் நடத்தப்படும் சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையங்களில் வைக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி நிறைவேற்றித்தருமாறு தமிழ்நாடு அரசிடம் வேண்டுதல்!

சுவாமி விவேகானந்தரை சிகாகோ மாநாட்டிற்கு அனுப்பி பேருதவி புரிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் படத்தை உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் வழியே நடத்தப்படும் சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையங்கள் (2018 முன்பாக இந்திய கலாச்சார மையங்கள் என்று அழைக்கப்பட்டது) அனைத்திலும் திறந்து வரலாற்றிற்கு வாய்மை செய்ய வேண்டும் என்று என்ற கோரிக்கை “2022 தமிழர் திருநாள் பொங்கல் நிகழ்வில் இடம்பெற்ற கொரிய தமிழ்ச் சங்க தலைவர் உரை மூலம் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் மற்றும் வெளியுறத்துறை அமைச்சர் அவர்களுக்கும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டது. அவ்வமயம் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு வைகோ அவர்களும் அப்போது ஒரு அறிக்கையின் ஊடக வலியுறுத்தியிருந்தார். இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு இந்திய ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றிட தந்திட வேண்டும் என்று எமது சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இது சமுகநீதி, அறிவியல், விடுதலை போராட்டம், ஆண்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்திய நாட்டிற்கு தமிழ்நாடு செய்த/செய்து வரும் வரலாற்று பங்களிபை பன்னாட்டு சூழலில் எடுத்துரைக்கும் எனறு அமைத்து சங்கம் திடமாக நம்புகிறது.

 

சென்னை-சியோல் நேரடி விமானசேவை தொடங்கப்பட ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றித்தருமாறு தமிழ்நாடு அரசிடம் வேண்டுதல்!

இந்திய தூதரகத்தின் தகவல்படி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தம் ~ 12,000 இந்தியர்கள் கொரியாவிலும் அதே அளவு கொரிய மக்கள் இந்தியாவிலும் பெருங்கால அளவு வதிவிட விசாவுடன் வசிக்கிறார்கள். இது தவிர, கோவிட்-19 பெருந்தொற்று காலத்திற்கு முந்தைய கணக்கீட்டின்படி (2019-ம் ஆண்டு), இங்குள்ள இந்திய தூதரகத்தால் ~35000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில் சராசரியாக மாதம் ~ 8000 இந்தியர்கள் கொரியாவிற்கு வருகை தந்துள்ளனர். 2020-ம் ஆண்டு தொடக்கம் வரை, சியோல்-டெல்லி, (ஏர் இந்தியா) சியோல்-டெல்லி (ஆசியானா) உள்ளிட்ட நேரடி சேவைகள், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட மாற்று சேவைகள் மூலம் கொரிய மற்றும் இந்திய மக்கள் தினசரி விமான பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். கோவிட்-19 பெருந்தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் ஏர் இந்தியா வாரம் 4 முறை சியோல்-டெல்லி விமான சேவையை வழங்குகிறது. ஃகந்தே உள்ளிட்ட கொரிய தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கும் சென்னை இந்தியாவிலேயே கொரிய மக்கள் அதிகம் வாழும் (~ 5000) மற்றும் பயணிக்கும் நகராக இருத்தல்; அனந்தபூர், ஆந்திராவில் கொரியாவின் கியா மோட்டார் நிறுவனம் நிறுவப்பட்டிருத்தல்; தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் கொண்ட பெங்களூர் மற்றும் கைதராபாத் நகரங்கள் அருகில் இருத்தல்; மற்றும் சுற்றுலா தளங்கள் நிறைந்த கேராளா, போன்றவை உள்ளிட்ட சிறப்பம்சங்கள்/தேவைப்பாடுகள் இருந்தாலும் இதுவரை சியோலிலிருந்து இந்தியாவின் தென்பகுதிக்கு நேரடி விமான சேவை இயக்கப்படவில்லை.

இடவமைவு தொடர்பாடல், அதிக அளவு கொரிய மக்கள் உள்ளிட்ட காரணங்கள் அடிப்படையில் சியோல்-சென்னை நேரடி விமான சேவை மேற்குறிப்பிட்ட தென்பகுதி மக்களுக்கு அதிக பலன் தரும். குறைந்த பட்சம் வாரம் ஒருமுறை ஏர் இந்தியாவின் சியோல்-சென்னை நேரடி சேவை அமைவது இந்திய மற்றும் கொரிய மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதக அமைவதோடு தொழில்முறையிலும் வெற்றிகரமாக அமையும். இதன்மூலம் டெல்லியில் ஏற்படும் உடமை மற்றுதல் தொடர்பில் எழும் சிக்கல்கள், அதிக பயண நேரம் உள்ளிட்ட பல சிரமங்களிலிருந்து மக்கள் விடுபட வழியேற்படும். ஒன்றிய அரசின் பொதுவிமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளை வலியுறுத்தி இந்த கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு தமிழ்நாடு அரசை வேண்டுகிறோம்.

