ரோமானியர்கள் தங்களைச் சுற்றி இருந்த மக்களிட மிருந்தே மத நம்பிக்கைகளைப் பெற்றனர்.
தங்களுக்கு முன் வாழ்ந்த எட்ரூஸ்கன் வம்சத்தினர் வழிபட்ட சக்திகளையே புதிய பெயரை சூட்டி ரோமானியரகள் வழிபட்டனர்.
எட்ரூஸ்கர்கள் ‘ஜீயஸ்’ என்று அழைத்த கடவுளை ரோமானியர்கள் ஜூபிடர் என அழைத்தனர். ஏரிஸ், “மார்ஸ்” எனவும் அப்ரோடைட் “வீனஸ்” எனவும் அழைக்கப்பட்டது.