பொன்னியின் செல்வன் சினிமாவும் பாண்டிய நாட்டு பாமரனும் – நந்தன் ஸ்ரீதரன்

Share
எனக்கும், அரிக்கும் இடையில் நடந்த பல்வேறு உரையாடல்கள் மிக சுவாரசியமாக இருக்கும்..
அப்படியாக ஒரு முறை இந்த அரண்மனைகள் பற்றிய பேச்சு வந்தது..
எங்க ஏரியாவில் நிறைய ஜமீன் அரண்மனைகளைப் பார்த்திருக்கிறோம்.. அவை கம்பேரிட்டிவ்வாகப் பார்த்தால் தற்போதைய பெரிய வீடுகளை விட வசதியில் குறைந்தவை.. கல்லும் காரையும் வைத்து கட்டப் பட்டிருக்கும்.. அதிக பட்சம் பத்து அறைகள் இருக்கலாம்.. ஆனாலும் அந்த அறைகள் எல்லாம் எளிமையான சின்ன சின்ன அறைகளாகத்தான் இருக்கும்.. தவசங்கள் எனப்படும் தானியங்கள் போட்டு வைக்கும் அறை வேண்டுமானால் சற்றே பெரியதாக இருக்கலாம்..
அதே மாதிரி பெரு மன்னர்களின் அரண்மனைகள் மிக பெரிதாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கின்றனவே என்று பேசினோம்.
ரொம்ப எளிமையான விளக்கம்தான். குறுநில மன்னர்களும் அந்தந்த நிலங்களின் பாதுகாப்பும் மட்டுமே ஆதி தமிழ் நிலத்தில் முக்கியமாக இருந்தது..
அதன் பின்னர்தான் இந்த பெருமன்னர்களான சேர, சோழ பாண்டியர்கள் வருகிறார்கள்..
பெரு மன்னர்கள் என்போர் கார்ப்பரேட்டுகளைப் போன்றோர். எவ்வளவுக்கு எவ்வளவு நிலங்களையும் நாடுகளையும் பிடிக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களுக்கு வரி வருவாயும் கப்பம் சம்பந்தப்பட்ட வருவாயும் அதிகரிக்கும்..
அது தவிர அவர்களுக்கு மாபெரும் உல்லாச வாழ்வு தேவைப்பட்டது. அதற்கு ஆயிரம் தொண்டரடிப்பொடிகள் அவர்களுக்கு தேவைப்பட்டார்கள். பல்வேறு மனைவியர் அவர்களுக்கு தேவைப்பட்டார்கள்.. அரசியல் காரணங்களுக்காக எத்தனையோ நாடுகளின் இளவரசிகளை மணந்து தங்கள் அந்தப்புரத்தில் அடைத்து வைக்க வேண்டி இருந்தது.. அவர்கள் லாயங்களிலும் அராபியக் குதிரைகளை வளர்த்து வந்தார்கள். அந்தப்புரத்தில் மனைவியரை வளர்த்து வந்தார்கள்.
அவ்வளவு ஏன்..? தங்கத் தாம்பாளத்தில் மன்னர் வெளிக்குப் போக அதை முகர்ந்து பார்த்தே மன்னருக்கு வயிற்றிலோ அல்லது உடலிலோ என்ன பிரச்சினை என்று கண்டுபிடிக்க அரண்மனை வைத்தியர்கள் கூட இருந்தார்கள்..
மன்னர்கள் தங்கள் மக்களிடம் இருந்து விலகிப் போன அவலங்கள் நடக்கத் துவங்கியது இந்த பெருமன்னர் காலங்களில்தான். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பெருமன்னர்களாக உருவெடுத்தார்கள். பிறகுதான் அரசும் நாடும் மக்களுக்காக என்ற கான்செப்ட் மாறி மன்னருக்காகவும் அவரது குடும்பத்துக்காகவும் என்ற கான்செப்ட் தோன்றி இருக்க வேண்டும்.
நம் நிலத்தின் குறு மன்னர்களின் காலம் முடிவுக்கு வந்தபின்தான் இந்த பெருமன்னர்கள் தலையெடுக்கிறார்கள். அவர்கள்தான் மாதம் மும்மாரி பொழிகிறதா என்று தம் அமைச்சர்களிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டார்கள். ஜன்னலைத் திறந்து மழை பெய்கிறதா என்று பார்க்கக் கூட அவர்களுக்கு அவசியம் இல்லாமல் இருந்தது..
இந்த பெருமன்னர்கள்தான் இஷ்டத்துக்கு மக்களிடம் வரி போட்டார்கள்.
சாணக்கியன் தனது அர்த்த சாஸ்திரத்தில் முக்கியமான பாயிண்ட் ஒன்றை எழுதி இருப்பான்.
