ஜெ.அன்பழகன் எனும் செயல்வீரர்

Share

ஜெ.அன்பழகன்

இவர் திமுக குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா பழக்கடை ஜெயராமன் இவரும் திமுகவில் பொறுப்பில் இருந்தவர்.

ஜெ.அன்பழகன் அவர்கள் 2001 ஆம் ஆண்டு T.nagar எம்எல்ஏவாக தேர்தெடுக்கப்பட்டு சட்டசபையில் ஆளும்கட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.

2011 ல் கலைஞரின் தொகுதியான சேப்பாக்கத்தில் போட்டியிட்டு வென்றார். மீண்டும் சட்டசபையில் ஆளும்கட்சியை அதிர வைத்தார்.

2016ல் மீண்டும் அதே சேப்பாக்கம் தொகுதியில் வென்றிருக்கிறார்.இப்போதும் சட்டசபையில் அதே வெட்டு ஒண்ணு துண்டு இரண்டு பாணி பேச்சுதான்

இன்றைய திமுகவில அதிரடியாக கருத்துகளை வைப்பதும் இவரே. கட்சி தலைமை முன்பே தனது கருத்துகளை தயங்காமல் வைத்து கட்சியே முக்கியம் என்று வாழ்பவர் எந்த இடத்திலும் தனது உரிமையை விட்டுகொடுக்காதவர். இதற்கு சட்டசபை மு.க. ஸ்டாலின் நிருபர் சந்திப்பு சம்பவமே உதாரணம்.

இவரை திமுகவில் செயல் வீரர் என கூறுவதை விட செலவு வீரர் என்று கூப்பிட்டால் மிகையாகாது. சென்னையில் நடக்கும் விழாக்கள் மாநாடுகள் எல்லாம் இவர் மாவட்ட செயலாளராக இருக்கும் பகுதிகளில்தான் பெரும்பான்மையாக நடக்கும். அனைத்தையும் வெற்றிகரமாக நடத்தி கொடுப்பவர்.

இவரது பேச்சுகளும் பேட்டிகளுமே அதிரடி ரகம்தான் பழக்கடையில் ஆரம்பித்து எம்எல்ஏவாகி சினிமா விநியோகம், தயாரிப்பு என அனைத்திலும் கால்பதித்த இவருக்கு அமைச்சர் பதவி மட்டுமே மிச்சமாக இருந்தது. அதற்குள் கொரொனா பறித்து கொண்டது

Rajsekar

Leave A Reply