ஆசிரியர்களுக்கு டாக்டர் வேலை கொடுத்த பள்ளிக்கல்வித்துறை – குழந்தைகள் வாழ்க்கையில் விளையாடுவதா?

Share

எதிர்கால டாக்டர்களையும், பொறியாளர்களையும் உருவாக்குவதற்கான அடித்தளத்தை இடுகிறவர்கள் என்று ஆசிரியர்களை சொல்லலாம். ஆனால், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அவர்களையே டாக்டர்களாக அங்கீகரித்துள்ளது எப்படியென்றுதான் புரியவில்லை. அதுவும் பல்நோக்கு மருத்துவர்களைப் போல கருதி அவர்களிடம் முக்கியமான பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறது.

 

இந்த மாதிரியான யோசனையெல்லாம் யாருடைய மூளையில் உதிக்கிறதோ தெரியவில்லை என்று ஆசிரியர்கள் புலம்புகிறார்கள்.

 

அதாவது, தங்களை கற்பிக்கும் பணியைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்யும் ரோபோக்களாக கருதுகிறார்களோ என்று அவர்கள் கவலையை தெரிவிக்கிறார்கள்.

 

ஆம், எந்தவித படிப்போ – முறையான அடிப்படை மருத்துவப் பயிற்சியோ இல்லாமல் தமிழ்நாட்டு ஆசிரியர்களை ஒரே நாளில் Multi Speciality மருத்துவரைப் போல அங்கீகரித்துள்ள பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடு கவலையளிப்பதாகவே உள்ளது.

 

Anemia
Cleft Lip
Cleft Palate
Cyanosis
Congenital Heart Disease
Dental Caries
Flurosis
Vitamin C deficiency
Angular Stomatitis
Candidiasis Low immunity
Thyroid
Tuberculosis
Muscular Dystrophy
Congenital Talepus
Urinary track infection
Vitamin D deficiency
Attention Deficit Hyperactive Disorder
Leprosy
Refractive Errors
Cataract
Glaucoma
Amblyopia
Strabismus
& etc Eye related Diseases

 

உள்ளிட்ட சுமார் 40-ற்கும் மேற்பட்ட நோய்-அறிகுறிகளை மாணவ மாணவியரிடம் சோதித்து App-ல் ஏற்றும் பணி தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இதில் சில வெளிப்படையாகத் தெரியக்கூடியதுதான் என்றாலும், குறிப்பிட்ட துறை சார் மருத்துவர்கள் மட்டுமே சில அறிகுறிகளைச் சரியாக உறுதிப்படுத்த இயலும். அதனால்தான் பொது மருத்துவம் மட்டுமின்றி தலைமுடி முதல் பாதம் வரையிலான ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஒவ்வொரு துறை என பல்வேறு வகையான மருத்துவப் படிப்புகள் உள்ளன.

ஆனால், இது குறித்த எவ்வித அடிப்படை மருத்துவ அறிவும் இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களை மருத்துவ ஆய்வு செய்வது என்பது பேராபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது.

 

ஆம். இது வெறும் வெளிப்புற அறிகுறிகளைக் கண்டறிவதுதான் என்றாலும். . .  ஒரு தவறான முடிவு நாளை ஒரு குழந்தைக்கு உரிய நேரத்தில் கிடைக்க வேண்டிய மருத்துவ உதவியை தடுத்துவிடக் கூடும்.

முன்பெல்லாம், பள்ளிகளுக்கு மருத்துவ அலுவலர்கள் நேரில் வந்து சோதித்து பிரச்சினை இருப்பின் உரிய துறை மருத்துவருக்குப் பரிந்துரைப்பதே வழக்கமாக இருந்தது. மருத்துவ வசதியில் வளர்ந்த மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் பள்ளிக் குழந்தைகளைச் சோதிப்பதற்கு மட்டும் மருத்துவர் பற்றாக்குறை வந்துவிட்டதா? ஒருவேளை பற்றாக்குறை இருப்பின் தேவைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரி மாணவர்களைக் கூட பயன்படுத்தலாமே!

 

ஆனால், அதையெல்லாம்விடுத்து ஆசிரியர்களைக் கொண்டு உடற் பரிசோதனை செய்து App-ல் ஏற்றுங்கள் என்பது அறிவியல் வளர்ச்சி மனிதனை மருத்துவத்திற்கு அப்புறப்படுத்துகிறதோ என்ற எண்ணம்தான் வருகிறது.

மருத்துவரின் பரிந்துரை இன்றி மருந்து வாங்குவது / விற்பது குற்றமெனில், முறையான அடிப்படை மருத்துவ அறிவு இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு நோய் அறிகுறிகளைப் பரிசோதிப்பது குற்றமாகாதா?

