திருமாவின் முடிவு… ஒரு திமுக காரனின் நெகிழ்வு!

Share

உடைந்து போன அண்ணன் திருமாவை பார்த்தேன்.

எனக்கு அரசியல் விவரம் தெரிந்த நாள் முதல் நேற்று வரை 25 ஆண்டுகாலம் நான் இந்த உடைந்த முகத்தை பார்த்தது இல்லை…

1000 எதிரிகளை ஒரு சொல்லால் வீழ்த்தும் வல்லமை பெற்றவர் அண்ணன் திருமா.
அவர் ஏன் இந்த சூழலுக்கு ஆளானார் என்று பார்த்தால், அதுவும் இந்த தேசத்தின் நலனுக்காகத்தான்.

அவர் திமுக_வை தூக்கி எறிந்து விட்டு சென்றிருக்க முடியும்..
அல்லது மக்கள் நல கூட்டணியை உருவாக்கியிருக்க முடியும் . ஆனால் செய்யவில்லை. ஏன்?

திருமா என்கிற ஒற்றை தலைவர் வெளியேறினால் புற்றீசல் போல மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள் வெளியேறுவார்கள். அப்படி வெளியேறினால் மீண்டும் தமிழகத்தை பாசிசவாதிகளிடம் விட்டு கொடுக்க நேரிடும், என்கிற காரணத்திற்காக உடைந்து போன முகத்தோடு நிற்கின்றார்.

ஒரு பக்கம் கட்சி காரர்களை சமாளிக்க வேண்டும். மறுபுறம் கட்சியை அங்கிகாரம் பெறவைக்க வேண்டும். மற்றெரு புறம் பாசிசத்தை எதிர்க்க திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும்.

இத்தனைக்கும் மத்தியில் தலைவர் திருமா தன்னை தானே தாழ்த்திக் கொண்டு தேசத்தை தூக்கி பிடித்தினுக்கின்றார் .

தலைவன் என்பவன் தன்னலம் இல்லாதவன் தான் தலைவன். தன்னலத்தோடு நடப்பவன் தலைவன் அல்ல சுயநலவாதி.

இன்று நடந்த நிகழ்வில் தலைவர் திருமா தன்னை தாழ்த்திக் கொண்டு . தன் தோழர்களை சமாதானம் செய்து கொண்டு தன்னுடைய 30 ஆண்டுகால அரசியல் கனவை ஒத்தி வைத்து இசைவு கொடுத்திருக்கின்றார் கூட்டணிக்கு.

எத்தனை பெரிய வீரர் அண்ணன் திருமா,
எந்த கொம்பனாலும் கருத்தியலில் வெள்ள முடியாத அண்ணன் திருமா,
தேச நலனுக்காக தன்னை, தன் இயக்கத்தை தாழ்த்துக் கொண்டார்.
அடிப்படை திமுக உறுப்பினர் என்கிற முறையில் கேட்கிறேன், 6 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்து தமிழகத்தில் அங்கிகாரம் பெற்ற இயக்கமாக விசிகவை மாற்ற உதவிட வேண்டும்.

வீரமணி கி
வயலூர்

Leave A Reply