சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம் – 14 – Fazil Freeman Ali

Share

போர்ச்சுக்கிசிய‌ர், ட‌ச்சுக்கார‌ர்க‌ளை தொட‌ர்ந்து இந்திய‌ ம‌ண்ணில் கால்ப‌திக்க‌ வ‌ந்த‌ ஐரோப்பிய‌ர்க‌ள், ஆங்கிலேய‌ர்க‌ள். இவ‌ர்க‌ளும் ப‌டை ப‌ட்டாள‌ங்க‌ளோடு வ‌ந்து போரிட்டு நேர‌டியாக‌ நாட்டை பிடித்துவிட‌வில்லை.

அப்ப‌டி வ‌ந்திருந்தால் ட‌ச்சுக்கார‌ர்க‌ளுக்கு திருவிதாங்கூரில் நேர்ந்த‌ க‌திதான் இவ‌ர்க‌ளுக்கும் ஏற்ப‌ட்டிருக்கும். வ‌ணிக‌ம் செய்ய‌ கிழ‌க்கிந்திய‌ க‌ம்பேனி என்ற‌ பெய‌ரில் 1608-ல் குஜ‌ராத்தின் சூர‌த் துறைமுக‌த்தில் ந‌ங்கூர‌மிட்டது முத‌ல் ஆங்கிலேய‌ க‌ப்ப‌ல்.

The East India Company (EIC) என்பது 1600-ம் ஆண்டில் “ஒரு பகுதி அரசுக்கும் ஒரு பகுதி பெருவணிகர்களுக்கும்” என்ற அடிப்படையில் (Joint Stock Company) உருவாக்கப்பட்ட தொழில் நிறுவனம். பெயர் கிழக்கிந்திய கம்பேனி என்றிருந்தாலும் இந்தியா கடந்து கீழை நாடுகள் அனைத்திலும் வணிகம் செய்யும் அனுமதியோடும் நோக்கத்தத்தோடும் உருவாக்கப்பது இந்த நிறுவனம். “வணிகமே நோக்கம்” என்று பெயரளவில் சொல்லப்பட்டாலும் உண்மையான நோக்க‌ம் அதுவ‌ல்ல‌.

ஏற்கனவே கடல்கடந்து த‌ம் சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கியிருந்த போர்ச்சுக்கீசிய, ஸ்பானிய‌, மற்றும் டச்சு காலணிகளை வென்று தன்வசப்படுத்துவதும் அவர்களின் கப்பல்களையும் சரக்குகளையும் சூறையாடுவதும்தான் பிர‌தான திட்ட‌ம். கேட்பதற்கு இது ஏதோ புதுக்கதைபோன்று தோன்றக்கூடும், இல்லையா..? உண்மையில் ஏற்க‌வே தென்ன‌மேரிக்காவில் இதே க‌தையை வெற்றிக‌ர‌மாக‌ அர‌ங்கேற்றி பெருத்த‌ செல்வ‌ம் ஈட்டிய‌வ‌ர்க‌ள்தான் இந்த‌ ஆங்கிலேய‌ர்க‌ள்.

இந்த உள்நோக்கத்தை புரிந்துகொள்ள இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச்சென்று இங்கிலாந்துக்கும் வாட்டிகனுக்கும் நடந்த (கத்தோலிக்க – ப்ராட்டஸ்டன்ட்) மத அரசியல் சண்டையை புரிந்துகொள்ள வேண்டும். இன்று இந்த‌ ச‌ம‌ய‌ச்ச‌ண்டையில் பிரிட்ட‌ன் மைய‌ப்புள்ளியாக‌ இருந்தாலும் கொஞ்சம் ஆழமாக ஆய்வு செய்தால் ப்ராட்டஸ்டன்ட் கருத்தியல் தோன்றியது இங்கிலாந்தில் அல்ல ஜெர்மனியில் என்று தெரியவரும்.

