பேபிகார்ன் – பெப்பர் ஃப்ரை

Share

தேவையானவை: பேபிகார்ன் 10-15 (நீளவாக்கில் வெட்டவும்), குடமிளகாய், தக்காளி தலா 2, வெங்காயம் – ஒன்று, வெங்காயத்தாள் அரை கட்டு, இஞ்சி – சிறிய துண்டு, மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன், அஜினோமோட்டோ முக்கால் டீஸ்பூன், கடலை மாவு – 3 டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு , விழுது – அரை டீஸ்பூன், சோயா சாஸ் ஒன்றரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை: குடமிளகாய், தக்காளி, , வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். நீளவாக்கில் வெட்டிய பேபி கார்னில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, இஞ்சி – பூண்டு விழுது, கால் டீஸ்பூன் அஜினோமோட்டோ, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து, அரை மணி நேரம் ஊறவிட்டு, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தோல் சீவி நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் குடமிளகாய், தக்காளி, மிளகுத்தூள், பொரித்த பேபிகார்ன் சேர்த்துக் கிளறவும். சோயா சாஸ், மீதமுள்ள அரை டீஸ்பூன் அஜினோமோட்டோ சேர்த்து மேலும் கிளறி, சோள மாவை கரைத்துவிட்டு, 2 நிமிடம் கொதிக்கவிட்டு, நறுக்கிய வெங்காயத்தாள் தூவி கிளறி இறக்கவும்.

பூரி, சப்பாத்தி, நாண், புல்கா, ஃப்ரைடு ரைஸ் ஆகியவற்றுக்கு இது சூப்பர் டிஷ். இதை தனியாகவும் சாப்பிடலாம்.

Leave A Reply