சிக்கன் மிளகாய் பஜ்ஜி

Share

தேவையான பொருட்கள்

சிக்கன் சமைக்க

சிக்கன் – 200 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர்

சிக்கன் நிரப்புதல்

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
வெங்காயம் – 1 (நறுக்கிய)
பச்சை மிளகாய் – 1 (நறுக்கிய)
இஞ்சி – 1 (நறுக்கிய)
பூண்டு – 6 பற்கள் (நறுக்கிய)
தக்காளி – 2 (நறுக்கிய)
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு
கொத்தமல்லி இலைகள்

பஜ்ஜி மாவு தயாரிக்க

கடலை மாவு – 2 கப்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – 1/2 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர்

செய்முறை

சிக்கன் சமைத்தல்

 1. குக்கரில் சிக்கன் , இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்
 2. சிக்கன் வெந்த பிறகு குக்கரில் மீதமுள்ள வேகவைத்த சிக்கன் தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்

சிக்கன் நிரப்புதல்

 1. வெந்த சிக்கன் துண்டுகளை சிறிது நேரம் ஆற வைத்துவிட்டு சிக்கன் துண்டுகளை சிறிது சிறிதாக பிய்த்து வைத்துக்கொள்ளவும்
 2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும், பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு ஆகியவற்றை சிவக்கும் வரை வதக்கவும்
 3. அதன் பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்
 4. இப்போது பிய்த்து வைத்துள்ள சிக்கனை கடாயில் சேர்த்து கலக்கவும்
  5 ஐந்து நிமிடம் கழித்து வேகவைத்த சிக்கன் தண்ணீரை கடாயில் சேர்த்து வதக்கியவற்றுடன் கலக்கவும்
 5. இறுதியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்து தனியாக எடுத்து வைக்கவும்

பஜ்ஜி மாவு

 1. ஒரு கப்பில் கடலை மாவு, மிளகாய் தூள், ஓமம் ,உப்பு,தண்ணீர் ஆகியவற்றை கலந்து பஜ்ஜி மாவு தயாரிக்க வேண்டும்

சிக்கன் மிளகாய் பஜ்ஜி

 1. ஒரு பஜ்ஜி மிளகாயை நடுவில் கீறி அதன் விதைகளை நீக்க வேண்டும்
  ஏற்கனவே தயாரித்த சிக்கன் கலவையை மிளகாயின் உள்ளே நிரப்ப வேண்டும்
 2. பின்னர் அதை பஜ்ஜி மாவில் தோய்த்து, எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொறிக்க வேண்டும்.
 3. சூடான மற்றும் சுவையான சிக்கன் மிளகாய் பஜ்ஜி தயார்.

Leave A Reply