10 நவம்பர் 1483-ல் ஜெர்மனியின் ஐல்பென் நகரில் ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறந்து வ‌ள‌ர்ந்தார், பின்னாட்க‌ளில் துறவியாகவும், ஆசிரியராகவும், ச‌ம‌ய‌ப்புர‌ட்சியாள‌ராக‌வும் மாறிய‌ “மார்டின் லூதர்.”தந்தையின் விருப்பப்படி வழக்கறிஞர் கல்வியை முடித்தவர், தன்னுடைய தேடலாக இருந்த இறையியல் படித்து மத போதகர் ஆனார். பெற்றோரும் இதை ஆட்சேபிக்க‌வில்லை, கார‌ண‌ம் அன்றைய‌ சூழ‌லில் ம‌த‌போத‌க‌ர் என்ப‌து மிக‌வும் க‌வுர‌வ‌மான‌ தொழில், இவ‌ர்க‌ளுக்கு ச‌மூக‌த்தில் பெரும் ம‌ரியாதை இருந்த‌து.

அப்போதெல்லாம் கிருஸ்தவம் என்றாலே ரோமன் கத்தோலிக்கம்தான். மதக் கல்லூரியில் படிக்கும்போதே கத்தோலிக்க கருத்தியல்களை துணிச்ச‌லாக‌ கேள்வி கேட்ட மார்ட்டின், பாதிரியார் ஆன‌பின் ச‌ர்ச்சுக‌ளில் குறிப்பாக‌ வாட்டிகனில் புரையோடிப்போயிருந்த மூட‌ந‌ம்பிக்கை ம‌ற்றும் ஊழல்க‌ளைக் க‌ண்டு அதிர்ந்துபோனார். நிறுவ‌ன‌ம‌ய‌மாகியிருந்த‌ க‌த்தோலிக்க‌ ம‌த‌த்திற்கு எதிராகவும் போப் ஆண்டவர் என்ற பதவியின் கால‌டியில் குவிக்கப்பட்டிருந்த வானளாவிய அதிகாரத்துக்கு எதிராகவும் அவ‌ர் எழுப்பிய போர்க்குரல்தான் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம்.

மார்டின் லூதர் “இன்பங்களின் சக்தி” அல்லது “95 ஆய்வறிக்கைகள்” என்ற பெயரில் தன் சீர்திருத்த சித்தாந்தத்தை வெளியிட்டார். இந்த ஆவணம் பெரும் ச‌ர்ச்சையை கிள‌ப்பிய‌து. மார்டின் தன்னுடன் விவாதிக்க‌ மக்களையும் பாதிரியார்க‌ளையும் ப‌கிர‌ங்க‌மாக‌ அழைத்ததோடு த‌ன் ஆய்வ‌றிக்கைக‌ளை ச‌ர்ச் வாச‌லில் ஒட்டியும் வைத்தார்.

வெறும் இறை நம்பிக்கை மட்டும் மோட்சத்தை அடைய போதாது, நிறைய சடங்கு சம்பிரதாயங்கள் அதற்கு தேவை என்று போதித்த‌ கத்தோலிக்கத்துக்கு மாற்றாக ஆழமான உறுதியான‌ நம்பிக்கை மட்டுமே இரட்சிப்புக்கு வழிவகுக்கும் என்பது இவரின் மையக்கருத்தாக இருந்தது. “ந‌ம்பிக்கையை தேவ‌ன்மீது வை, ந‌ற்செய‌ல்க‌ளை உன் அண்டை அய‌லாருக்கு செய்” என்ப‌து மார்டின் லூத‌ரின் புக‌ழ்பெற்ற‌ வாச‌க‌ங்க‌ளுள் ஒன்று.

அதுபோல், ம‌க்க‌ளின் எல்லா பாவங்களையும் மன்னிக்கும் அதிகாரம் பாதிரிகளுக்கு, குறிப்பாக போப்பாண்டவருக்கு இருக்கிறது என்பதை மார்ட்டின் லூதர் மறுத்தார். இறைவனுக்கு மட்டுமே பாவங்களை மன்னிக்கும் ஆற்றலும் அதிகாரமும் இருக்க முடியும், எல்லா மனிதர்களும் பாவிகள் என்று வேதாக‌ம‌ம் சொல்லும்போது இந்த போப்புகளுக்கும் பாதிரிக‌ளுக்கும் யார் அதிலிருந்து விதிவிலக்கு அளித்தார்க‌ள்..? என்று எதிர்கேள்வி கேட்டார்.

