இணைய மோசடியை தடுக்க உதவி எண்

Share

இணைய மோசடிகளால் பணம் பறிபோவதை தடுக்க மத்திய அரசு தேசிய அளவிலான உதவி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இணைய மோசடிகளில் பலர் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். பேங்கில் இருந்து பேசுகிறோம் என்று கூறி பணம் பறிப்பது, உங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது . முன்பணம் அனுப்ப வேண்டும் என்று பலர் பல விதங்களில் பேசி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் இணைய மோசடியில் பணத்தை இழக்காமல் இருக்க,கடந்த ஏப்ரல் 1-ந் தேதி ‘155260’ என்ற தேசிய உதவி எண்ணை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது .

அத்துடன் அதற்கான புகார் தளத்தையும் மத்திய அரசு தொடங்கியது. இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் மூலம் செயல்பட்டு வரும் இந்த புகார் தளம் மற்றும் உதவி எண் ரிசர்வ் வங்கி முதல் அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இணைய மோசடியால் பாதிக்கப்பட்டவர் இதில் புகார் அளிப்பதன் மூலம் பணத்தை இழக்காமல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

cyber

சட்ட அமலாக்க முகவர் மற்றும் வங்கிகள் மற்றும் நிதி இடைத்தரகர்களை ஒருங்கிணைப்பதற்காக குடிமகன்
சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு I4C ஆல் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது, சத்தீஸ்கர், டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் என 7 மாநிலங்களில் இந்த நடைமுறை அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் ரூ.1 கோடியே 85 லட்சம், இணைய மோசடியாளர்களிடம் சிக்காமல் கைப்பற்றப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Leave A Reply