பிரபாகரனை போற்றும் பெரியாரியவாதிகளுக்கு ஒரு கேள்வி! – Usman Ghani

Share

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு வேறொரு நாட்டைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரனை தமிழ் இனத்தின் தேசியத்தலைவன் என்று வார்த்தைக்கு வார்த்தை அழைத்துப் போற்றும் பெரியாரியம் பேசும் இயக்கங்கள், அமைப்புக்கள், பெரியாரியவாதிகள், மற்றும் அவர் தம் அடுத்த வார்சான இளையதலைமுறை பெரியாரியவாதிகளுக்கு எதிரொலியின் கேள்வி ஒன்று உண்டு.

தமிழ்நாட்டில் இருக்கும் நீங்களெல்லாம் ஒருபக்கம் பெரியாரையும் ஆதரித்துக்கொண்டு, மறுபக்கம் மூச்சுக்கு முந்நூறுமுறை பெரியாருக்கு இணையாக பிரபாகரனையும் தூக்கிப்பிடிக்கிறீர்களே, அதற்கு சமமாக பிரபாகரனை பின்பற்றும் ஈழத்தமிழர்களோ, ஈழத்தமிழ் அமைப்புக்களோ, அவர்களின் புலம் பெயர் ஈழத்தமிழ் அமைப்புக்களோ, அவர்களின் இன்றைய இளைய தலைமுறையினரோ எவராவது ஒருவர் அல்லது ஒரு அமைப்பு அல்லது ஒரு இயக்கம் ஒரே ஒருநாளாவது பெரியார் படத்தையோ, கொள்கையையோ, முழக்கத்தையோ, பேச்சையோ தங்களின் பரப்புரைகளிலோ, பதாகைகளிலோ அல்லது இணையம் மற்றும் முகநூல் பக்கத்தின் முகப்பிலோ வைத்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

அட தமிழ்நாட்டு மூடர்களே, அதென்ன நீங்கள் பெரியாரும் பிரபாகரனும் சமாந்திரமானவர்கள் என்று பீற்றிக்கொள்கிறீர்களே தவிர, பிரபாகரனின் அதிகாரப்பூர்வ அடியாட்கள் ஒருவன் கூட பெரியாரை என்றுமே மதித்து பகிரங்கமாக போற்றியதில்லையே ஏன் என்று உங்களுக்கு ஒருநாளாவது தோன்றாமல் போனதேன்?

தன் சொந்த பிள்ளைகளை அதிகபட்ச பாதுகாப்புக்கு மத்தியில் நீச்சல்குள வசதியுடன் மிகவும் வசதியாகவும் பத்திரமாகவும் படிக்கவைத்து, ஊரான் பிள்ளைகளை பிடித்து போர்க்களத்துக்கு அனுப்பி கொன்றொழித்த பிள்ளைபிடி பிரபாகரனைவிட, தனக்கு சொந்த பிள்ளை இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கான தமிழ்நாட்டு பிள்ளைகள் படிக்கவும், சுயமரியாதையுடன் வாழவும், அரசு வேலை பெறவும், தமிழ்நாட்டு தமிழர்களின் இடஒதுக்கீடு முதல் சகல உரிமைகளுக்காகவும் போராடிய பெரியார் எந்தவிதத்தில் தாழ்ந்தவர்?

நீங்கள் தமிழ்நாட்டில் பிரபாகரனுக்கு அடிக்கும் ஜால்ராவில் நூற்றில் ஒரே ஒருபங்காவது ஈழத்தமிழன் எவராவது அவர்கள் சமூகத்தின் மத்தியில் பெரியாரை போற்றியிருக்கிறார்களா? இல்லையே?

அப்படியிருக்கும்போது நீங்க மட்டும் என்ன ம***க்கு இங்கே தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் தமிழர்களின் தேசியத்தலைவர் பிரபகாரன் என்று போற்றிக்கொண்டிருக்கிறீர்கள்?

ஒன்று நீங்கள் பெரியாரை கைவிடுங்கள். பிரபாகரன் பின்னால் போய் நாசமாக போங்கள். பிரச்சனையில்லை. அல்லது பெரியார் தான் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு நல்லது செய்தவர் என்பதை ஏற்றால் பிரபாகரன் புகழ் பாடுவதை நிறுத்துங்கள்.

இல்லை பெரியார் பிரபாகரன் ஆகிய இருவரையும் போற்றுவோம் என்றால் அதுதான் பெரியாருக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய துரோகம் என்பதை மட்டும் எதிரொலி தொடர்ந்து சொல்லும்!

எத்தனை எதிர்ப்புக்கள் மிரட்டல்கள் இன்பாக்ஸில் வந்தாலும்!

Leave A Reply