சும்மா கிடைத்ததா சுத‌ந்திர‌ம் – 16 – Fazil Freeman Ali

Share

ப்ளைம‌த்திலிருந்து (Plymouth) ஆங்கில‌ ப‌டைக‌ளை வ‌ழிந‌ட‌த்திய‌ ஃப்ரான்சிஸ் ட்ரேக் (Francis Drake), ஸ்பேனிஷ் ஆர்ம‌டாவின் ப‌ல‌த்தை ஒற்ற‌ர்க‌ள் மூல‌ம் மிக‌ ந‌ன்றாக‌வே அறிந்திருந்தார். என‌வே நேர‌டி தாக்குத‌ல்க‌ளை கூடுமான‌வ‌ரை த‌விர்ப்ப‌து என்ப‌தை முன்கூட்டியே முடிவெடுத்துவிட்டார்.

இந்த‌ ட்ரேக் ஏற்க‌ன‌வே ப‌ல‌முறை தென் அமேரிக்க‌ நாடுக‌ளில் இருந்து செல்வ‌த்தை ஏற்றிவ‌ரும் ஐரோப்பிய‌ க‌ப்ப‌ல்க‌ளை அட்லான்டிக் ச‌முத்திர‌த்தில் வ‌ழிம‌றித்து சூறையாடிய‌வ‌ர். ஆங்கிலேய‌ர்க‌ளால் ஹீரோவாக‌வும் ஐரோப்பிய‌ர்க‌ளால் க‌ட‌ற்கொள்ள‌ய‌னாக‌வும் பார்க்க‌ப்ப‌டுப‌ட்ட‌வ‌ர்.

லிஸ்ப‌னிலிருந்து கிள‌ம்பிய‌ ஸ்பேனிஷ் ஆர்ம‌டா ஸ்பெய்னின் க‌டிஸ் துறைமுக‌த்தில் (Spanish port of Cadiz) ஓய்வெடுத்து. இங்குதான் நெத‌ர்லாந்திலிருந்து மேல‌திக‌ க‌த்தோலிக்க‌ ப‌டைக‌ள் இவ‌ர்க‌ளோடு கைகோர்த்து இங்கிலாந்தை நோக்கி ஒன்றாக‌ கிள‌ம்புதாக‌ திட்ட‌மிட‌ப்ப‌ட்டிருந்த‌து. அதேவேளை ப‌டைகளுக்கு தேவையான‌ வெடிபொருட்க‌ள், துப்பாக்கிக‌ள், வீர‌ர்க‌ளுக்கான‌ உண‌வு என்று சேமிப்பு ப‌ணியில் ஸ்பானிய‌ ப‌டைக‌ள் ஈடுப‌ட்டுக்கொண்டிருந்த‌ன‌ர்.

ஏற்க‌ன‌வே முகாமிட்டிருக்கும் ஸ்பேனிய‌ ப‌டையின் ப‌ல‌மே அள‌ப்பெரிய‌து. கூட‌வே ட‌ச்சுப்ப‌டைக‌ளும் சேர்ந்துவிட்டால் இவ‌ர்க‌ளை எதிர்த்து போரிடுவ‌தென்ப‌து இய‌லாத‌ காரிய‌ம். ஏற்க‌ன‌வே ப‌ல‌ போர்சுக்கீசிய‌, ட‌ச்சு, ஸ்பானிய‌ வ‌ணிக‌க் க‌ப்ப‌ல்க‌ளை எளிதில் எதிர்கொண்டு வீழ்த்திய‌துபோல் இம்முறை செய்ய‌முடியாது. கார‌ண‌ம் இவ‌ர்க‌ள் ந‌ன்கு ப‌யிற்சிபெற்ற‌ போர் வீர‌ர்க‌ள். விரைவாக‌ முடிவெடுத்தாகவேண்டும், என்ன‌ செய்வ‌தென்று யோசித்த‌ ட்ரெக், ஒரு புதுயுக்தியை கையாண்டார்.

க‌திர‌வ‌ன் சாய்ந்து இர‌வு துவ‌ங்கும் பொழுதில், காற்றின் திசை க‌டிஸ் துறைமுக‌ம் நோக்கி வேக‌மாக‌ வீசும் நேர‌த்தில், பெரிய‌ பாய்ம‌ர‌ங்க‌ள் கொண்ட‌ 8 ம‌ர‌க்க‌ல‌ங்க‌ளுக்கு நெருப்புமூட்டி அந்த‌ ம‌ர‌க்க‌ல‌ங்க‌ளை ஸ்பானிஷ் ஆர்ம‌டா நோக்கி செலுத்திவிட்டார் ட்ரேக்.