 

சிறப்பு துறைகளில்/வெளிநாடுகளில் முனைவர் பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டறிவுபெற்றோருக்கென கற்பித்தல் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய தமிழ்நாடு அரசிடம் வேண்டுதல்!

கொரியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பு மற்றும் ஆராய்ச்சி போன்றவைகள் எதிர்கால தேவைகள் முன்கணிக்கப்பட்டு இயந்திரமயமாக்கல் (செயற்கை நுண்ணறிவுசார் தானியங்கிமயமாக்கல்) ஆற்றல் உருவாக்கல் (சோடியம் மின்சேமிப்பான்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்), உடம்பின் குறித்த பகுதிக்கு மருந்து மூலக்கூறை கொண்டு செல்லுதல் (ஜீன் டெலிவரி), உயிரி தொழில்நுட்பம் (செயற்கை உறுப்பாக்கம், சோதனைகள்) உள்ளிட்ட சிறப்பு துறைகளில் முனைவைர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

என்றாலும் நம் மாநில பல்கலைக்கழகங்களில்-கல்லூரிகளில் கோரப்படும் கற்பித்தல் வேலை வாய்ப்பை பொறுத்தமட்டில், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணிதம், தாவரவியல், மற்றும் அடிப்படை பொறியியல் பட்டங்கள் (வேதி மின்னனு, இயந்திரம், பொது- பொறியியல்) ஆகிய பட்டங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. சிறப்பு துறையில் பட்டம் பெற்றோர் “பாடத்தகுதி” (Subject equivalence) என்ற வார்த்தை ஒப்புமை அடிப்படையில், குறித்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பதில் தடைஏற்படுகிறது.
இதை தவிர்க்க சிறப்பு துறையில் பட்டம் பயின்றோரும் தொடர்புடைய அடிப்படையைத் துறையில் (எடுத்துக்காட்டாக பாலிமர் அறிவியல் – வேதியியல்) பணிசெய்ய வாய்ப்பு வழங்கும் வகையில் அரசு கொள்கை முடிவெடுத்து செயல்படுத்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இது சிறப்பு துறைகளில் பட்டம் பெற்றோருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதுடன் நம் கல்வி நிறுவனங்களின் கற்பித்தல்/ஆராய்ச்சி செயல்பாடுகள் தற்போதைய அறிவியல் தொழில்நுடப் வளர்ச்சி நோக்கி நடைபோட உதவும்!

 

வெளிநாடுகளில் மேற்படிப்பு ஆராய்ச்சி மற்றும் தொழில்துறையில் பட்டறிவுபெற்றோருக்கென குறுகியகால கற்றல்/ஆராய்ச்சி பணி மற்றும் தொழில் தொடங்குதல் வாய்ப்புகளை ஏற்படுத்தி மூளை வறட்சியை தடுக்க வழிவகை செய்ய அரசிடம் வேண்டுதல்!

வளர்ந்த நாடுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பு மற்றும் ஆராய்ச்சி பெற்றோர் சுமார் 3-15 ஆண்டுகால மேற்படிப்பு ஆராய்ச்சி/தொழில்துறை/கற்பித்தல் பட்டறிவுடன் தாய்நாடு திரும்புகின்றனர். இவ்வாறானோரின் பட்டறிவை நன்கு பயன்படுத்திக்கொள்ள நமது கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுனங்களில் சிறப்பு அறிவியல் தொழில் நுட்பதுறைகளில் 5 ஆண்டுகால வேலைவாய்ப்பை வழங்குவது கற்றோர் மற்றும் நிறுவனங்கள் என இருதரப்பிற்கும் பயன்தரும். ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக்குழுவால் இதுபோன்று குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வேலைவாய்ப்பை தரும் ஆசிரியர் மீள்வலுவூட்டல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற திட்டம் நமது மாநில அரசால் செயல்படுத்துபடுவது வளர்ந்த நாடுகளில் மேற்படிப்பு ஆராய்ச்சி மற்றும் தொழில்துறையில் பட்டறிவுபெற்றோர் நாடு திரும்ப வழிவகுத்து மூளை வறட்சியை தடுக்கும். குறிப்பாக நாட்டின் வேறு எந்த பகுதியையும் ஒப்பிடும்பொழுது, ஆண்டாண்டுகாலமாக தமிழ்நாடு கடைபிடித்து சமூகநீதி கொள்கை/திட்டங்களால் பயன்பெற்ற அடித்தட்டு குடும்பங்களில் பிறந்த எம்மைப்போன்றோரே இன்று வளர்ந்த நாடுகளில் கல்விபெறும் அளவிற்கு முன்னேறியிருக்கின்றனர். இத்தகைய தமிழ்நாட்டு இளைஞர்களின் அறிவை சரியாக பயன்டுத்திக்கொள்ள இந்த திட்டம் உதவுமென்றால் அது மிகையிலை.

