மனிதகுல வரலாறு – கிரேக்க அரசுகள்

Share

கிரேக்க தேசத்தின் ஒவ்வொரு மாநிலமும் போலிஸ் என்று அழைக்கப்பட்டது.

ஒரு நகரம் அதைச் சுற்றிலும் கிராமங்கள் என இந்த போலிஸ் அமைந்திருந்தது. போலிஸ் என்ற வார்த்தை இப்போதும் பல்வேறு ஆங்கில வார்த்தைகளில் கலந்திருக்கிறது.

பாலிடிக்ஸ், போலிஸ், மெட்ரோபோலிஸ் என போலிஸ் என்ற பதம் பல வார்த்தை களில் உள்ளடங்கி இருக்கிறது.

ஒவ்வொரு போலிஸ் அல்லது மாநிலத்தின் நடுவிலும் குன்றுபோன்ற மேடு உருவாககப்பட்டு இருக்கும்.

அந்தக் குன்றின் மேல் கோவில் கட்டப்பட்டு இருக்கும். இந்தக் குன்றுக்கு அக்ரோ போலிஸ என்று பெயர். இதன் அடிவாரத் தில்தான் வர்த்தகம் நடைபெறும்.

எல்லா போலிஸ்களும் தங்கள் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்கியிருந்தது.

அவர்கள் தங்களுடைய தலைவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கப்படுவதில்லை

Leave A Reply