100 சதவீத யோக்கியர் இருந்தால் வைரமுத்துவை குறை சொல்லுங்கள்! – ஆதனூர் சோழன்

Share

சின்மயி யோக்கியமாகவே இருக்கட்டும்.

வைரமுத்து அயோக்கியராகவே இருக்கட்டும்.

இந்த உலகத்தில் 100 சதவீத யோக்கியர் என்று யாரேனும் உண்டா?

அப்படி எதிர்பார்த்தால் யாரேனும் ஒருத்தர் தேறுவாரா?

அதிலும் செக்ஸ் விஷயத்தில் மனதளவில்கூட 100 சதவீத யோக்கியர் யாரும் தேற மாட்டார்கள்.

வைரமுத்து மீது காலங்கடந்து சின்மயி வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னணி ரொம்ப தெளிவானது. சின்மயியை அவர் கைகழுவிவிட்டு வேறு பெண்களுடன் தொடர்பில் சென்றுவிட்டார்.

அவரிடமிருந்து அதுவரை கிடைத்த பலன் கிடைக்காத நிலையில், ஆண்டாள் விவகாரத்தில் போராட்டம் பல்லிளித்த நிலையில் சின்மயி விவகாரம் வந்தது என்பதே உண்மை…

வைரமுத்து அவதூறு வழக்கு தொடரவில்லை என்பதற்கு, வீணாக ஏன் தினசரி செய்தியாக்க வேண்டும் என்பதாக இருக்கும்.

ஆனால், வைரமுத்துவை குற்றம்சாட்டும் சின்மயி எடுத்த சட்ட நடவடிக்கை என்ன?

ஒஎன்வி விருது இலக்கியத்தில் பங்களிப்பு என்ற அடிப்படையில் தருவதே தவிர,

தனிப்பட்ட நபர்களின் ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டு அல்ல என்று தேர்வு குழுவே சொல்லிவிட்ட நிலையில்,

இந்த விவகாரத்தை ஜவ்வாக இழுப்பது தேவையற்றது என்பது எனது கருத்து..

வைரமுத்துவை தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றாலும்…

அவருடைய தமிழை ருசித்தவன் என்பதற்காக அவரை ஆதரிக்கிறேன்…
சின்மயியின் யோக்கியதை குறித்தும் அவருடைய நேர்மை குறித்தும் எனக்குள்ள சந்தேகம் வலுவானது…

வைரமுத்து சின்மயிக்கு பாலியல் ரீதியான சீண்டல்களை கொடுத்தாரா? அல்லது தன்னுடன் சேர்த்து வாழ்ந்தாரா?

பாலியல்ரீதியாக சீண்டினாரா அல்லது, சின்மயி தன்னுடன் படுத்தால்தான் அவருக்கு பாடல் வாய்ப்பு கொடுப்பேன் என்று மிரட்டி பணிய வைத்தாரா?

இது உண்மையானால், சின்மயியை எத்தனை ஆண்டுகள் இப்படி மிரட்டி பணியவைத்தார்?

பாடல் பாடி அதில் கிடைக்கும் சம்பளத்திற்காக வைரமுத்துவின் மிரட்டல்களுக்கு பணியும் நிலைமையில் இருந்த சின்மயி, தனது திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்து, அத்தகைய காமக் கொடூரனின் காலில் விழுந்து ஆசி வாங்கியது ஏன்?

இதுவரை தனக்கு கொடுத்த மிரட்டல்களை தொடர்ந்து கொடுத்து ஆதரிக்கும்படி வேண்டிக் கொண்டாரா?

கேக்குறவன் கேனயனாக இருந்தால் சின்மயி மாதிரி ஒரு பாடகி உலகத்திலேயே கிடையாது என்பீர்களா?

Leave A Reply