திடீரென்று நெருப்பு கொழுந்துவிட்டெரியும் சில‌ சிறு க‌ப்ப‌ல்க‌ள் க‌டிஸ் துறைமுக‌ம் நோக்கி வ‌ருவ‌தை குழ‌ப்ப‌த்தோடு பார்த்த‌ன‌ர் ஸ்பானிய‌ர்க‌ள். இது க‌ட‌ற்கொள்ளைய‌ர்க‌ளின் செய‌லா, விப‌த்தா..? என்ற குழ‌ப்ப‌த்தோடு என்ன‌செய்வ‌தென்று தெரியாம‌ல் முழித்துக்கொண்டு நிற்கும்போதே காற்றின் வேக‌த்தால் உந்த‌ப்ப‌ட்ட‌ ஆங்கிலேய‌ க‌ப்ப‌ல்க‌ள் ஸ்பெய்னின் க‌ப்ப‌ல்க‌ள்மீது முட்டிமோதிச் சித‌றின‌. நெருப்பின் தீச்சுவாலைக‌ள் ஒரு க‌ப்ப‌லிலிருந்து அடுத்த‌ க‌ப்ப‌லுக்கு ப‌ர‌வ‌, வெடிபொருட்க‌ள் தேக்கி வைக்க‌ப்பட்டிருந்த‌ க‌ப்ப‌ல்க‌ள் பெரும் ச‌ப்த‌த்துட‌ன் எரிம‌லைபோல் வெடிக்க‌… எங்கும் ம‌னித‌க்கூக்குர‌ல்க‌ள், ம‌ர‌ண‌ ஓல‌ங்க‌ள். ப‌ற்றி எரியும் உட‌லோடு ப‌ல‌ போர்வீர‌ர்க‌ள் க‌ட‌லுக்குள் குதித்த‌ன‌ர் உயிரை காப்பாற்ற‌.

ச‌ற்றுமுன்புவ‌ரை நிலவொளியில் அழ‌கான‌ சிற்ப‌ம் போலிருந்த‌ க‌டிஸ் க‌ட‌ற்க‌ரை, எரிந்து க‌ட‌லில் மூழ்கும் க‌ப்ப‌ல்க‌ள், விண்ணைமுட்டும் புகைமூட்ட‌ம், ஆங்காங்கே வெடிச்சத்தம் என்று கோர‌மான‌ போர்க்க‌ள‌ காட்சிக‌ள் நிறைந்ததாக‌ மாறிப்போன‌து. இய‌ற்கை வ‌ரைந்த‌ வ‌ண்ண‌ ஓவிய‌ம் போன்றிருந்த‌ துறைமுக‌ம், நெருப்பாலும் இர‌த்த‌த்தாலும் தீட்ட‌ப்ப‌ட்ட குரூர‌ ப‌ய‌ங்க‌ர‌ ஓவிய‌மாக‌ மாறிப்போன‌து.

இந்த‌ புகைமூட்ட‌த்தை கேட‌ய‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி அத‌ன் பின்னாலிருந்து துப்பாக்கிக‌ளால் சுட்டுத்தாக்கிய‌ப‌டி முன்னேறிய‌ ட்ரேக்கின் ஆங்கில‌ப்ப‌டை, சித‌றி ஓடிய‌ க‌ட‌லில் நீந்திக்கொண்டிருந்த‌ மேலும் ப‌ல‌ ஸ்பானிய‌ வீர‌ர்க‌ளை காக்கை குருவியைப்போல் கொன்று குவித்த‌து. க‌ட‌லில் பிண‌ங்க‌ள் மித‌ந்த‌ன‌, க‌ட‌ற்க‌ரையிலோ பிண‌ங்க‌ள் குவிந்த‌ன‌.

இன்னும் இங்கிலாந்தின் க‌ட‌ல்ப‌குதிக்குள்ளேயே நாம் நுழைய‌வில்லை, அத‌ற்குள்ளேயே இவ்வ‌ள‌வு இழ‌ப்பா என்று க‌திக‌ல‌ங்கிப்போனார் ஸ்பேனிஷ் ப‌டையின் த‌ள‌ப‌தி அலோன்சோ (Alonso de Guzmán y Sotomayor)

சில‌ ம‌ணி நேர‌த்தில் 18-க்கும் அதிக‌மான‌ போர்க்க‌ப்ப‌ல்க‌ள் எரிந்து சாம்ப‌லாக‌, 10,000 ட‌ன் வெடிபொருட்க‌ள் த‌ம் ப‌டையின‌ர்மீதே வெடித்துச்சித‌ற‌, மேலும் 15,000 ட‌ன் வெடிபொருட்க‌ள் க‌ட‌லில் க‌ரைந்து வீணாக‌, சில‌ நூறு வீர‌ர்க‌ளின் ம‌ர‌ண‌ம், ப‌ல‌ நூறு வீர‌ர்க‌ளின் ப‌டுகாய‌ம் என்று ப‌ரித‌வித்து நின்ற‌து ஸ்பானிஷ் ப‌டை.