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோரின் கவனத்திற்கு உட்பட்டுத்தான் இது நடத்தப்படுகிறதா? ஆம் எனில், இதுதான் திராவிட மாடல் மருத்துவக் கொள்கையா?

“ஒரு ஆசிரியராக APP-ல் ஏற்ற சிரமப்பட்டு நாங்கள் இதை கேள்விக்குட்படுத்தவில்லை. ஒவ்வொரு நாளும் தேவையோ இல்லையோ Obey the order என்று பலவற்றை Online-ல் ஏற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். இதையும் அவ்வாறு செய்துவிட்டு நகர மனமில்லாது, எமது குழந்தைகளின் மீதான உண்மையான அக்கறையிலேயே கேட்கிறோம்.” என்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

 

தயை கூர்ந்து மருத்துவத் துறையைப் பயன்படுத்தி மாணவ மாணவியர்களைப் பரிசோதித்துவிட்டு அதில் தேவைப்படும் முடிவுகளைச் சார்ந்த மாணவ மாணவியருக்கு மட்டும் APP-ல் ஏற்றச் சொல்லுங்கள் ஏற்றுகிறோம். அதுவே பயனுள்ள செயலாக இருக்கும்.

 

புதிதாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டாக்டர் பணியில், ஒவ்வொரு குழந்தைக்கும் 34 கேள்விகள் கேள்விகளைக் கேட்கவேண்டும். அந்த 34கேள்விகளுக்கும் பொதுவான பதில் ஆம்/இல்லை தான். ஆனால் இதிலுள்ள பல கேள்விகளும் மருத்துவர்கள் ஆய்வு செய்ய வேண்டி கூறவேண்டியவைகள். குழந்தைகளுக்குப் புகைக்கும் பழக்கம், ஆன்லைன் Game விளையாடுவது இதெல்லாம் நம்மால் ஓரளவு சரியானதைக் கூறிட முடியும். அதிலும் சில கேள்விகள் Long termக்கா/Short termக்கா என்று தெரியவில்லை. உடலில் கொப்புளங்கள், தேமல் போன்றவை மறைந்துபோக வாய்ப்பிருக்கு அல்லவா?இப்போது பார்க்கும்போது இல்லாமலிருந்து இடையில் இவை வந்தும் போகலாமல்லவா?

 

ஒவ்வொரு பள்ளிக்கும் அந்தந்ந பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள மருத்துவக் குழுவை அனுப்பி, Health & screening செய்து போட்டால் மட்டுமே இது சரியான தகவல்களாக இருக்கும். இல்லையெனில் Fake தான். அதிலும் குறிப்பாக Signal இல்லாத பகுதிகளில் அல்லுபுல்லு கணக்குதான். எந்தெந்தப் பகுதிகளிலும் Signal weakஓ அந்தந்தப் பகுதிகளுக்கு இதன் உண்மைத்தன்மைக்காக என்ன மாற்று?

 

வந்த பிள்ளைகளுக்கு ஓகே. வராத குழந்தைகளுக்கு எப்படி இதை முடிக்கமுடியும்? இன்னைக்கே முடி, சாயந்தரத்துக்குள்ளே முடி, முடிக்கலனா DEO, CEO Action எடுக்கவேண்டியிருக்கும். யெப்பப்போ… பள்ளிக்கூடமே வராமல் Fake attendance போட்றவிங்க, grandஐ misuse பண்றவிங்களையெல்லாம் ஹாயா விட்டுட்டு, வந்தவங்களை பாடம் நடத்தவிடாம நோகடிக்கிறது என்ன மனநிலையென்று தெரியவில்லை?

 

“எங்கோ சிலர்தான இப்படி ஏமாத்தறாங்க? அதுக்காக இப்டி சொல்லலாமா னு கேட்டா… “அந்த எங்கோ சிலராலதான்” என்னைப்போன்றோர் பாதிக்கப்பட்டுக்கிட்டிருக்காங்க. கடமையைச் செஞ்சா, கடமையைச் செய்யாதவிங்க போய்க் கம்ப்ளைண்ட் பண்றாங்க அதிகாரிங்கக்கிட்ட. அதனால… நாங்களாவது பாடம் நடத்துறோமே.. எங்கப் பள்ளிக்கூடத்துல “ப்ளீஸ் …..எங்களை பாடம் நடத்தவிடுங்க ஐய்யா…” என்று ஆசிரியர்கள் கதறுகிறார்கள்.

அவர்களுடைய நியாயம் யார் காதில் விழப்போகிறது?

Leave A Reply