மருத்துவத்துறையில் இட மாறுதலுக்கு உலவும் ரேட் கார்டுகள் – Ravishankar Ayyakkannu

Share

ஆவின் பால் ஒரு லிட்டர் 40 ரூபாய் என்பது போல்,

தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையில் சில rate cardகள் உலவி வருகின்றன.
செவிலியர் இட மாற்றம் – 3 முதல் 4 லட்சம்
மருத்துவர் இட மாற்றம் – 5 முதல் 6 லட்சம்
மருத்துவர் Deputation – 6 முதல் 8 லட்சம்.
சென்ற அதிமுக ஆட்சியில் ஒட்டு மொத்தமாகவே அனைத்து இட மாறுதல்களும் இலஞ்சம் வாங்கிக் கொண்டு தந்தார்கள்.
இந்த ஆட்சியில் வெளிப்படையாக கலந்தாய்வு நடத்தப்பட்டு பலரும் ஒரு பைசா செலவில்லாமல் இட மாறுதல் பெற்று வருகின்றனர். யாரும் இட மாறுதல் சிபாரிசு கேட்டு என்னைத் தேடி வராதீர்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சர் தன் அறையின் கதவில் நோட்டீசே அடித்து ஒட்டியிருக்கிறார். இந்த ஒரு விசயத்திற்காக அவரைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்.
அதே வேளை,
“துறையில் இலஞ்சம் முற்றிலுமாக ஒழிந்த பாடில்லை. கலந்தாய்வில் காலிப் பணியிடங்களைக் காட்டாமல் முடக்கி வைத்தும், மருத்துவர்கள் செவிலியர்களுக்குக் காலிப் பணியிடங்கள் இல்லாத ஊர்களுக்குச் சிறப்பு இட மாற்றம் தந்தும், மேற்கண்ட rate cardன் படி இலஞ்சம் தொடர்கிறது” என்றும் குற்றச்சாட்டு எழுகிறது.
இந்த இலஞ்ச லாவண்யத்தில் அமைச்சருக்குத் தொடர்பில்லை என்றும் யாருக்குப் பணம் போகிறது எனத் தெரியவில்லை என்றும் மாற்றி மாற்றி ஆளுக்கு ஆள் கை காட்டுகிறார்கள்.
கட்சியும் ஆட்சியும் நேர்மையாக நடக்க முனையும் போது, முந்தைய ஆட்சியின் புரோக்கர்கள் யாரேனும் ஊடே புகுந்து குழப்பம் விளைவிக்கிறார்களா என்ற கோணத்தில், முதலமைச்சர் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இல்லாவிட்டால், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதே அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் குரலாக ஒலிக்கிறது.

Leave A Reply