அட‌டா… திக்குமுக்காடி நிற்கும் எதிரியை தொட‌ர்ந்து தாக்கி அழிக்க‌ போதுமான‌ ப‌டைப‌ல‌மோ ஆயுத‌மோ இல்லையே, என்ன‌ செய்ய‌லாம்..? என்று ட்ரேக் கைக‌ளை பிசைந்த‌ப‌டி யோசித்துக் கொண்டிருக்கையில் மேலும் ப‌ல‌ ஆங்கிலேய‌ போர்க்க‌ப்ப‌ல்க‌ள் த‌ன்னை நோக்கி வ‌ருவ‌தை க‌ண்டார்.

அது சார்ல‌ஸ் ஹார்வ‌ர்ட் (Charles Howard) த‌லைமையில் எலிச‌ப‌த் ராணி அனுப்பியிருந்த‌ இன்னொரு ப‌டை. இப்ப‌டியொரு ப‌டை உத‌விக்கு வ‌ருவ‌தே ட்ரேக்கிற்கு தெரியாது. சார்ல‌ஸ் த‌லைமையேற்றிருந்த‌ க‌ப்ப‌ல்க‌ளில் நீண்ட‌தூர‌ தாக்குத‌ல் ந‌ட‌த்தும் பீர‌ங்கிக‌ள் இருந்த‌ன‌.

ட்ரேக்கும் சார்ல‌ஸும் இணைந்து தொடுத்த‌ அடுத்த‌க‌ட்ட‌ தாக்குத‌லில் முழுக்க‌ நிலைகுலைந்து சின்னாபின்ன‌மாகிப்போன‌து ஸ்பேனிஷ் ஆர்ம‌டா என்ற‌, யாராலும் வெல்ல‌முடியாது என்று பிலிப் ந‌ம்பியிருந்த‌ பிர‌ம்மாண்ட‌ க‌த்தோலிக்க‌ போர்ப்ப‌டை.

நொண்டிக்குதிரையாய் அவ‌ர்க‌ள் விர‌க்தியோடு ஸ்பெய்னுக்கு திரும்பிய‌போது ஏற‌க்குறைய‌ ச‌ரிபாதி க‌ப்ப‌ல்க‌ள் அழிந்துவிட்டிருந்த‌ன‌. 62 க‌ப்ப‌ல்க‌ள் முழுக்க‌ எரிந்து சாம்ப‌லாகிப்போன‌தாக‌வும் சுமார் 25 க‌ப்ப‌ல்க‌ள் ப‌ல‌த்த‌ சேத‌த்திற்கு உள்ளான‌தாக‌வும் போர்க்குறிப்புக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌. சுமார் 6,200 போர்வீர‌ர்க‌ள் இற‌ந்துவிட்டிருந்த‌ன‌ர், 10,000-த்துக்கும் அதிக‌மானோர் ப‌டுகாய‌ம‌டைந்திருந்த‌ன‌ர். போர் வீர‌ர்க‌ளின் ம‌னோப‌ல‌ம் த‌ரைம‌ட்ட‌மாகியிருந்த‌து.

ஒருவேளை இந்த‌ப்போரில் இங்கிலாந்து தோற்றிருந்தால்…, ப்ராட்ட‌ஸ்ட‌ன்ட் என்ற‌ ச‌ம‌ய‌மோ ச‌ர்ச் ஆஃப் இங்கிலாந்தோ ஸ்தாபிக்க‌ப்ப‌ட்டிருக்காது, பிற்கால‌த்தில் பிரிட்டிஷ் ராஜ் என்ற‌ நாடும் உருவாகியிருக்காது.

