உதயநிதி ஆதரவாளர்களும் சரியில்லே – அவருடைய டீமும் சரியில்லே! LR Jagadheesan

Share

உதயநிதி ஆதரவாளர்களும் சரியில்லே; அவர் வெச்சிருக்கறதா சொல்லப்படும் PR Teamம் சரியில்லே.

தொழில் நேர்த்தி தெரிஞ்சவங்களா இருந்திருந்தா இந்நேரம் அவர் எளிமையின் சின்னம் அதனாலதான் எந்நேரமும் ஹவாய் செருப்பு மட்டுமே போடறாரு. மூப்பனாருக்கப்புறம் ஹவாய் செருப்பு மட்டுமே அணியும் ஒரே எளிமையான அரசியல்வாதி எங்கண்ணன்னு தெறிக்கவிடடிருக்கவேணாம்?

காந்திய கொன்னதை இன்னைய வரைக்கும் நியாயப்படுத்தற சித்தாந்த்தத்தின் சார்பில் சட்டமன்றத்துக்கு தேர்வானவரு பேரு காந்தி. அவரு செருப்பு போடலேங்கறதுக்கு ஆளுக்கொரு வியாக்கியானம். வேலிக்கு ஓணான் சாட்சிங்கற கதையா அதைக்கேட்டு ஆஹா ஓஹோன்னு புல்லரிக்கும் ஊடகங்கள்.

கோடிக்கணக்கானபேர் செருப்பில்லாம வாழற ஊர்ல; கோடிக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெறுங்காலோட பல நூறுமைல் ரத்தம் வடிய பசியோடு நடந்து களைத்ததில் சிலபலர் செத்தே போன காலத்துல ஒரு ஆளு செருப்பு போடலேன்னு கொடுக்கற அந்த buildupஐ பார்த்தாவது உதயநிதி ஆதரவாளர்கள் தொழிலை கத்துக்குங்க. வெத்து ஜம்பத்தை எப்படி உருவாக்கறதுன்னு.

குடும்பமா குட்டியான்னு சொல்லி பதவிக்கு வந்த பிரதமர் ஆட்சியில் தான் குடும்பம் குடும்பமா செத்து மடியுது ஜனம். இதுல செருப்பின் சிறப்புன்னு கிளம்பிட்டாங்க.

இப்படித்தான் இதுக்கு முன்னாடி கோவில்ல வெச்சி துள்ளத்துடிக்க ஒருத்தர வெட்டிக்கொன்ன கொலை கேசுல உள்ளபோன லோக குரு ஒருத்தரு வாழை இலை கேட்டுதுன்னு முன்னாடி உருட்டுனாங்க. எதுக்குங்குறதெல்லாம் எல்லாருக்கும் தெரியும். உள்ள போனது கொலை கேசுல. வெளிக்குப்போக வாழை இலை. கெரகம். இதுகளும் இதுக அவுத்துவிடற கதை கண்றாவிகளும் புனித புளுகுகளும்.

Leave A Reply