கோதுமை புட்டு

Share

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கப்,
சர்க்கரை – 1/4 கப்,
ஏலப்பொடி – 1/2 டீஸ்பூன்,
நெய் – 3 டேபிள் ஸ்பூன்,
உடைத்த முந்திரித்துண்டுகள் – 2 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

கோதுமை மாவினை வெறும் வாணலியில் வாசனை (லேசாக வர ஆரம்பிக்கும் வரை) வறுக்கவும். சூடாக இருக்கும்போதே தண்ணீர் தெளித்து கைகளால் பிடிக்கும் பதம் வந்ததும் இட்லி பானையில் இட்லித்தட்டில் ஆவியில் 8 நிமிடங்கள் வேக விட்டு வைத்திருந்து எடுத்து கைகளால் உதிர்த்து விடவும். சற்று ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை சேர்த்து ஏலப்பொடி சேர்த்து நெய்யில் தேங்காய்த்துருவல், முந்திரித்துண்டுகள் வறுத்து அதனையும் சேர்த்துக் கலந்து விடவும்.

Leave A Reply