மனிதகுல வரலாறு – கிரேக்கர்களும், மைசீனியர்களும்

Share

புராதன கிரேக்கர்கள்
புராதன கிரேக்கர்கள் நவீன உலகிற்கு பல வழிகளில் அடித்தளம் அமைத்தவர்கள். அவர்களுடைய கலாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முதிர்ச்சி அடைந்தது.

ஆனால், அவர்களுடைய கோட்பாடுகள், கட்டிடக்கலை, அரசாட்சி முறை ஆகியவை தற்போதும் கூட பல மேற்கத்திய நாடுகளால் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் சரி. விளையாட்டு முதல் ஜனநாயகம் வரை நூற்றுக்கணக்கான கோடி மக்களிடம் கிரேக்கர்களின் பெருமை நீடித்த புகழுடன் வாழும். அந்த அளவுக்கு அவர்கள் எல்லாத் துறைகளையும் செதுக்கிச் செப்பனிட்டுச் சென்றுள்ளனர்.

ஏஜியன் கடல்
ஒரு பக்கம் மலைகளாலும் மற்ற 3 பக்கங்களிலும் ஏஜியன் கடலாலும் கிரேக்கர்கள் பாதுகாக்கப்பட்டனர். பால்கன் தீபகற்பத்தில் கிரேக்கர்களின் தாயகம் அமைந்த பகுதியில் ஆயிரக்கணக்கான உப்பங்கழிகளும், வளைகுடாக்களும் அமைந்திருந்தன.

இந்த வளைகுடாக்கள் துறைமுகத்துக்கு மிகவும் ஏற்றவையாகும். கடற்கரையிலிருந்து 50 மைல் தொலைவிலேயே எல்லா கிரேக்க நகரங்களும் அமைந்து இருந்தன.

கிரேக்கர்கள் வணிகம், மீன் பிடித்தல் மற்றும் பிற கடல் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டனர். பால்கன் தீபற்பத்தின் மலைகள், சாலைப் போக்குவரத்திற்கு இடையூராக இருந்தன.

கிரேக்கதேசத்தின் நகரங்களும், மாநிலங்களும் ஒன்றோ டொன்று தொடர்பு இல்லாமல் தனிமைப் பட்டவையாக இருந்தன. கிரேக்கர்கள் ஒரே மத்திய அரசின் கீழ் ஒருங்கி ணைந்து வாழவில்லை.

ஆனால், அதற்கு பதில் ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பின் கீழ் இயங்கியது. மத்திய தரைகடல் தீவுகள் பலவற்றையும், கடலோரப் பகுதிகளையும் கிரேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தனர்.


கிரேக்கர்களுக்கு முன்
கிரேக்கர்களின் ஆட்சி காலத்திற்கு முன், இதே பிரதேசத்தில் மற்றொரு நாகரிகம் பூத்து செழித்திருந்தது. அந்த நாகரிகத்திற்கு சொந்தமானவர்கள் மினோவர்கள்(Minoans) என்று அழைக்கப்பட்டனர். பல நூற்றாண்டுகளாக மினோவ வம்சத்தினர் வரலாற்றில் அறியப் படாமலேயே இருந்தனர்.

மினோவர்கள் என்பதே கற்பனையாக புனையப்பட்ட வம்சம் என்றும் நம்பப்பட்டது. பின்னர், ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டு வாக்கில், சர் ஆர்தர் ஈவான்ஸ் என்ற தொல்லியல் ஆய்வாளர் கிரேக்கர்களுக்கு முன் வாழ்ந்த வம்சத்தினரின் பழமையான அரண்மனையை அகழ்வாய்வில் கண்டுபிடித்தார்.


மைசீனியர்கள் (Myceneans)
மைசீனியர்கள் ஆசியாவின் மையப் பகுதியில் வாழ்ந்த வர்கள். மைசீனியர்களின் மக்கள் தொகை பெருகியதால், அவர்கள் பால்கன் தீபகற்பத்திற்குள் பரவலாக குடியேறினர்.

கி.மு. 1400களின் போது மைசீனியர்கள் மீனோவர்களை வெற்றி கொண்டு அந்தப் பிரதேசத்திலும் தங்கள் கலாச்சாரத்தை பரப்பினர்.

தங்கள் கிராமத்தை ஒட்டிய மலையைச் சார்ந்தும், மலை உச்சியிலும் மிகப்பெரிய கோட்டைகளைக் கட்டினர். தங்களுடைய மக்களை பாதுகாக்க இந்த ஏற்பாடுகளை செய்தனர். ஆபத்து சமயங்களில் இந்தக் கோட்டைகள் மக்களுக்கு புகலிடமாக இருந்தன.

கி.மு. 1100ல் மைசீனியர்களின் கோட்டைகள் சேதமடைந்தன. பராமரிப்பு இல்லாமலும், யுத்தத்தாலும் அவை சேதமடைந்தன. பிறகு அவை கிரேக்க மொழி பேசும் புதியவர்களால் வெற்றிகொள்ளப்பட்டன.

இவர்கள் டோரியர்கள் (Dorians) எனப்பட்டனர். இவர்கள் இரும்பு ஆயுதங்களை பயன்படுத்தினர். ஆனாலும், அவர்கள் மைசீனியர்களை சற்று சிரமப்பட்டே வென்றனர். மைசீனியர்களின் பிரதேசத்தை கைபற்றிய பின்பு டோரியர்கள் இருண்ட காலகட்டத்திற்குள் விழுந்தனர். வறுமையின் பிடியில் சிக்கினர்.

அவர்களுடைய முக்கிய திறமைகளான எழுதுவதும் படிப் பதும் மறைந்தது. இந்த இருண்ட காலகட்டம் 300 ஆண்டுகளுக்கு நீடித்தது. கி.மு. 750ல் ஐயோனியர்கள் என்ற புது இனத்தினர் வந்தனர். புதிய கலாச்சாரத்துடன் படிப்பையும், எழுத்தையும், ஓவியத்தையும் இந்த பிரதேசத்திற்குள் மீண்டும் அறிமுகம் செய்தனர்.

இந்த புதிய நாகரிக சகாப்தம் ஹெல் லனிக் காலகட்டம் என்று அழைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் கிரேக்கர்கள் சிறந்த சக்திவாய்ந்த நாகரிக சமூகத்தவராகவும், உலகின் சக்திவாய்ந்த நாகரிகத்தைச் சேர்ந்தவர்களாகவும் எழுச்சி பெற்றனர்.

Leave A Reply