நாடு முழுக்க பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடுகிறதா.. மக்களால் வரி கொடுக்க முடியவில்லையா..
ஆங்காங்கே மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்களா..? அரசு கஜானா காலியாகிக் கொண்டிருக்கிறதா.. பிரச்சினையே இல்லை. கோவில் கட்ட வேண்டும். பஞ்சத்துக்கு காரணம் தெய்வ குற்றம். ஆகவே மழை பெய்ய வேண்டும் என்றால் கோவில் கட்ட வேண்டும். அதனால் இருப்பதைக் கொடுங்கள் என்று மக்களிடம் கேட்க வேண்டும்..
அவர்கள் தாங்களே பட்டினி கிடந்தாலும், தம் பிள்ளைகளே செத்தாலும் தெய்வத்துக்காக இருப்பதை எல்லாம் கொண்டு வந்து கொட்டுவார்கள்.. கஜானா நிறைந்துவிடும்.. இதுதான் ராஜ தந்திரம்.. அரசு தர்மம் என்று சொல்லி இருப்பான்..
மக்களைப் பற்றி கவலையே படாத.. தங்களது ஆடம்பர வாழ்க்கை ஒன்றே இலக்காக வாழ்ந்த மன்னர்கள்தான் இந்தப் பெரு மன்னர்கள்..
இவர்களது அரண்மனைகள் ஏன் அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கின்றன.. ஒரு மனிதனும் அவன் குடும்பமும் வாழ்வதற்காக ஏன் இவ்வளவு பெரிய ஏற்பாடு..?
அங்கேதான் வருகிறது கூட இருந்த ராஜ குருக்களின் ராஜ தந்திரங்கள்.. மன்னன் மீது மக்களுக்கு பயம் வர வேண்டும். மன்னன் என்பவன் அணுக முடியாத தெய்வீக நிலையில் இருப்பவன் என்ற எண்ணம் பாமர மக்களின் மனதில் படிய வேண்டும்..
அவ்வளவு பிரம்மாண்ட அரண்மனைக்குள்.. அவ்வளவு பெரிய high ceiling அரசவையில் வந்து நிற்கும் சாதாரண மனிதன் லிட்டரலாகவே dwarf ஆக தன்னை உணர்வான். அரசனின் பிரம்மாண்டத்துக்கு முன் தான் எவ்வளவு சிறியவன் என்று உணர்வான். அரசன் பிரம்மாண்டமானவன் என்று நம்பத் துவங்குவான். அவனை சிறுமைப் படுத்துவதற்காகவே அவ்வளவு பெரிய பிரம்மாண்டம் என்பது ராஜ தந்திர உத்தி..
இது போன்ற பெருமன்னர்கள்தான் அவர்களது வருவாயைப் பெருக்குவதற்காக மக்களைப் பற்றிய எந்த கவலையும் இன்றி இஷ்டத்துக்கு வரிகளைப் போட்டவர்கள்..
சேரனோ. சோழனோ.. பாண்டியனோ.. எந்த பெருமன்னனாக இருந்தாலும் அவன் மக்களைப் பற்றி கவலைப்படாத ம**யிராண்டிதான்.. இதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்த முடிவுகள் எல்லாம் எங்கள் உரையாடல்களால்தான் எட்டப்பட்டன..
பல ஆயிரம் மக்கள் படாத பாடுபட்டு ஒரு பெரும் காட்டை திருத்தி நூறு ஏக்கர், ஆயிரம் ஏக்கர் என்று விளை நிலங்களை உருவாக்கி அப்பாடா.. இனி ஆண்டைகளிடம் நாம் கூனிக் குறுகி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இது நாமே உருவாக்கிய விளை நிலங்கள்.. இனி நம் சந்ததிகள் எல்லாரும் சொந்த நிலத்தில் வியர்வை சிந்தி உழைத்து நிம்மதியாக சாப்பிடலாம் என்று அக்கடா என்று உட்கார்ந்திருப்பார்கள்.
ஒரு பெருமன்னன் முன்பாக யாரோ ஒரு புலவன் மன்னா.. நீ இந்திரன் சந்திரன் என்று பொய்களாக அடித்துவிட்டு மன்னனை குஷிப் படுத்துவான். சந்தோஷமான மன்னனோ.. ஆகா எவ்வளவு பெரிய கவிப்புலமை.. உனது புலமைக்கு பரிசாக அந்த காவிரியோரம் புதிதாக உருவாகி இருக்கிற ஆயிரம ஏக்கர் விளைநிலங்களும் உனக்கே சொந்தம். அந்த நிலங்களை உருவாக்கிய பாட்டாளிகள் இருக்கும் அந்த கிராமத்தையும் உனக்கே கொடுக்கிறேன்.
