மசாலா டீ

Share

மசாலா டீ
தேவையான பொருட்கள்

சுக்கு – சிறிய துண்டு
பட்டை – சிறிய துண்டு
முழு மிளகு – 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் – 5
கிராம்பு – 6
தண்ணீர் – 1 கப்
டீ தூள் – 2 தேக்கரண்டி
பால் – 1 கப்
சர்க்கரை – 2 தேக்கரண்டி

செய்முறை:

 1. டீ மசாலா செய்ய, மிக்ஸில், சுக்கு, பட்டை, முழு மிளகு, ஏலக்காய் , கிராம்பு சேர்த்து தூளாக அரைக்கவும்.
 2. பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி, டீ மசாலா தூள் சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிடவும்.
 3. அடுத்து டீ தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.
 4. இதில் பால் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
 5. இறுதியாக சர்க்கரை சேர்த்து கிண்டவும்.
 6. மசாலா டீ தயார். வடிகட்டி பரிமாறவும்.

கீரை போண்டா
தேவையான பொருட்கள்

அரை கீரை – 1/2 கட்டு
கடலை மாவு – 2 கப்
உப்பு
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
தண்ணீர்
சமையல் சோடா – 1 சிட்டிகை
எண்ணெய்

செய்முறை:

 1. கீரை’யை சுத்தம் செய்து, நறுக்கவும்.
 2. இதில், கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் போட்டு கலந்து விடவும்.
 3. இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறவும்.
 4. போண்டா மாவு, விழும் பதத்தில் இருக்க வேண்டும்.
 5. கடாயில் தேவையான அளவு, எண்ணெய் ஊற்றி, சூடாக்கவும்.
 6. இதில் சிறிதளவு போண்டா மாவு போட்டு, பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
 7. இதை தேங்காய் சட்னி’யுடன் பரிமாறவும்.

Leave A Reply