மேலும், இவ்வாறோனோர் புதிய தொழில்நுட்ப அடிப்படையில் வணிகரீதியாக வெற்றித்தரக்கூடிய தொழில்நிறுவனங்களை அமைக்க சிறப்பு ஊக்குவிப்பு திட்டங்களை தீட்டி நமது அரசு செயல்படுத்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம். இதுகாறும் உள்நாட்டு/அயலக தமிழ் தொழிலதிபர்களையும் அறிவுசார் தொழிமுனைவோரையும் (Knowledge capital) இணைத்து அறிவுசார் முதலீடு (Venture capital) என்கிற அடிப்படையிலான தொழில் தொடங்குதல் மற்றும் வளர்ச்சி அமைப்பை நமது அரசு ஏற்படுத்துவது பயனுள்ளதாக அமையும் என்று திடமாக நம்புகிறோம்.

 

நோய் பெருந்தொற்று சூழலை எதிர்கொள்ள மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் படிக்கும் மாணவர்கள் மற்றும் துறைசார் பட்டறிவுபெற்ற தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய தன்னார்வ நல்வாழ்வு படையணியை அமைக்க தமிழ்நாடு அரசை வேண்டுதல்!

தற்பொழுது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றை கடும் நெருக்கடி காலத்தில் திறம்பட எதிர்கொண்ட மனுமிகு தமிழ்நாடு முதல் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களையும், மன்புமிகு அமைச்சர் பெருமக்களையும் உள்ளிட்ட அனைவரையும் எமது சங்கம் பாராட்டுகிறது. கொள்கை மற்றும் இயங்கியல் முறைகளில் பல துருவங்களாக இருக்கும் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள் நெருக்கடி காலங்களில் மக்களுக்கு எவ்வளவு நெருங்கி தொண்டாற்றமுடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்தாக இந்த நெருக்கடி காலம் அமைந்த்திருந்ததென்றால் அது மிகையாகாது. இவ்வியக்கங்கள் தமது முண்ணனி தோழர்களை தொற்றால் இழக்கும் சூழலிலும் தொண்டாற்றினார் என்பது நன்றியுடன் குறிப்பிடத்க்கது. மக்கள் நல்வாழ்வு பாதுகாப்பு (Civil medical defense) தொடர்பான இத்தொற்றை கட்டுப்படுத்தும்வண்ணம் விதிக்கப்பட்ட சட்டத்திட்ட கட்டுப்பாடுகளை நடைமுறைபடுத்துவதில் சட்டம் ஒழுங்கை காக்க (Law and order) அதிகம் பழக்கப்பட்ட காவல்துறைக்கும் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அன்றாட வாழ்வாதரத்திற்கு உழைக்கும் எளிய மக்களுக்கும் ஏற்பட்ட முரண்பட்டால் விளைந்த பாதிப்புகள், குறிப்பாக உயிரிழப்புகள் மிகவும் வருந்தத்தக்கது. வரும் காலங்களில் மக்கள் பொது பாதுகாப்பு சம்மந்தப்பட்ட நோய்த்தொற்று உள்ளிட்டவற்றை செவ்வனே கட்டுப்படுத்த மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அளவில் “நாட்டுநல பணித்திட்ட மாணவர் அமைப்பு” போன்ற தனித்த அலகுகளை உருவாக்கி எக்காலத்திலும் உடனடியாக செயலாற்றும் வகையில் அட்டவணைப்படுத்தப்ட்ட பயிற்சிகள் மூலம் அவற்றின் திறன் பராமரிக்கப்படவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். இந்த அலகுகள் மூலம் நோய்த்தொற்று காலத்தில் உரிய நடைமுறைகளை சீரியமுறையில் நடைமுறைப்படுத்தி நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட கூறுகளை அதிகம் பாதிக்காமல் காக்கமுடியும்.

 

இந்தியா-கொரியா நேரடி தொழிலாளர் ஒப்பந்தம் அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட ஒன்றிய அரசை வலியுறுத்துமாறு தமிழ்நாடு அரசை வேண்டுதல்!