இந்த‌ போரில் வென்ற‌த‌ன் மூல‌ம் இங்கிலாந்து யாராலும் அசைக்க‌முடியாத‌ ச‌க்தியாக‌ ஐரோப்பாவில் த‌ன்னை நிலைப்ப‌டுத்திக்கொண்ட‌து. மேலும் இந்த‌ போரில் முத‌லாம் எலிச‌பெத் காட்டிய‌ துணிச்ச‌லும், க‌டைபிடித்த‌ போர் த‌ந்திர‌ங்க‌ளும் அவ‌ருக்கு இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் மிகுந்த‌ செல்வாக்கை பெற்றுத்த‌ந்த‌து. அச்ச‌த்தோடும் ம‌ரியாதையோடும் பார்க்க‌ப்ப‌டும் ம‌காராணியாக‌ உய‌ர்ந்து நின்றார் எலிச‌பெத். The Warrior Queen என்றே அவ‌ர் ச‌ம‌கால‌ ம‌ன்ன‌ர்க‌ளால் அழைக்க‌ப்ப‌ட்டார் என்கிறார் வ‌ர‌லாற்றாசிரிய‌ர் ராப‌ர்ட் ஹ‌ச்சின்ச‌ன் (Prof. Robert Hutchinson)

இத‌ற்குப்பின்ன‌ரும் இருமுறை இங்கிலாந்தை வீழ்த்த‌ ப‌டைய‌னுப்பி தேல்விய‌டைந்தார் ம‌ன்ன‌ர் பிலிப்.

இர‌ண்டாவ‌து போரின்போது, போர் க‌வ‌ச‌ங்க‌ள் அணிந்து குதிரை மீத‌ம‌ர்ந்து எலிச‌பெத் ராணி எஸ்ஸெக்ஸ் (Essex) மாகாண‌த்தின் டில்பெரி ந‌க‌ரில் (Tilbury) ஆற்றிய‌ உரை இன்ற‌ள‌வும் ஆங்கிலேய‌ வ‌ர‌லாற்றாய்வ‌ள‌ர்க‌ளால் பெருதும் சிலாகித்து போற்ற‌ப்ப‌டுகிற‌து. அந்த‌ டில்பெரி கோட்டையும் ஆங்கிலேய‌ வ‌ர‌லாற்றில் இன்றும் முக்கிய‌ இட‌த்தை பிடித்திருக்கிற‌து. அது ஒரு நெடிய‌ உரை, அத‌ன் ஒரு ப‌குதியை ம‌ட்டும் த‌ருகிறேன், பாருங்க‌ள்…

“நான் ஒரு பெண்ணாக‌ இருக்க‌லாம், அத‌னால் என் உட‌ல் கொஞ்ச‌ம் ப‌ல‌கீன‌மான‌தாக‌க்கூட‌ இருக்க‌லாம். ஆனால் என் இத‌ய‌ம் சிங்க‌த்தையொத்த‌து, ஒரு அர‌ச‌னிட‌ம் நீங்க‌ள் எதிர்பார்க்கும் வீர‌த்தையும் விவேக‌த்தையும் அதைவிட‌வும் அதிக‌மாக‌வே என்னிட‌ம் காண்பீர்க‌ள். இந்த‌ ம‌ண்ணையும் ம‌க்க‌ளையும் பாதுகாப்ப‌து என் முழுமுத‌ற் க‌ட‌மை. எதிரியை ந‌ம் ம‌ண்ணில் காலூன்ற‌க்கூட‌ விடாம‌ல் க‌ட‌லிலேயே வீழ்த்துவோம், ந‌ம் மீன்க‌ளுக்கு அவ‌ர்க‌ளை உண‌வாக்குவோம். ஒருவேளை அவ‌ர்க‌ள் வென்றால் ந‌ம் ம‌ண்ணில் அவ‌ர்க‌ள் வைக்கும் முத‌ல் கால‌டி ந‌ம் பிண‌ங்க‌ளின் மீதாக‌வே இருக்கட்டும்..”

இந்த‌ எலிச‌பெத் தான் ஆங்கிலேய‌ கிழ‌க்கிந்திய‌ க‌ம்பேனியின் (EIC) உருவாக்க‌த்துக்கு இசைவ‌ளித்தும் ஆத‌ரித்தும் குஜ‌ராத்தின் சூர‌த்தில் வ‌ந்திற‌ங்கிய‌ முத‌ல் வ‌ணிக‌ க‌ப்ப‌ல்க‌ளை இந்தியாவுக்கு அனுப்பி வைத்த‌வ‌ர்.

உல‌கின் முத‌ல் சூரிய‌ன் அஸ்த‌மிக்கா சாம்ராஜ்ஜிய‌த்தை உருவாக்கும் எல்லா குணாதிச‌ய‌ங்க‌ளையும் இங்கிலாந்துக்கு கால‌ம் ஒருங்கே அமைத்துக்கொடுத்த‌து…

Leave A Reply