நமது முதல்வருக்கு பிரதமர் மதிப்பளிக்கிறார் என்பது பெருமைதான்…
1980ல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டத்திலேயே கலைஞர் அமரவைத்து மதிப்பளித்தவர் இந்திரா…
அறுதிப் பெரும்பான்மை பெற்ற அமைச்சரவை பதவியேற்பிலேயே கலைஞருக்கு இடமளித்து மரியாதை செய்தவர் இந்திரா…
ஜெயலலிதாவுக்கு யார் புல்லட் அனுப்பியது என்பதை யாரேனும் தெளிவுபடுத்தினால் இந்த பதிவுக்கு அர்த்தம் கிடைக்கும்…
தூக்கமில்லாத இரவுகளை கொடுத்த ஜெயலலிதாவுக்கு வாஜ்பாய் கொடுத்தது அந்த மரியாதை…
அதன்பிறகு, ஐந்தாண்டுகள் நிம்மதியான ஆட்சி நடத்த வாய்ப்பளித்தவர் கலைஞர்…
இப்போது, திமுகவின் தயவும் தளபதியின் தயவும் மோடிக்கு தேவையில்லை… ஆனாலும் ஏன் தளபதிக்கு புல்லட் புரூஃப் கார் அனுப்புகிறார் மோடி என்பதைத்தான் பார்க்க வேண்டும்…
இதில் ராசியாகவோ, சமாதானமாகவோ ஒன்றுமில்லை… அடித்த அடியின் வலியை திசைதிருப்ப மோடி செய்யும் ஏற்பாடு இது…
நாம் எப்போதும் சித்தாந்த எதிரிகள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்…
அனைத்து சாதியினரும் அர்ச்சகர். பெண்கள் அர்ச்சகர் பயிற்சி பெற விரும்பினால் வாய்ப்பு. ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் இடமாற்றம். அமைச்சர் எம்எல்ஏக்கு நோட்டிஸ்…
எல்லாமும் பாஜகவை பதற வைக்கும். வடக்கில் நடக்கும் தேர்தலில் சுமுக நிலையை ஏற்படுத்தவும், ஸ்டாலின் மோடியுடன் சுமுகமா இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்தவும் நடக்கும் முயற்சியோ என்று நான் அஞ்சுகிறேன்…
தளபதி உஷாராக இருக்க வேண்டும்…