இவரை ஒரு மானுட புரட்சியாளர் என்று முத்திரைகுத்த முடியாவிட்டாலும் ராமானுஜர் முதல் நாராயகுரு வரையிலான மதத்திற்குள்ளிருந்தே அந்த மத சாக்கடையின் அழுக்குகளை ஓரளவுக்கு களைய முயன்ற சீர்திருத்த‌வாதிக‌ள் வ‌ரிசையில் இவ‌ரை தாராள‌மாக‌ சேர்க்க‌லாம். காரணம், 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் கத்தோலிக்க சர்ச்சும் அதன் மத குருமார்களும் வாழ்ந்திருந்த வாழ்க்கை முறையும் சமுதாயத்தில் அவர்கள் பெற்றிருந்த அந்தஸ்தும் அதிகாரமும் அதே காலகட்டத்தில் இந்தியாவில் பார்ப்பனர்கள் அனுபவித்தவித்திருந்த சமூக உயரடுக்கு மேட்டிமைத்தன அதிகாரத்திற்கு சற்றும் குறைந்ததல்ல.

பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நல்ல கெட்ட நிகழ்வுகளுடனும் ஒரு மதச்சடங்கு பின்னிப்பிணையப்பட்டு, அதை தலைமைதாங்கி நடத்த ஒரு கத்தோலிக்க பாதிரி க‌ட்டாய‌ம் தேவைப்பட்டார். அவருடைய வார்த்தைகள் தேவவாக்காக கருதப்பட்டது. அவருக்கு எதிராக சுண்டுவிரல் உயர்த்துவதுகூட தெய்வதோஷமாக நம்பப்பட்டது. ம‌க்க‌ளின் எல்லா பாவங்களையும் மன்னிக்கும் அதிகாரம் அவர்க‌ளிடம் இருந்தது.

பைபிள் சாமானிய‌ ம‌க்க‌ள் ப‌டிக்கும் வேத‌மாக‌ இருக்க‌வில்லை. புனித‌மான‌ மொழி என்று ந‌ம்ப‌ப்ப‌ட்ட‌ ல‌த்தீனில் ம‌ட்டுமே அப்போது பைபிள் இருந்த‌து, அது வெகுஜ‌ன‌ங்க‌ளுக்கு தெரியாத‌ மொழி. மொழிபெய‌ர்ப்புக‌ளுக்கு போப் த‌டை விதித்திருந்தார் ஆகவே பைபிள் என்ற‌ கிருஸ்த‌வ‌ர்க‌ளின் புனித‌நூல் பாதிரியார்க‌ள் ல‌த்தீனில் வாசித்து உள்ளூர் மொழியில் ம‌க்க‌ளுக்கு விள‌க்கிச்சொல்ல‌ப்ப‌ட‌க்கூடிய‌ வேத‌மாக‌வே இருந்த‌து. இதை எதிர்த்து ஜெர்மானிய‌ மொழியில், அதுவும் ம‌க்க‌ளுக்கு எளிதில் புரியும்ப‌டி இல‌குவாக‌ மொழிபெய‌ர்த்தார் மார்டின் லூத‌ர்.

இதனைத்திற்கும் உச்சமாக, மரணித்தபின் சுவர்க்கத்திற்கும் செல்லாமல் நரகத்திலும் வீழாமல் திரிசங்கு நிலையில் (purgatory) இருக்கும் ஆத்மாக்களுக்கு விரைவில் சுவர்க்கம் செல்லும் கடவுச்சீட்டாக (Indulgence) “பாவ‌ சுத்திக‌ரிப்பு” என்ற நம்பிக்கை க‌த்தோலிக்க‌த்தில் கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்த பாவ‌ சுத்திக‌ரிப்பை பணம் கொடுத்து ஒரு கத்தோலிக்க மதகுருவிடமிருந்து நீங்க‌ள் வாங்க முடியும்.

நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்றார்போல் ஒரு சான்றிதழ் தருவார்கள். இதை உங்க‌ள் ம‌ர‌ண‌த்துக்குப் பின்னான‌ வாழ்க்கைக்கும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். இற‌ந்துவிட்ட‌ உங்க‌ள் உற‌வுக‌ளுக்கும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். இந்த வியாபார‌ம் மூலம் பெருத்த லாபம் சம்பாதித்தன சர்ச்சுகள். இந்த லாபத்தின் ஒரு ப‌குதி வாட்டிகனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. “இது மோசடிச்செயல், போப்பின் அனுமதியோடும் ஆசீர்வாதத்தோடும் நடக்கும் பகல்கொள்ளை” என்று சாடினார் மார்டின் லூதர்.

