சாதியை ஒழிக்க பெரியார் என்னா செஞ்சாரு பாஸ்? – Vijay Bhaskarvijay

Share

“பாஸ் பாஸ் பெரியார் என்னத்த பாஸ் செய்தாரு. தமிழ்நாட்டுல் எங்க  சாதி ஒழிஞ்சது பாஸ். இன்னமும் இருக்கு பாஸ் சாதி”

“ஜி நீங்க ஒரு வீட்டுக்கு போறீங்க. அதாவது மூணு வருசமா பூட்டிக் கிடக்கிற வீடு”

“பாஸ் நான் பெரியாரப் பத்தி பேசுறேன்”

“நான் பாழடைஞ்ச வீட்டப் பத்தி பேசுறேன் ஜி”

“சரி பாஸ் நீங்க சொல்றதுக்கே வர்றேன். மூணு வருசமா பூட்டிக்கிடக்குற வீடு இருக்கு சரி, அதுக்கென்ன”

“அத எப்படி சுத்தப்படுத்துவீங்க ஜி”

“இது ஒரு கேள்வியா பாஸ்”

“அட சொல்லுங்க ஜி. ஒண்ணு ஒண்ணா சொல்லுங்க”

“ம்ம்ம். முதல்ல ஒட்டடை அடிப்பேன். அப்புறம் எலிப்புழுக்கை, வவ்வால் புழுக்கை எல்லாம் அள்ளுவேன், அப்புறம் இந்த பூனை பேண்டு கீண்டு வெச்சிருந்தா அத அள்ளுவேன் பாஸ்”

“வாங்க ஜி வந்துட்டே இருங்க”

“எல்லாம் அள்ளியாச்சா. அப்புறம் கரையான் அரிச்சி மண்ணா தரையில இருக்குமா அத எல்லாம் கூட்டிப்பெருக்குவேன்”

“அப்புறம் ஜி”

“அப்புறம் பூந்துடப்பம் இல்ல பூந்துடப்பம். அத வெச்சி வீட்டுல இருக்கிற சின்ன தூசி எல்லாத்தையும் எடுப்பேன். கழுவி விடுவேன். மறுபடி லைசால் போட்டு கழுவி விடுவேன். அப்புறம் மாப் போட்டு துடைப்பேன்.அப்புறம் காய வைக்க டேபிள் ஃபேனோ அல்லது கதவ திறந்தோ வைப்பேன் பாஸ்”

“அப்ப வீட க்ளீன் பண்றதுக்கு ஒரு பிராசஸ் இருக்கு அப்படித்தான ஜி.”

“ஆமா பாஸ்”

“சரி பாஸ் இப்ப நீங்க வீட்ல ஒட்டடை எலிப்புழுக்கை வவ்வால் புழுக்கை எல்லாம் அள்ளுறீங்க. அள்ளி வீட்டுல உள்ள மண்ண எல்லாம் பெருக்குறீங்க. பெருக்கிட்டு இருக்கும் போதே செத்து போறீங்க அப்படின்னு வெச்சிக்கவும்”

“என்ன பாஸ் இப்படி பேசுறீங்க”

“அட பேச்சுக்குதான ஜி. சரியா நீங்க இல்ல. அப்ப உங்க மனைவியோ அல்லது பையனோ வந்து “நம்ம அப்பா என்னத்த வீட்ட சுத்தம் செய்தாரு. வீடெல்லாம் தரையில தூசியா இருக்குன்னு சொன்னா ஒத்துப்பீங்களா”

“ஆங் பாஸ் அதெப்படி ஒத்துப்பேன். நான் மெயின் குப்பையெல்லாம் அள்ளி இருக்கேன். வீடு சுத்தமா இல்லைன்னு இருக்கலாம். ஆனால் முதல்ல வரும் போது இருக்கிறத விட வீடு சுத்தமாத்தானே இருக்கு பாஸ். நான் செய்த வேலையில இருந்து மத்தவங்க அத தொடர்ந்து செய்யனும் பாஸ். நான் சொல்றது சரிதான பாஸ்”

“அதேதான் ஜி… மூணு வருசம் பூட்டி இருந்த வீட்டுக்கே இவ்வளவு அடுக்குல சுத்தம் தேவைப்பட்டுதுன்னா… ஆயிரம் வருசமா இருக்கிற சாதி வெறி குப்பையை அகற்றதுக்கு நிறைய Step by Step Process தேவைப்படும்தானே”

“ஆமா பாஸ்”

“அப்ப பெரியார் வந்து ஒட்டடை அடிச்சி மண்ணு எல்லாம் அள்ளினார். அவர் வாழ்க்கை முழுவதும் சாதிவெறிக்கு எதிரா போராடிட்டே இருந்தார். போராடிட்டு இருக்கும் போதே இறந்துட்டார். இப்ப தமிழ்நாட்டுல சாதிவெறி மண்ணு குப்பை இருக்கலாம். ஆனால் பெரியார் சின்ன பையனா இருக்கும் போது உள்ள குப்பை குறைஞ்சிருக்கு. அப்ப நீங்க என்ன பண்ணனும் ஜி”

“நான் பெரியார் என்னத்த சுத்தம் செய்தார்னு பெரியார திட்டாம நான் களத்துல இறங்கி சாதிவெறிக்கு எதிரா போராடி பெரியார் சுத்தப்படுத்தின சமூகத்த மேலும் சுத்தப்படுத்தனும் பாஸ். இப்ப எனக்கு ரொம்ப நல்லா புரியுது பாஸ்”

“லவ் யூ ஜி.

வாங்க ஒரு கப் டீ சாப்பிடுவோம்”

Leave A Reply