2009 ஆண்டில் இந்தியாவிற்கும் கொரியாவிற்கும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாக ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட 163 வகையான தொழில்முறை வல்லுநர்கள் கொரியாவில் பணிவாய்ப்பு பெறமுடியுமென்றாலும் இன்றுவரை பொதுவான தொழிலாளர் ஒப்பந்தம் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. எனினும் கொரியாவின் அதீத தொழில்வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் குஜராத், பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் இன்னபிற ஆசியா, ஆஃப்ரிக்க நாடுகளிலிருந்தும் முறைசாரா தொழிலாளர்கள் முதலில் சுற்றுலா உள்ளிட்ட குறுகியகால விசாக்களில் வருகை தந்து பின்னர் தஞ்சம் கோரும் விசாக்கள் மூலம் முறைசாரா தொழிலாளராகின்றனர். இவ்வாறான தொழிலாளர்கள் பலர் கடுமையான பணிச்சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். முறையான தொழிலாளர்களுக்குரிய மருத்துவ வசதி, தங்குமிடம் விடுமுறை உள்ளிட்ட சூழல் இத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இங்குள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இதனை நவீன அடிமை முறை என்றும் மறைக்கப்பட்ட தொழிலார்கள் என்றும் அழைக்கின்றனர்.

இந்திய கொரியா இந்தியா-கொரியா நேரடி தொழிலாளர் ஒப்பந்தம் அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுவதன்மூலம் இந்த நிலையை சரிசெய்ய முடியும். இதன் பொருட்டு தமிழ்நாடு அரசு இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

தமிழ் வாளர்ச்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இணையவழி கல்விக்கழகம் ஊடக இன்னும் பள்ளி ஏற்படுத்தப்படாத தமிழர் வசிக்கும் அயல்நாடுகளில் தன்னார்வ ஆசிரியர்களைக்கொண்டு நடத்தப்படும் இணையவழி பள்ளியை ஏற்படுத்தித்தர தமிழ்நாடு அரசிடம் வேண்டுதல்!

 

கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் மக்கள் விரவி வாழ்தல் மற்றும் பொருளாதார சிக்கல்களால் முறையான பள்ளி ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. மேலும் குறித்த நாடுகளில் உள்ள பன்னாட்டு, ஆங்கில வழிக்கல்விக்கு அதீத கட்டணம் கோரப்படுவதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவதில்லை. குழந்தைகள் தாய்மொழியல்லாத கல்விச்சுழலுக்கு செல்லும்பொழுது மொழிக்குழப்பம் ஏற்பட்டு ஆட்டிசம் உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகையால் வேலையிருந்தாலும் குழந்தைகள் கல்வி நிமித்தம் ஊர் திரும்பும் கட்டாயம் ஏற்படுகிறது. 24 செப்டம்பர் 2022, நேற்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமிழ் வாளர்ச்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இணையவழி கல்விக்கழகம் ஊடக அயலக தமிழர்களுக்கு உரிய புத்தகங்களை அனுப்பி ஆங்கங்கே உள்ள தன்னார்வ ஆசிரியர்கள் மூலம் தமிழ் கல்வி கற்றுத்தறும் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்திருக்கிறார் என்பது இங்கு மகிழ்வுடன் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கிடைக்கும் சான்றிதழ் குழந்தைகள் ஊர் திரும்பும்பொழுது தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் சேரமுடியுமென்று கூறப்பட்டுள்ளது! எமது சங்கமும் இதில் பங்காற்றுகிறது.

நம் மக்களுக்கு கல்வி இல்லாத சூழலை ஓரளவு சரிசெய்ய தமிழ் மட்டுமல்லாது பிற படங்களையும் தமிழ் இனையவழி கல்விக்கழகம் உதவி செய்வது காலத்தினால் செய்த பேருதவியாய் அமையும். மேலும் தன்னார்வ ஆசிரியராக பணிசெய்ய முன்வருவோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் ஏற்கப்படும் பணி பட்டறிவு சான்றிதல் கொடுக்கப்படுவது தன்னார்வ ஆசிர்யர்களை ஊக்குவிக்கும். ஏற்கனவே இந்த கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட இணையவழி கல்விக்கழக பொறுப்பளர்களிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு தமிழ்நாடு அரசிடம் வேண்டுகிறோம்.

 

மிகச்சிறந்த 50 தமிழ் புத்தகங்களை கொரியா மொழியில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் வேண்டுதல்

உலகில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை அதிகம் உருவாக்கி பயன்படுத்தும் நாடுகளில் கொரியா முன்னணியில் இருந்தாலும் புத்தக வாசிப்பு என்பது கொரியா மக்களிடையே கொரியா மொழியில் பெயர் வைப்பதைபோல என்றும் மாறாத பண்பாய் தொடர்கிறது. கொரிய முழுதும் அங்கங்கே மிகப்பெரிய வைங்க வாளக அளவுடைய மற்றும் சிறிய புத்தகக்கடைகளை காணலாம். குறிப்பாக இரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் சந்தை வெளிகள் உள்ளிட்ட பகுதிகளில் இவைகள் வவிடுபடாது அமைந்திருக்கும். ஆகவே மிகசிறந்த 50 தமிழ் புத்தகங்களை கொரியா மொழியில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் வேண்டுகிறோம்!

Leave A Reply