அந்த கிராமம் இனிமேல் என் பெயரில் அதிவீர மங்கலம் என்று அழைக்கப்படும் என்று ஒரே தீர்ப்பில் பலபத்தாண்டு உழைப்பை.. பல குடும்பங்களின் வயிற்றெரிச்சல் பொங்கப் பொங்க அவ்வளவு நிலத்தையும் அள்ளி தான் விருப்பப்பட்டவனுக்கு வாரிக் கொடுப்பான்.
காட்டைத் திருத்தி விளைநிலமாக்கப் பாடுபட்ட குடும்பங்களில் குறைந்தது நூறு பேர் அந்த உழைப்பின் போது பாம்பு கடித்து.. பாறை விழுந்து இறந்திருப்பான். அத்தனை உயிர் தியாகங்களையும் ம**யிரே என மதித்து எவனோ ஒரு சோம்பேறிப் புலவனுக்கு அள்ளிக் கொடுத்தானே.. அந்த ம**யிருக்கு யார் கொடுத்தது அந்த உரிமையை என்று கேட்க முடியாத காலகட்டம்தான் பெரு மன்னர்களின் காலம்..
இன்று தம்பி இளையராஜாவோடு பேசிக் கொண்டிருந்தபோது இந்த பழைய உணர்ச்சிகள் எல்லாம் கொந்தளித்து வெளியே வந்தன..
இப்போது வரை சரித்திரப் படங்கள் என்று அவாள் அழைக்கும் வரலாற்றுப் படங்கள் அனைத்துமே மன்னர்கள் பற்றிய கதைகளை மட்டுமே பேசுகின்றன.. இந்த மன்னர் கதைகளைப் பார்த்து விட்டு நான் சோழன் நான் சேரன்.. நான் பாண்டியன் என்று உலாவுகிற பைத்தியக்காரத் தனங்கள் வேறு..
அன்பு நண்பர்களே.. உண்மையில் நீங்கள் நான் சோழன்.. நான் சேரன்.. நான் பாண்டியன் என்று சொல்வதே தவறு.. நான் சோழ தேசத்து அடிமை.. நான் பாண்டிய தேசத்து அடிமை.. நான் சேர தேசத்து அடிமை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஏனென்றால் வரலாற்றில் உங்களைப் போன்ற சாமானியர்களுக்கு எல்லாம் இடமே இல்லை.. அரசன் வந்து செத்துப் போ என்றால் சந்தோசமாக செத்துப் போகும் அடிமைகள்தாம் நீவிர்.. உம் வீட்டில் பிள்ளைகள் பசியால் செத்தாலும். காசு இல்லாமல் நீங்கள் பிச்சை எடுத்தாலும் கவலையே படாத சோம்பேறிதான் உங்கள் தேசத்து அரசன்கள்..
என்னைப் பொறுத்த வரைக்கும் வரலாற்றுக் கதைகளை எடுக்க வேண்டுமென்றால் மக்களின் கதைகளைத்தான் எடுக்க வேண்டும்.. சொந்த தேசத்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து உண்டு கொளுத்த இந்த மகாராசாக்களின் கதைகளை எத்தனைகாலம்தான் கேட்டுக் கேட்டு புல்லரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை..
கடைசியாக சொல்லவருவது என்னவென்றால் பொன்னியின் செல்வன் என்ற நாவலே சரித்திரப் புரட்டுதான். வரலாற்று உண்மையை அநியாயமாக திரித்து எழுதி திசை திருப்பிய ஒரு புனைவுதான்.. அதை படமாக எடுத்ததில் எனக்கு எந்த மகிழ்வும் இல்லை. வருத்தமும் இல்லை. ஆனால் அதை உண்மை வரலாறு என்றே நம்பி சண்டை போட்டுக் கொள்ளும் இந்த அடிமைகளை நினைத்தாலதான் எரிச்சலும் கோபமும் மண்டிக் கொண்டு வருகிறது.
இந்த பதிவுக்கு என்ன மாதிரி எதிர்வினைகள் வரும் என என்னால் ஓரளவு கணிக்க முடிகிறது. இதில் நிறைய பேரின் உண்மை முகங்கள் தெரிய வரக் கூடும்.. எதாவது கமெண்டுக்கு பதில் சொல்லத் தோன்றினால் சொல்வேன். இல்லை என்றால் சொல்ல மாட்டேன். அது என்னுடைய இஷ்டம்.. இது என்னுடைய கருத்து.. அவ்வளவுதான். மற்றபடிக்கு நீங்கள் என்ன பேசினாலும் எனக்கு கவலை இல்லை.
டாட்..

Leave A Reply