இவர் கத்தோலிக்க மதத்திலிருந்து வெளியேற்றப்பட்டது, இவரை யார் வேண்டுமானாலும் சிறைப்பிடிக்கலாம், கொல்லலாம் என்று போப் உத்தவிட்டது, அதை எல்லாம் கடந்து உள்ளூர் மன்னர்களின் உதவியோடு தன் புரட்சிகர சமயத்தை கிருஸ்தவத்தின் தூய்மைப்படுத்தப்பட்ட பகுதியாய் இவர் நிறுவியது எல்லாம் பெரிய த‌னிக்கதை.

இப்படிப்பட்ட புரட்சிகரமான கருத்தியல், இறையியல் கேள்விகள் எதுவும் இங்கிலாந்து ப்ராட்டஸ்டன்ட் நாடானதற்கு காரணம் கிடையாது. இது ஒரு சாதாரண இரண்டு வரியில் சொல்லக்கூடிய‌ கதை…

இங்கிலாந்து அரசன் ஹென்ரி VIII தன் மனைவி கேத்தரினை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு இளம் பெண்ணை மணக்க அனுமதி கேட்டபோது போப் க்ளமன்ட் VII முடியாது என்று மறுக்க, “போய்யா, நீயுமாச்சு உன் கத்தோலிக்க மதமுமாச்சு..” என்று அதிலிருந்து வெளியேறி ப்ராட்டஸ்டன்ட் ந‌ம்பிக்கையை ஏற்று அதன்பின் 6 முறை திரும்ணம் முடித்தவர்தான் இங்கிலாந்தை ப்ராட்ட்ஸ்டன்ட் நாடாக்கிய மன்னர் ஹென்ரி.

ஹென்ரிக்கு க‌ருத்திய‌ல் பிடிமான‌ங்க‌ளெதுவுவும் இல்லை என்றாலும் அவ‌ர் ம‌க‌ன் இதை கொஞ்ச‌ம் சீரிய‌ஸாக‌வே எடுத்துக்கொண்டார். ஆங்க்லிக‌ன் ப்ராட்ட‌ஸ்ட‌ன்ட் (Anglican Protestant Church) ம‌த‌த்தை த‌குந்த‌ உள்க‌ட்ட‌மைப்போடு நிறுவி வாட்டிக‌னின் போப்புக்கு இணையாக‌ கேன்ட‌ர்பெரி ஆர்ச் பிஷ‌ப் ப‌த‌வியை உருவாக்கி ப்ராட்ட‌ஸ்ட‌ன்ட் ம‌த‌த்தை ராஜாங்க‌ ம‌த‌மாக‌ அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கும் ஐரோப்பாவுக்கும் நீறுபூத்த நெருப்பாய் தொடர்ந்து கனன்றுகொண்டிருந்த நெருப்பு, பெரிதாக வெடித்துக்கிளம்பியது இந்த காலணியாதிக்க போரில்தான். இன்று ப்ராட்டஸ்டன்டுகளின் எண்ணிக்கை ஐரோப்பாவில் கணிசமான அளவுக்கு இருந்தாலும் அன்று ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தை கடந்து அது ஒரு கெட்ட வார்த்தை. ப‌ர‌ஸ்ப‌ர‌ம் விரோத‌த்தோடும் வெறுப்போடும் ஒருவ‌ரையொருவ‌ர் பார்த்துக்கொண்டிருந்த‌ கால‌க‌ட்ட‌ம் அது.

ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ ந‌ட‌ந்துகொண்டிருந்த‌ சிலுவைப்போரில் இஸ்லாமிய‌ர்க‌ளிட‌ம் போரில் தோற்றிருந்தாலும், த‌ம் ம‌த‌த்தை ஐரோப்பா க‌ட‌ந்து ம‌த்திய‌ கிழ‌க்கிலும் மேற்கு ஆப்பிரிக்காவிலும் ப‌ர‌ப்பியிருந்த ஐரோப்பிய‌ அதிகார‌ வ‌ர்க்க‌த்திற்கு ஒரு புதிய‌ போர் தேவைப்ப‌ட்ட‌து.

கால‌ம் உருட்டிய‌ அந்த‌ ப‌க‌டையில் காட்சியாய் விரிந்த‌து 17-ம் நூற்றாண்டின் இந்தியா….

சும்மா கிடைத்ததா சுதந்திரம்? – 15 – Fazil Freeman Ali

Leave A Reply