Home > அரசியல் > பத்து தலையில சிம்பு அடிக்கிற டயலாக் – Thamba Kutti Bambrosky

பத்து தலையில சிம்பு அடிக்கிற டயலாக் – Thamba Kutti Bambrosky

மான ஓநாய் கொல்லும்
ஓநாயை புலிக் கொல்லும்
புலியை சிங்கம் கொல்லும்
ஏன்னா சிங்கத்தை அடிக்கிறதுக்கு உலகத்துல ஆளே கிடையாதுடா.
இதுல மரண காமெடி என்னன்னா இதை தான் உலகம் பூரா நம்பிகிட்டு இருக்காங்க.
புலியும் சிங்கமும் சண்டை போட்டால் 90 சதவீத நேரம் வெற்றி பெறுவது புலிதான்.
புலியோட ஒரு அறையின் வெயிட்
சிங்கத்தின் ஒரு அறையின் வெயிட்டை விட 50 சதவீதம் கூடுதல்.
சிங்கத்தை விட புலி உருவத்திலும் எடையிலும் பெரியது
சிங்கம் கூட்டமாகவே வேட்டையாடி பழக்கப்பட்டது புலி தனியாகவே வேட்டையாடி பழக்கப்பட்டது.
சிவாஜி படத்துல ஒரு டயலாக் வரும் அது ஏற்கனவே அர்ஜுன் பேசுனது தான் அப்படின்னாலும்
பன்னி தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளா தான் வரும்
கூத்து என்னவென்றால் சிங்கமும் கூட்டமா தான் வரும்.
Westernized அப்படின்னு சொல்லுவாங்க அவன் அவன் அறிந்த உலகத்தில் இருந்து நிறைய கட்டுக்கதைகளை உருட்டினான்.
அதாவது அவர்கள் தான் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் மற்றவர்களெல்லாம் காட்டுமிராண்டி.
அவனுக்கு மொழி என்று ஒன்று தோன்றுவதற்கு முன்பே இங்கே பல்கலைக்கழகங்கள் இருந்தது, ஆனா நாம காட்டுமிராண்டி.
இன்றளவும் அலோபதி தான் தூக்கி கொண்டாடுவார்கள் மற்ற வைத்திய முறைகளை பாராமெடிக்கல் என்று புறங்கையால் ஒதுக்குவார்கள்.
அலெக்சாண்டர் தான் மாவீரன்.
இப்படி பல உருட்டுகளில் ஒன்று தான் காட்டின் ராஜா சிங்கம் என்பது.
உள்ளபடி பார்க்க வேண்டுமானால் செநநாய் கூட்டத்தை பார்த்து சிங்க கூட்டம் சிதறி ஓடும் என்பது தான் உண்மை.
மேற்கத்தியர்கள் புலியை பார்த்ததே கிடையாது அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சிங்கம்தான்.

Leave a Reply