பசலைக்கீரை புலாவ்

Share

தேவையான பொருட்கள்:

 • பாலாக் இலைகள்
 • நெய் – 2 மேசைக்கரண்டி
 • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
 • இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு , அன்னாசி பூ , சீரகம் & பிரியாணி இலை
 • வெங்காயம் – 1
 • பச்சை மிளகாய் – 2
 • இஞ்சி பூண்டு விழுது – 1/2 மேசைக்கரண்டி
 • மஞ்சள் தூள் – 1/4 மேசைக்கரண்டி
 • மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
 • மல்லி தூள் – 1 மேசைக்கரண்டி
 • சீரகம் தூள் – 1 மேசைக்கரண்டி
 • கரம் மசாலா தூள் – 1 மேசைக்கரண்டி
 • உப்பு – 1 மேசைக்கரண்டி
 • ஊறவைத்த பாஸ்மதி அரிசி – 1 கப்
 • தண்ணீர் – 2 கப்

பசலைக் கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து, அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து லேசாக வேக வைத்து மிக்ஸி யில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, பெருஞ்சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

பிறகு உப்பு, அரைத்த கீரை விழுது சேர்த்து வதக்கி, ஒன்றரை கப் நீர் சேர்க்கவும்.

நன்கு கொதித் ததும் கழுவிய அரிசியை சேர்த்து நன்றாக கிளறி, ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைக்கவும்.
பின் 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாற வும்.

Leave A Reply