நார்த்தங்காய் பச்சடி

Share

தேவையான பொருட்கள்

நார்த்தங்காய் பெரியது – 1,
காய்ந்த மிளகாய் – 3,
பச்சை மிளகாய் – 1,
சாம்பார் வெங்காயம் – 10,
தனியா – 2 டேபிள் ஸ்பூன்,
வெல்லம் – 1/2 கப்,
புளி கரைசல் – 1/2 கப்,
பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு, கறிவேப்பிலை – தேவையான அளவு,
கடுகு – 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 1/2 கப்.

செய்முறை

நார்த்தங்காயை சிறியதாக நறுக்கி, விதைகளை நீக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தைத் தூள் செய்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். நார்த்தங்காய், உப்பு சேர்த்து வதக்கி, பின்னர் புளி கரைசல் சேர்க்கவும். நார்த்தங்காய் மென்மையாகும் வரை வேக விடவும். காய்ந்த மிளகாய், தனியாவை மற்றொரு வாணலியில் சேர்த்து நன்கு வறுத்துப் பொடிக்கவும். வெந்துவரும் கலவையில் பெருங்காயத்தூள், பொடி, வெல்லத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். வாய்க்கசப்பு, வாந்தி போன்ற பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகும்

Leave A Reply