ஓம் நமோ நாராயணன் திருப்பதி நமஹ!

Share

ஆணும் பெண்ணும் சமம் தானே என கேள்வி கேட்ட அந்த அந்த நபர் சேலை அணிந்து கொள்வாரா என பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி கேட்கிறார்.

இதை நாம் பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் நாராயணன் அவர்களின் சித்தாந்தம் பெண்களை இரண்டாம் குடிமக்களாக அடிமைகளாக நடத்துவதை வலியுறுத்தும் மனு அதர்ம சித்தாந்தம்
ஆண்கள் சேலை அணிந்து கொள்வது ஏதோ அவமானகரமான செயல் என நாராயணன் நினைக்கிறார்!

இவர்களின் வரலாறு என்பது பெண்களை உடன்கட்டை ஏற வைத்தது, கணவனை இழந்த பெண்களை மறுமணம் செய்ய மறுத்தது, கணவனை இழந்த பெண்களை மொட்டை அடித்து வெள்ளை உடை அணிய வைத்து மூலையில் அமர வைத்தது என்பதுதான்!

பெண்களுக்கு சொத்துரிமை இல்லை இல்லை என வாதிட்டது தான் ஆர் எஸ் எஸ். அந்த அமைப்பினுடைய பிரதிநிதியான நாராயணன் அப்படித்தான் வளர்க்கப்பட்டிருப்பார்.

முன்பு மன்மோகன் சிங் அரசாங்கத்தின் போது அவருக்கு வளையல், பொட்டு, புடவை அனுப்பும் போராட்டத்தை பாஜக முன்னெடுத்து நடத்தியது. அவரை “சிகண்டி” என அழைத்தது.

அரசியல் எதிரிகளை விமர்சிப்பதற்கு கூட பெண்களை இழிவாக பேசித்தான் விமர்சித்தது. பாஜகவின் வழக்கம் அதன்படிதான் அவர்கள் எதிர்க்கட்சி பெண் தலைவர்களை ஆண் தலைவர்களையும் இழிவுபடுத்திப் பேசுகிறார்.

ஆண் பெண் சமம் என்ற இந்த விவாதம் ஏன் ஏற்பட்டது என்று நாம் பார்ப்போம். அதாவது, மனுஸ்மிருதியில் பெண்களுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்பதை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய ஊடகக்காரரை அவமானப்படுத்துவதாக நினைத்து, அவர் சேலை கட்டி கொள்வாரா என நாராயணன் கேட்டிருக்கிறார்.

சேலை கட்டிக் கொள்வது இழுக்கு அல்ல! அவமானமும் அல்ல! அதை அணிவது ஆண்களுக்கு கேவலமான செயலுமல்ல!

ஆனால் நாராயணன்களுக்கு போதிக்கப்பட்டு உள்ள விஷம் பெண்கள் என்றால் ஆணுக்கு சமம் இல்லை என்பதுதான். அதன் வெளிப்பாடுதான் நாராயணன் மூளையில் தேங்கி இருக்கிற அழுக்கு இப்படி வெளிப்பட்டிருக்கிறது!

இவர்கள் கட்சி பெண் தலைவர்கள் எப்படித்தான் இவர்களோடு உரையாட நிறுத்துகிறார்கள் என்ற ஐயம் மேலோங்கி நிற்கிறது.

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு அவர்கள் முன்பு திமுகவில் இருந்த போதும் காங்கிரஸில் இருந்த போதும் பாஜகவினர் விமர்சித்த வார்த்தைகளை அச்சில் ஏற்ற முடியாது.

இதுதான் இவர்கள் பெண்களை மதிக்கும் லட்சணம்.

இவர்கள் வார்த்தையால் மட்டுமே பெண்களை இழிவுபடுத்துவர்கள் அல்ல! அதிலும் கடந்து பெண்களை பாலியல்ரீதியாக கொடுமை படுத்துபவர்கள். கர்ப்பிணி பெண் என்று பாராமல் அவள் வயிற்றைக் கிழித்தவர்கள்.
இதுதான் சங்கிகளின் வரலாறு.

இதன் தொடர்ச்சியாகத்தான் நாராயணன் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரிடம் நன்றி கூறுகிறேன். ஏனென்றால், பெண்களை தெய்வமாக மதிக்கிறோம் என பொய் பேசி திரிந்த சங்கீகள் அப்பட்டமாக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு சென்றதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்!

Prathaban Jayaraman

Leave A Reply