பிரஷர் குக்கர் சாக்லெட் கேக்

Share

தேவையான பொருட்கள்

மைதா – 1 1/2 கப்
சர்க்கரை – 1 கப்
கோகோ பவுடர் – 1/4 கப்
பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 1/2 கப்
பால் – 1 கப்
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
வெந்நீர் – 1/2 கப்
எண்ணெய்
மைதா
பிரெஷ் கிரீம் – 200 மில்லி
டார்க் சாக்லேட் – 250 கிராம்
சாக்லேட் வேஃபர்ஸ்

செய்முறை

 1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்.
 2. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய், பால் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து மைதா மாவு கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
 3. இதில் வெந்நீர் ஊற்றி மற்றுமொருமுறை கலக்கவும்.
 4. கேக் செய்யும் பாத்திரத்தில் எல்லா பக்கமும் எண்ணெய் தடவிய பின், சிறிது மைதா மாவு போட்டு எல்லா பக்கமும் தட்டி எடுத்து தயார் செய்து கொள்ளவும்.
 5. பிரஷர் குக்கரில் கல்லுப்பு பரப்பி அதன்மேல், ஒரு ஸ்டாண்ட் வைத்து கேக் பாத்திரத்தை உள்ளே வைக்கவும்.
 6. பிரஷர் குக்கரை மூடி மிகவும் குறைந்த தீயில் 90 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும்.
 7. 90 நிமிடங்கள் கழித்து வெளியில் எடுத்து ஆறவிடவும்.
 8. மற்றொரு பாத்திரத்தில் பிரஷ் கிரீம் மற்றும் டார்க் சாக்லேட் போட்டு குறைந்த தீயில் சூடாக்கவும்.
 9. சாக்லேட் உருகியதும் அடுப்பிலிருந்து எடுத்து ஆறவிடவும்.
 10. ஆறிய கேக்’கின் மீது செய்த சாக்லேட் சாஸ் ஊற்றவும். எல்லா பக்கமும் படும்படி ஊற்றவும்.
 11. இறுதியாக சாக்லேட் பேப்பர் கொண்டு அலங்கரிக்கவும்.
 12. முட்டை இல்லாத சாக்லேட் கேக் தயார்.

Leave A Reply