மம்தா பானர்ஜியின் தேர்தல் வியூகம்!

Share

மேற்கு வங்கு மாநில சட்டமன்ற தேர்தல் 2021-ல் நடைபெற உள்ள நிலையில், அங்கு டிசம்பர் 7-ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தைப் போலவே, 2021-ல் மேற்கு வங்க மாநிலத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 294 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில், பிரபலமானவர்களை இறக்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்துள்ளது.

தேர்தல் பணிகளில் மேற் குவங்க மாநில அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அங்கே, மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேயான தேர்தல் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தில், தனித்து ஆட்சி அமைக்கும் இலக்குடன் மம்தா பானர்ஜி 294 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை தயாரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

வேட்பாளர் பட்டியலை அறிவித்து, டிசம்பர் 7-ஆம் தேதி மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தை, மித்னாபூர் மாவட்டத்தில் தொடங்க இருக்கிறார். பிற மாநிலங்களில் பாஜக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப தேர்தல் அஸ்திரத்தை பிரயோகிக்க தயாராகி வருகிறார்.

தனது கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு விலை போய்விடக்கூடாது என்பதில் மம்தா பானர்ஜி கவனமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

Leave A Reply