வெந்தயக்கீரை பிரியாணி

Share

தேவையான பொருட்கள்

வெந்தயக்கீரை – 1,
பிரியாணி அரிசி – 1/2 கிலோ,
தேங்காய்ப்பால் – 1 கப்,
சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 2,
கறிவேப்பிலை – 10,
தேங்காய் எண்ணெய்- தேவைக்கு,
கிராம்பு, ஏலக்காய், பட்டை- தலா 2,
பூண்டு – 10,
வரமிளகாய் – 2,
கொத்தமல்லி பவுடர் – 1½ டீஸ்பூன் சேர்த்து அரைக்கவும்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கீரையை வதக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் நெய், தேங்காய் எண்ணெய், கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து பின் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளியை மிக்சியில் அரைத்து ஊற்றவும். மசாலாவை வதக்கியவுடன் வெந்தயக்கீரை, அரிசி சேர்த்து தேவையான அளவு தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வைக்கவும். பின் ஆறியவுடன் பரிமாறினால் கமகமக்கும் ஆரோக்கியமான வெந்தயக்கீரை பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறவும்.

Leave A Reply