எளிய மருத்துவக் குறிப்புகள் – 39. வயிற்றுப்போக்கு தீர மாவிலை!

Share

மா இலையைச் சுட்டு வெண்ணெயில் குழைத்து தீப்புண், காயங்கள் மீது தடவ விரைவில் ஆறும்.

மாந்தளிரை மென்று தின்று வர, பல் ஈறு உறுதிப்படும்.

மா இலையைத் தீயிலிட்டுப் புகையை சுவாசிக்கத் தொண்டை வலி மாறும்.

இதன் துளிர் இலைகளைப் பொடியாக்கி, தேனில் குழைத்து உண்ண, வயிற்றுப்போக்கு நிற்கும்.

உலர்ந்த பூக்களை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி வயிற்றுப் போக்கின் போது அடிக்கடி குடித்திட வயிற்றுப்போக்கு நிற்கும்.

மாங்கொட்டை பருப்பைப் பொடியாக்கி வெண்ணெயில் கலந்து தின்ன, வயிற்றுவலி குணமாகும்.

Leave A Reply