மீன்களின் இனப்பெருக்க புகைப்படத்துக்கு சர்வதேச விருது!

Share

மீன்களின் இனப்பெருக்க நடவடிக்கைகளை படம்பிடிப்பது ரொம்பவும் அரிது. ஆண்டுக்கு ஒருமுறைதான் இது நிகழும். தெற்கு பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவுக்கூட்டத்தை பிரஞ்ச் பாலினேசியா என்று அழைக்கிறார்கள். அதில் ஃபகாரவா தீவுக்கு அருகே இந்த நிகழ்வை ஒருவர் படம்பிடித்திருக்கிறார்.

அவருக்கே இந்த ஆண்டின் சிறந்த விலங்கு புகைப்படக்காரர் விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் பெயர் லாரெண்ட் பல்லெஸ்டா. பிரான்ஸைச் சேர்ந்த இவர், கடலுக்கு அடியிலும் வெளியிலும் விலங்குகள் பூச்சிகள் இனப்பெருக்கம் தொடர்பான போட்டோக்களை எடுப்பதில் தனித்துவம் பெற்றவர்.

இந்த ஆண்டுக்கான சிறந்த புகைப்படக்காரர் விருதுக்கு உலகம் முழுவதும் இருந்து 50 ஆயிரம் போட்டோக்கள் வந்திருந்தன. அதில், இரண்டு மீன் குழுக்கள் உடலுறவு கொள்ளும்போது வெளிப்பட்ட முட்டைகளும், விந்தணுவும் ஒரு மேகம்போல பரவியதை இவர் படம் பிடித்திருந்தார்.

கடந்த ஜூலை மாதம் பவுர்ணமி இரவில் இது நிகழ்ந்தது. இந்த காட்சியை படம்பிடிக்க இவர் 3 ஆயிரம் மணி நேரம் செலவிட்டிருக்கிறார். அதாவது 125 நாட்கள்.

Leave A Reply