காஜு கட்லி

Share

தேவையான பொருட்கள்

முந்திரி – 1 1/2 கப்
தண்ணீர் – 1/2 கப்
சர்க்கரை – 3/4 கப்
ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி

செய்முறை

  1. காஜு கட்லி செய்வதற்கு மிக்சியில் முந்திரி பருப்பை சேர்த்து நன்கு தூளாக அரைத்துக்கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சவும்
  3. சர்க்கரை தண்ணீருடன் ஏலக்காய் தூள் தூள் சேர்த்து நன்கு காய்ச்சவும்
  4. இதில் அரைத்த முந்திரி தூளை சேர்த்து குறையான தீயில் நன்கு கலக்கவும்
  5. சிறிது நேரம் கலக்கிய பின்பு இந்த கலவையை மிருதுவாக்க சிறிது நெய் சேர்த்து நன்கு கலக்கவும்
  6. இந்த கலவை மாவு பதம் வந்தவுடன் எடுத்து நெய் தடவிய பட்டர் பேப்பரில் ஊற்றில் பட்டர் பேப்பரை மூடி சப்பாத்தி கட்டையை வைத்து சற்று தடிமனாக தேய்த்து வைக்கவும்
  7. அடுத்து நெய் தடவிய கத்தியில் உங்களுக்கு விருப்பமான அளவில் வெட்டி பரிமாறவும்
  8. சுவையான மற்றும் மிகவும் எளிமையான காஜூ காதலி தயார்

Leave A Reply