முட்டைகலக்கி

Share

தேவையான பொருட்கள்

கறி முட்டை கலக்கி செய்ய

முட்டை – 1
மிளகாய் தூள் – தேவைக்கு ஏற்ப
உப்பு – தேவைக்கு ஏற்ப
மிளகு – தேவைக்கு ஏற்ப
கோழி குழம்பு – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி

முட்டை கலக்கி செய்ய

முட்டை – 2
மிளகாய் தூள் – தேவைக்கு ஏற்ப
உப்பு – தேவைக்கு ஏற்ப
மிளகு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை
கறி முட்டை கலக்கி செய்ய

 1. ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் சிக்கன் குழம்பு சேர்த்து நன்கு அடிக்கவும்.
 2. தவாவில் எண்ணெய் ஊற்றி, அடித்த முட்டை கலவையை ஊற்றவும்.
  ஊற்றியவுடன் கரண்டியால் முட்டையின் ஓரத்தை உள்புறமாக மூடவும்.
 3. முட்டை கலவை திரண்டவுடன் அதை தவாவிலிருந்து உடனடியாக தட்டிற்கு மாற்றவும்.
 4. கறி முட்டை கலக்கி தயார்.

முட்டை கலக்கி செய்ய

 1. ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு அடிக்கவும்.
 2. தவாவில் எண்ணெய் ஊற்றி, அடித்த முட்டை கலவையை ஊற்றவும்.
  ஊற்றியவுடன் கரண்டியால் முட்டையின் ஓரத்தை உள்புறமாக மூடவும்.
 3. முட்டை கலவை திரண்டவுடன் அதை தவாவிலிருந்து உடனடியாக தட்டிற்கு மாற்றவும்.
 4. முட்டை கலக்கி தயார்.

Leave A Reply