எம்ஜியாரின் வார்த்தைகளை மறந்த அதிமுக தலைவர்கள்

Share
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் டெல்லியில்  தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி 17-2-1983 ல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆர். கூறிய வார்த்தைகளை அதிமுக தலைவர்களே மறந்துவிட்டார்கள். அதை மீண்டும் இந்தச் சமயத்தில் நினைவூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்படும் இந்த பதிவு அதிமுகவை ஆதரிப்போருக்கும், ஆர்எஸ்எஸைசை ஆதரிக்கும் அதிமுகவினருக்கும் சமர்ப்பணம்.
பத்திரிக்கையாளர் கேள்வி – ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தடை செய்யப்படுமா?
எம்.ஜி.ஆர் பதில் – “டெல்லியில் நேற்று நான் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்க்கப் புறப்பட்ட நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் “இந்து மஞ்ச்” என்ற பெயரில் 45 வயதுக்காரர்கள் என் முன்னால் நின்று கொண்டு,தமிழ் நாட்டில் 5 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள்.
எம்.ஜி.ஆர் ஒழிக என்று கோசம் போட்டார்கள்.
அவர்கள் நடந்து கொண்ட முரட்டுத்தனமான செயலைப் பார்க்கும் போது இதுதான் ஆர்.எஸ்.எஸ்.இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ் என்றால் அது இந்த நாட்டுக்கும்,தமிழ் நாட்டுப் பண்புக்கும் ஒத்துவராது.என்னைத் தடை செய்யும் அளவிற்கு மட்டமாக நடந்து கொண்டார்கள்.இந்து மதத்தை இப்படியெல்லாம் காப்பாற்றிவிடமுடியாது.
தமிழ்நாட்டில் இவ்வளவு கீழ்தரமான அனுபவம் எனக்கு இதுவரை நடந்ததில்லை.இதைப் பார்த்த பிறகு அந்த அமைப்பின் மீது எனக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது” என்றார் எம்.ஜி.ஆர்.
அவரை மிரட்டக் காரணம் யாதெனில், அவரது சட்டமன்ற பேச்சுதான்.
“இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிகாரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது. அச்சுறுத்தல் பயிற்சிகளை அரசு ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக சொல்கிறேன், ஆர்.எஸ்.எஸ்.. தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. இந்த பயிற்சிகளே போதும். ஆர்.எஸ்.எஸ்.. பயிற்சிகள் தேவை இல்லை.
(29.3.82 இல் சட்டமன்றத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர். இப்படி பேசியதற்காகவே டெல்லியில் ஆர்எஸ்எஸ் காரர்கள் எம்ஜியாரிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார்கள்.)

Leave A Reply