மீல்மேக்கர் ஃப்ரை

Share

தேவையான பொருட்கள்

மீல் மேக்கர் – 1 கப் ( ஊற வைத்து பிழிந்து எடுக்கவும்),
இஞ்சி,
பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்,
கார்ன் ஃப்ளவர் மாவு – 1 டீஸ்பூன்,
அரிசி மாவு – 1½ டீஸ்பூன்,
தயிர் – 1/2 கப்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்.

செய்முறை

மீல் மேக்கரை 1/2 மணி நேரம் ஊற வைத்து பின் அதை பிழிந்து ஆற விடவும். அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட், கார்ன் ஃப்ளவர் மாவு, அரிசி மாவு, தயிர், மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இதை 1/4 மணி நேரம் ஊற விடவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி deep fry செய்துகொள்ளவும். (மிதமான சூட்டில்) இரண்டு முதல் நான்கு நிமிடம் வரை வேக வைக்கவும்.

குறிப்பு: மீல் மேக்கரை பொரிக்கும்போது அதனுடைய அளவு பெரிதானவுடன் இறக்கி விடவும்.

Leave A Reply