தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

Share

காங்கிரஸ் சார்பில் நடத்தப்படவிருக்கும் ஏர் கலப்பை பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

ஆனால், விவசாயிகளை பாதுகாக்கும் விதமாகவே இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. இருப்பினும் இதனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும் விவசாயிகள் மேம்பாட்டுக்காகவும் 150 இடங்களில் ஏர் கலப்பை பேரணி நடைபெறவிருப்பதாக அண்மையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அந்த பேரணியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பங்கேற்கவிருப்பதாக அழகிரி அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறி இந்த ஏர் கலப்பை பேரணி நடக்க உள்ளதாகவும் இந்த பேரணி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply