சி.டி. ஸ்கேன் செய்யப்பட்ட 3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி

Share

எகிப்து நாட்டில் பழங்காலத்தில் இறந்தவர்களை மனித உருவில் பெட்டிகள் செய்து அதில் அவர்களின் உடல் மற்றும் ஆபரணங்களை சிலவற்றை வைத்து அடக்கம் செய்வது வழக்கம். மம்மிகள் ஆராய்ச்சியும் ஆச்சரியங்களும் தீராத வண்ணம் இருந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மம்மி சிடி ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டது.

3000 ஆண்டுகள் பழமையான எகிப்திய மம்மி

3000 ஆண்டுகள் பழமையான எகிப்திய மம்மி

சுமார் 3000 ஆண்டுகள் பழமையான எகிப்திய பாதிரியாரின் மம்மி சிடி ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டு ரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலிய மருத்துவமனை எகிப்து நவீன மருத்துவ தொழில்நுட்பத்தை சந்தித்தது. ரகசியங்களை கண்டறியும் ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக மம்மி இத்தாலிய மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் செய்யப்பட்டது. பண்டைய எகிப்திய பாதிரியாரான அங்கேகோன்சுவின் மம்மி பெர்கமோவின் சிவிக் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் இருந்து மிலனின் பாலிக்லினிகோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

மம்மி உடல் மூலம் வாழ்க்கைமுறை அறியலாம்

மம்மி உடல் மூலம் வாழ்க்கைமுறை மற்றும் 3000 ஆண்டுகளுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மம்மி நடைமுறையில் உயிரியல் அருங்காட்சியகம், டைமிங் கேப்ஸ்யூல் போன்றவை என மம்மி திட்ட ஆராய்ச்சி இயக்குனர் சபீனா மல்கோரா கூறினார். மம்மியின் பெயர் குறித்த தகவல்கள் கிமு 900 முதல் 800 வரை தேதியிட்ட சர்கோபகஸில் இருந்து வந்ததாக குறிப்பிட்டார். அங்கேகோன்சு என்பதன் பொருள் கோன்சு கடவுள் உயிருடன் இருக்கிறார் என்ற வாசகத்தை குறிக்கும்.

மேலும் எகிப்திய பாதிரியாரின் வாழ்க்கையையும் மரணத்தையும் புனரமைக்க முடியும் என்றும் உடலை மம்மியாக்க எந்த வகையான தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டன என்பதை புரிந்து கொள்ளமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

நவீன மருத்து ஆராய்ச்சி

நவீன மருத்து ஆராய்ச்சிக்கு பண்டைய நோய்கள் மற்றும் காயங்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியம். கடந்த கால புற்றுநோய், தமனி பெருங்குடல் அழற்சி குறித்து அறிந்து கொள்வது நவீன ஆராய்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என மல்கோரா குறிப்பிட்டார்.

2000 ஆண்டுகள் பழமையான மம்மி

2000 ஆண்டுகள் பழமையான மம்மி

முன்னதாக 2000 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்று தங்க நாக்குடன் கண்டுபிடிக்கப்பட்டது. மரணத்திற்கு பிற்பட்ட வாழ்க்கையில் பாதாள உலகத்தின் கடவுளான ஒசைரிஸை மம்மிகள் சந்திக்க நேர்ந்தால், அவர்கள் கடவுளிடம் பேசக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என அந்த தங்க நாக்கு பொருத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் உயிருடன் இருந்தபோது அந்த மம்மிக்கு பேச்சு ஆற்றல் இல்லையா என்பதும் நாக்கு ஏன் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக தெரியவில்லை.

10 ஆண்டுகளாக ஆராய்ச்சி பணி

டபோசிரிஸ் மேக்னா என்ற இடத்தில் சாண்டோ டுமிங்கோ பல்கலைக்கழத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுமார் 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள பழமையான கோட்டை ஒன்றில் ஏராளமான மம்மிகள் இருந்துள்ளது. அங்குதான் தங்க நாக்கு பொருத்தப்பட்டிருந்த மம்மிகள் கண்டெடுக்கப்பட்டது.

ஒசைரிஸ் மற்றும் ஐசிஸ் ஆகியோர்களுக்கு அர்பணிக்கப்பட்ட கோயில்கள் அங்கு உள்ளது. முன்னதாக அதே இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் கிளியோபாட்ரா VII-ன் முகம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கண்டெடுத்தனர். எனவே அதேகாலங்களில் இந்த கோயில்கள் பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

சுமார் 19 மம்மிகள் ஆராய்ச்சி

சுமார் 19 மம்மிகள் ஆராய்ச்சி

மம்மிகள் உள்ளிட்ட அடக்கங்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தையவையாகும். இதில் சில குறிப்பிடத்தக்க புதையலும் இருந்துள்ளது. மொத்தம் சுமார் 19 மம்மிகள் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரேவொரு மம்மியில் வாயில் மட்டும் தங்க நாக்கு இருந்துள்ளது. இந்த மம்மியின் மண்டைஓடு மற்றும் உடலின் பிற பகுதிகள் எந்தவித சேதமும் இல்லாமல் இருந்துள்ளது.

Leave A Reply